Tamil Thoughts Motivation - உள்நோக்கம் | Tamil Thoughts

Tamil Thoughts Motivation – உள்நோக்கம்


Tamil Thoughts Motivation – தினம் ஒரு தகவல் உள்நோக்கம்

Tamil Thoughts Motivation – உள்நோக்கம்: 

ஒரே குடும்பத்தில் பிறந்த இரு சகோதரர்கள்.

  • ஒருவர் போதைக்கும், மதுவுக்கும் அடிமையானவர். தனது குடும்பத்தினரை அடிக்கடி அடித்து துன்புறுத்தும் குடிகாரர்.
  • மற்றவர் ஒரு வெற்றிகரமான வியபாரி; சமுதாயத்தால் பொிதும் மதிக்கப்படுபவர். அவருக்கும் ஒரு அற்புதமான குடும்பம் இருந்தது.

ஒரு தாய் வயிற்றில் பிறந்து, ஒரே சூழலில் வளர்க்கப்பட்டிருந்தாலும், இவர்கள் எப்படி இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிய சிலர் விரும்பினார்கள்.

முதல் சகோதரனை இவ்வாறு கேள்வி கேட்டனர்; எப்படி நீங்கள் மனம் போனபடியெல்லாம் கண்டபடி செய்கிறீர்கள்? நீங்கள் போதைக்கு அடிமையாகி, உங்களது குடும்பத்தினரை அடிக்கிறீர்களே, எது உங்களை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது? என்று கேள்வி கேட்டனர்.

அவரது பதில் “என்னுடைய தந்தை என்பதாகும்”. “உங்கள் தந்தை எப்படிப்பட்டவர்?” என்று கேள்வி கேட்டனர். “எனது தந்தை போதைக்கு அடிமையானவர், குடிகாரர். தனது குடும்பத்தினரை அடிப்பார். பின், நான் எப்படி இருப்பேன் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அது தான் நான் அப்படியே இருக்கிறேன்” என்று அவரிடமிருந்து பதில் வந்தது.

பின்னர் அவர்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்யும் அவரது சகோதரனிடம், அதே கேள்வியைக் கேட்டனர். “நீங்கள் எல்லவற்றையும் சரியாகச் செய்கிறீர்கள், உங்களுக்குத் தூண்டுதலாக இருப்பது எது?” அவர் என்ன சொல்லி இருப்பார் என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா?. என்னுடைய தந்தை நான் சிறுவனாக இருந்த போது நன்றாக குடித்துவிட்டு வந்து, எல்லாத் தவறுகளையும் செய்வதைப் பார்த்திருக்கிறேன். எனவே நான் ஒருபொழுதும் அவ்வாறு இருக்கவே கூடாது என்று மனதினுள் சபதமேற்றுக் கொண்டேன்” என்பதை அவரது பதிலாகும்.

இருவருமே ஒரே மூலத்திலிருந்தே அவரவருக்கு வேண்டிய பலத்தையும் செயல் தூண்டுதலையும் வரவழைத்துக் கொண்டனர்.

ஆனால்,

  • ஒருவர் அதை நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
  • மற்றவரோ, எதிர்மறையாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

கதையின் கருத்து: “எதிர்றைத் தூண்டுதல் (Negative Inspiration) சுலபமான வழியைப் பின்பற்றும். ஆசையைத் தரும். பின்னர் அதுவே கடினமாக வழிக்கு கொண்டு சென்றுவிடும்”

பிற கட்டுரைகள்:

பிற காணொளிகள்:

Tamil Thoughts Motivation:

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *