Tamil Thoughts About Parents - Discipline கட்டுப்பாடு | Tamil Thoughts

Tamil Thoughts About Parents – Discipline கட்டுப்பாடு


Tamil Thoughts About Parents – Discipline கட்டுப்பாடு

Tamil Thoughts About Parents: 

கட்டுப்பாடு என்பது அன்போடு கூடிய உறுதிப்பாட்டைக் குறிக்கும். இது ஒரு வழிகாட்டியாகும்.

  • ஒரு பிரச்சனை வரும் முன்பாகத் தடுப்பதாகும்.
  • பொிய செயற்பாட்டிற்காகச் சக்தியை ஒரு வழிப்படுத்துவதாகும்.

கட்டுப்பாடு என்பது நீங்கள் யார் மீது அக்கறை கொண்டிருக்கிறீர்களோ, அவர்களுக்குப் போடும் தடையல்ல; மாறாக அவர்களின் நன்மைக்காகச் செய்வதாகும்.

கட்டுப்பாடு (Discipline) என்பது அன்பின் செயலாகும்.

  • சில சமயங்களில் குழந்தைகளிடம் அன்பாக இருப்பதற்காக, நீங்கள் அன்பில்லாமல் இருக்க வேண்டும்.
  • எல்லா மருந்துகளும் இனிப்பானவை இல்லை;
  • எல்லா அறுவை சிகிச்சையும் வலியில்லாதது இல்லை;

ஆனால் நாம் அதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

Thoughts About Youths:

உதாரணமாக, இன்றைய இளைஞர்கள் மிகவும் அதிகமாக பயன்படுத்தக் கூடிய கடன் அட்டை (Credit Card) தமது கட்டுப்பாடின்மையே குறிக்கிறது. இதனை இவ்வாறு சொல்லலாம் நண்பர்களே! நான் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அவற்றில் எனது மாத செலவு மற்றும் சேமிப்பு ஆகியவை அடங்க இந்த 10,000 ரூபாய் இந்த மாத கணக்கில் முடிந்து விட்டது. இருந்தபோதிலும் இணையதல அங்காடி (Online Store / Online eCommerce) வர்த்தகர்கள் விற்பனை நோக்கத்தோடு கொடுக்கும் 50% மற்றும் 70% சலுகைக்காக கடன் அட்டை (Credit Card) வழியாக  நாம் அந்த பொருளை பெறுகிறோம். இது நமது கட்டுப்பாடின்மையைய் குறிக்கிறது.

Thoughts About Parents:

மற்றும் ஓர் உதாரணம்: இன்றைய சூழ்நிலையில் நாம் ஒரு அலைபேசி அல்லது வாகனம் ஒன்றை வட்டியில்லா அல்லது வட்டியுடன் கூடிய சமமான மாத தவணை (EMI – Equvated Monthly Installment) மூலமாக உடனடியாக பெற்று விடுகிறோம்.

ஆனால் நம் பெற்றோர்கள் அந்த பொருளை பெறுவதற்காக குறைந்தது 6 மாதங்கள் முதல் 2 அல்லது 3 வருடங்கள் வரை மாதந்தோறும் சேமித்து பிறகு அந்த பொருளை பெற்றார்கள். இது அவர்களின் கட்டிப்பாட்டினை படம் பிடித்து காட்டுகிறது.

  • சேமித்து வைத்து பெற்றதனால் அவர்கள் அந்த பொருளை நேசிக்கிறார்கள் மற்றும் அதைப் பெற்றதற்காக சந்தோசமடைகிறார்கள்.
  • நாம் உடனடியாக பெற்றுவிடுகிறோம். விலை உயர்ந்த அந்த பெருளை பெற்று உபயோகபடுத்தும் போது, கட்டுகின்ற மாதந்திர தவணையினால் பொருளின் மீது வெறுப்பு அடைகிறோம்.

இது நமது கட்டுப்பாடின்மையைய் தெளிவாக காட்டுகிறது.

குறிக்கோள் அல்லது கட்டுப்பாடில்ல வாழ்க்கை துடிப்பில்லா படகு போன்றதாகும் நண்பர்களே!

நாம் இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு செய்தி:

ஒட்டகச்சிவிங்கி என்ற உயரமான விலங்கைப் பற்றி நாமெல்லாம் அறிவோம். தாய்  ஒட்டகச்சிவிங்கி நின்றபடியே குட்டிப்போடும். திடீரென்று அந்தக் குட்டி தான் வயிறு என்ற பஞ்சு மெத்தையிலிருந்து கடினமானதொரு தரையில் விழும். பின் தரையின் மேல் அமரும். அந்தத் தாய் செய்கின்ற முதல் வேலை அந்தக் குட்டிக்குப் பின்னால் போய் அந்தக் குட்டியைய் எட்டி உதைப்பது தான். உடனே அந்தக் குட்டி எழுந்து கொள்ளும். ஆனால் அதனுடைய கால்கள் பலவீனமாக இருக்கும்; வெலவெல என்று நடுங்கும், எனவே அந்தக் குட்டி விழுந்து விடும். அந்தத் தாய் மறுபடியும் பின்னால் போய் மீ்ண்டும் அதற்கு ஒரு உதை கொடுக்கும். அந்தக் குட்டி மீண்டும் எழும். ஆனால் மீண்டும் அமர்ந்து கொள்ளும். அந்தத் தாய், அந்தக் குட்டி தனது கால்களில் எழுந்து நின்று நகரத் தொடங்கும் வரை அதை உதைத்துக் கொண்டேயிருக்கிறது. ஏன்? ஏனென்றால் அந்தக் குட்டிக்கு அந்தக் காட்டில் உயிர்வாழத் தேவையான ஒரே வாய்ப்பு தனது கால்களில் நிற்பதே என்று அந்தத் தாய்க்குத் தொியும். இல்லவிட்டால் அவை காட்டுப் பூனையால் தின்னப்பட்டு வெறும் மாமிசம் ஆகிவிடும்.

பிற கட்டுரைகள்:
வாழ்க்கை முறை
உதவிசெய்தல்
ஏழு கொடிய பாவங்கள்
ஆசை

பிற காணொளிகள்:
வெற்றிக் கதைகள்
செயல்தூண்டுதல்
உள்நோக்கம்

Tamil Thoughts about parents: இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கிழே பதிவு செய்யுங்கள்.

0 Comments

Your email address will not be published. Required fields are marked *