Krishna Priya’s valuable lines for the present situation of COVID 19 effects in the country and how much that affects human daily life.

இக்கணத்தில் ஆசையெல்லாம்…
மனதில் உறுதி வேண்டும்!
உடல் வலிமை பெறவேண்டும்!
மானிடம் ஜெய்திடவேண்டும்!
எத்தனை முறை ஆசைகொண்டோம்…
அனுமதியோடு அலுவலக விடுப்பு..
குடும்பத்தோடு நீண்ட நாட்கள்..
நெரிசல் இல்லா பாதை…
தேர்வின்றி அடுத்த வகுப்பு…
நீண்ட நாள் பள்ளிவிடுப்பு…
வீட்டிலிருந்து அலுவலக வேலை…
அம்மா சமைத்த ஆரோக்கிய உணவு…
அத்தனையும் கைசேர்ந்தபோதும்
இக்கணத்தின் ஆசை விரக்தியாய்-ஆம்
ஆரோக்கியம் மட்டும் போதும்
ஒவ்வொரு வினாடியையும் கடந்து செல்ல.
பலகோடி முறை குரல் உயர்த்தியும் கட்டுக்குள்
கொண்டுவர இயலாத ஆதிக்கம் கொண்ட
பதவி, பணபலம், ஜாதி மதம் அத்தனையும்
சுக்குநூறாய் ஒடுங்கி நின்றது
கண்களுக்கு தெரியாத அணுக்களுக்கு முன்பு!
கேலியாய் இடுகைகள் வந்தபோதும்
உண்மைதான், உள்மனம் விரும்பியது
அண்டையரின் நலன்மேல் அக்கறை!
வாழ்க்கை சக்கரத்தின் ஒரு பகுதியைக் கூட
கடந்து முடிக்காத குழந்தை செல்வங்கள்
குதூகலமாய் விளையாடி களிக்கிறது – ஆம்
நாளையென்ற பயமில்லை…
தொழில்நுட்பம் ஓங்கி நிற்கின்ற காலமிது
வினாடி முடியும் முன்பே செய்திகள்
உலாவரும் ஊடகமுண்டு!
எத்தனையோ வியாதிகளை
அடையாளம் இன்றி அழித்ததுண்டு!
எல்லை தாண்டிய எதிரியைத் துரத்தியடித்த சரித்திரம் உண்டு!
பலம்கொண்ட நாம் பதறிக்கிடக்கிறோம் – ஆம்
கண்களில் புலப்படாத எதிரியின் வரவால்
வயது வரம்பின்றி அத்துணை கைகளும்
ஓசை எழுப்பி உறுதி கொண்டது
நாட்டின் ஒற்றுமையை!
மனித இழப்புகள் வேதனையும் பயமும் தருகின்ற போதும்
உறுதியோடு கடந்து செல்வோம்
இயற்கை அன்னையின் அரவணைப்பில் – ஆம்
இந்த நூற்றாண்டு நமக்கா பிறந்தது
இக்கணத்தில் ஆசையெல்லாம்…
மனதில் உறுதி வேண்டும்!
உடல் வலிமை பெறவேண்டும்!
மானிடம் ஜெய்திடவேண்டும்
வெற்றி நிச்சயம்!!
ஜெய்கிந்!!!
கிருஷ்ண பிரியா மயில்சாமி
0 Comments