Tamil Thoughts About Life - வெற்றிக் கதைகள் | Tamil Thoughts

Tamil Thoughts About Life – வெற்றிக் கதைகள்


Tamil Thoughts About Life – Success Stories – வெற்றிக் கதைகள்

Tamil Thoughts About Life – வெற்றிக் கதைகள்: எல்லா வெற்றிக் கதைகளுமே பெரும் தோல்விகளின் கதைகளாகும். ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒவ்வொருமுறை அவர்கள் தோல்வி அடையும் போதும், அவர்கள் மீண்டும் மீண்டும் எழுகிறார்கள். இதைப் பின்னடைவு தரும் தோல்வி என்று சொல்வதைவிட முன்னேற்றம் தரும் தோல்வி என்று சொல்லலாம்.

உங்களது தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருங்கள்.

Tamil Thoughts for life: 

1913இல் Triode குழாயைய் கண்டுபிடித்த Lee De Forest‘s ஒரு முறை மாவட்ட வழக்குறைஞரால் குற்றஞ் சாட்டப்பட்டார். எதற்காகத் தொியுமா? அவர் அட்லாண்டிக் கடலுக்கு அப்பாலும் மனிதக் குரலை ஒலிபரப்ப முடியும் என்று சொல்லி, தனது கம்பெனியின் பங்குகளை வாங்கிக் கொள்ளும்படி பொதுமக்களைத் தவறான வழியில் தூண்டுகிறார் என்ற சந்தேகம் எழுந்ததால்தான். அவர் எல்லோர் முன்னிலையிலும் அவமதிக்கப்பட்டார். இறுதியில் அவர் கண்டுபிடித்த, Triode/Diode மின்னணு, தொலைத்தொடர்பு துறையில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது.

காற்றைவிட கணமான பறக்கும் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்த ரைட் சகோதரர்களின் அறிவு நூட்பத்தைச் சந்தேகித்து நீயூயார்க டைம்ஸ் 10, டிசம்பர் 1903 அன்று தனது தலையங்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தது. ஒரு வாரத்திற்கு பிறகு, ரைட் சகோதரர்கள் தங்களது முதல் பறக்கும் சோதைனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினர்.

ஓர் இளம் கேலிச் சித்திரக்காரரான வால்ட் டிஸ்னியைத் திறமை இல்லாதவர் என்று பல செய்தித்தாள் ஆசிரியர்கள் புறக்கணித்து விட்டனர். ஒரு பாதிரியார் ஒருவர் சில கேலிச் சித்திரங்கள் வரைய அவரை வாடகைக்கு அமர்த்திக் கொணடார். டிஸ்னி, சர்ச்சுக்கு அருகில் இருந்த, எலிகள் அதிக அளவில் நடமாடும் ஒரு கொட்டகையில் வேலை செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஒரு சிறிய எலி அங்கும் இங்கும் தூறுதூறுவென்று ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தவுடன் அவருக்கு பொறி தட்டியது. அதுவே மிக்கி மௌஸின் தொடக்கமாகும்.

நாம் எல்லோரும் ஒரு விதத்தில் வெற்றியாளர்கள்தான், நாம் செய்கின்ற வேலையைய் சிறப்பாகச் செய்யும் போது! ஒரு சிலருக்கு வெற்றி வாய்பு உடனேயே எட்டிவிடும். மற்றவர்களுக்கு, இது எட்டா கணியாகவே இருக்கும். கடைசிவரை போராடி, கணியைய் பறிப்பதுவே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

Conclusion: வெற்றி பெறுபவர்கள் எப்போதும் மிகச் சிறந்த காரியங்களைச் செய்வதில்லை. அவர்கள் சாதாரண வேலைகளைக் கூட மிகச் சிறந்த முறையில் செய்கின்றனர்.

Finally,

Winner don’t do different things, they do things differently! YOU CAN WIN – Shiv Kerra.

பிற கட்டுரைகள் (Other Articles):

பிற காணொளிகள் (Other Story Telling with Videos):

Tamil Thoughts About Life:

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். 


0 Comments

Your email address will not be published. Required fields are marked *