Tamil Thoughts Motivation For Students - செயல்தூண்டுதல் | Tamil Thoughts

Tamil Thoughts Motivation For Students – செயல்தூண்டுதல்


Tamil Thoughts Motivation For Students – செயல்தூண்டுதல்

Tamil Thoughts Motivation For Students : 

செயல்தூண்டுதல் என்பது நெருப்பு போன்றது. அதற்கு மேலும் மேலும் எரிபொருளை அளிக்காவிட்டால் அது அணைந்து விடும். எந்தவொரு பயிற்சியும், உணவும் எவ்வாறு நீண்ட நாள் நீடித்து நிற்காதோ, அது போன்றே செயல்தூண்டுதலும் நெடுநாள் நீடித்து நிற்காது.

  • செயல்தூண்டுதல் என்பது செயல்களை (Actions) அல்லது உணர்வுகளை (Emotions) ஊக்குவிக்கின்ற ஒன்றாகும். செயல்தூண்டுதல் சக்திவாய்ந்தது. இது உங்களை செயலில் ஈடுபடுவதற்காக இணங்க வைக்கும்; ஏற்றுக் கொள்ள வைக்கும்; முன்னோக்கி நடத்தும்.
  • அதாவது, செயல்தூண்டுதலைச் செயலுக்கான தூண்டுதல் என்று விளக்கலாம். இது கிட்டத்தட்ட உங்களது வாழ்வையே மாற்றிவிடும் ஒரு சக்தியாகும்.

  • உந்துசக்தி அதிகரித்தல் (Motivation Goes Up): இறையாகப் போகும் மிருகம் தன்னை உண்ணவரும் விலங்கை விட வேகமாக ஓடி தப்பித்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம்; இங்கே, ஒன்று தன்னுடைய உணவிற்காகப் பாய்கிறது. மற்றொன்றோ தன்னுடைய உயிருக்காகப் பாய்கிறது.
  • பயம் உந்துதல் (Fear Motivation): ஒரு பணியாளரிடம் ஒரு வாடிக்கையாளர் “இங்கே நீங்கள் எப்பொழுதில் இருந்து நன்றாக வேலை செய்ய ஆரம்பித்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர், “என்னை அவர்கள் வெளியேற்றுவதாக பயமுறுத்திய நாளிலிருந்து” என்று பதிலளித்தார்.
  • ஊக்கம் சார்ந்த செயல்தூண்டுதல் (Incentive Motivation): ஊக்குவிப்பு பலமாக இருக்கும் வரை, இது மிகவும் நன்றாகவே வேலை செய்யும். ஒரு கழுதை இருக்கிறது. அதற்கு முன்னால் ஒரு கேரட் ஆடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கழுதைக்கு பின்னால் ஒரு வண்டியும் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். கழுதைக்கு பசி இருக்கும் வரை, இந்த ஊக்குவிப்பு செயல்தூண்டுதல் வேலை செய்யும். அவ்வப்போது கேரட்டைக் கழுதை கடிக்கும் படி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது சோர்வடைந்து விடும். கழுதை கேரட்டைக் கடித்தவுடனே, அதன் வயிறு நிரம்பிவிடும். அது மீண்டும் வண்டியைய் உற்சாகமாக இழுக்கும்.Metaphor called – “Carrot and Stick Culture”.

இதை அப்படியே நமது வியபாரச் சூழலிலும் நாம் பார்க்கலாம். தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டியதும், விற்பனை பிரதிநிதிகள் வேலை செய்வதை நிறுத்திவிடுவார்கள். ஏனென்றால் அவர்களது செயல்தூண்டுதல் அந்த அளவிற்குத்தான் வேலை செய்கிறது. இது வெளிப்புறமானது; உள்ளார்ந்தது இல்லை.

பிற கட்டுரைகள்:

பிற காணொளிகள்:

Tamil Thoughts Self-Motivation: 

இந்த தினம் ஒரு தகவல் – சுயஉந்துதல் செயல்தூண்டுதல் பற்றிய தங்களது கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *