Tamil New Kavithai | Responsibilities of Parents | Tamil Thoughts

Tamil New Kavithai | Responsibilities of Parents


வாழ்த்துக்கள் பெண்ணைப்பெற்ற தந்தைக்கு

Tamil New Kavithai :

Tamil New Kavithai
Happy father and his sweet little daughter
வாழ்த்துக்கள் பெண்ணைப்பெற்ற தந்தைக்கு!!!

பெண்ணைப் பெற்ற தந்தைக்குத்தான் உணர முடியும் பெண்ணின் மென்மைதனை!

மென்மை வெறும் ஓர் ஆணின் தீண்டலில் தெரிவதல்ல! அது ஓர் தந்தையின் இதய ஆழத்தில் இருந்து எளும் பாசத்தின் வெளிப்பாடே!!!

உயிர் தந்த தந்தை, உடன்பிறந்த சகோதரன், உறவு கொண்ட கணவன், உயிர் துளித்த‌ மகன்

ஆனால் மூச்சின் கடைசிவரை உடலோடும், உள்ளத்தோடும், உணர்வோடும் முதலாய் நிற்பவன் தந்தையே!

அவன் முதலாய் வந்ததால் மட்டுமல்ல, கடைசி மூச்சுவரை மகளை நேசிக்க மட்டுமே தெரிந்ததினால்.

தாய் தன் குழந்தையின் பசியாற்றுகையில் பெரும் இன்பத்தில் எப்படி பொய்யில்லையோ அதே போல் மனைவி தாய் சகோதரி என்ற வேடத்தில் பெண் அவளை உருக்கிக்கொள்வதில் பெரும் ஆனந்தத்திலும் பொய்யில்லை.

ஆனால் இங்கு பலநேரங்களிலும் பங்குச்சந்தை வியாபாரியைப் போல் நடத்தப்படுவாள். நீ என்ன செய்தாய் எனக்கு நான் உன்னை நேசிக்க என்ற கேள்விக்குறியோடு?

குற்றமில்லை! இடையே வந்த உறவுகள் இடிக்கத்தான் செய்யும்.

இந்த இடிபாடுகளில் விழுந்து எழும் ஒவ்வொரு நிமிடமும் – ஆம்

அவளின் அன்புத் தந்தை அவள் மனதிலும் உணர்விலும் ஜெயித்துக் கொண்டேதான் இருப்பார்!!!

அப்பா என்று ஒலித்தால் போதும் ஒரு தந்தைக்கு உலகமே அஸ்த்தமனம் ஆகிப்போகும் அடுத்த வினாடி என்னடா மகளே என்று கரங்கள் நீட்டி அன்பு இதயத்துடன் வந்து நிற்பார்.

அப்பா உன் பாசத்தை நினைத்து மகிழ்வதா இல்லை வஞ்சிப்பதா! ஆம்

நீ பகிர்ந்த கள்ளமற்ற அன்பின் பிற் பயனே

கணவன் வீட்டு ஜன்னல் ஓரத்தில் கண்ணீர் துளிகளுடன் பல மங்கையர்கள்!

அப்பா என்ற ஓசையன்றி எதையும் கொடுத்திடவும் இல்லை உனக்கு, இருந்தும் நீ வெறுக்கவும் இல்லை ஒதுக்கவும் இல்லை! ஏன் கணக்குப் போடவும் இல்லை! அள்ளித்தந்தாய் அளவின்றி அனைத்தும்..

கட்டலில் கணவன், தொட்டிலில் பிள்ளை , அடிவயிற்றில் அடித்துவிளையாடும் குழந்தை.

கணக்கின்றி பாசம் பகிர்ந்தால் பணிவிடை செய்தால்.

ஒரு குழந்தையின் கைகளிலிருந்து தனது விரல்களை விட்டு நான் சிறிது ஓய்வு கொள்கிறேன் என்று சொல்ல குறைந்தபட்சம் நான்கு வருடம் ஆகிறது. அப்போதெல்லாம் சக்தியே நீங்கள்தான் – ஆம்

அப்பா எத்தனை வருடம் நம் கைகளை அவர் கரங்களில் பொக்கிஷமாய் பாதுகாத்தார் என்ற பூரிப்பு.

இருந்தும் வருத்தம் ஏன் கணவனாய் உணர்ந்திட இயலாமல் போகிறது பெண்ணின் மென்மைதனை???

ஆம் பெண்ணைப் பெற்ற தந்தைக்குத்தான் உணர முடியும் பெண்ணின் மென்மைதனை!

தன் மகளுக்குப் பார்த்துப் பார்த்து வாங்கி வந்து

பக்குவமாய் அருகில் அமர்ந்து இன்னும் கொஞ்சம் சாப்பிடுமா என்று எடுத்துரைப்பார்.

ஊட்டிவிட கைகள் தேவையில்லை ஆனால் நீ சாப்பிட்டாயா என்று கூட கேட்க அலட்ச்சியப் படும்

ஆண் உறவு கொஞ்சம் கசந்துதான் போகிறது பெண் வாழ்வில்.

அழகான ஆடைகளும் அலங்கார பொருட்களும் அணியவைத்து ரசிப்பார் நித்திரையும்.

அங்கு உன் காம உணர்வுகள் கூட அழிந்து பெண் தெய்வத்தைப் பார்ப்பதுபோல் உரைந்து நெகிழ்வார்!

மாதவிடாக் காலங்களில் தந்தையின் கைகளைவிட்டு கால்களைச் சுருக்கி சோர்ந்து படுத்திருக்கும்

மகளின் பக்கத்தில் சென்ற அமர்ந்து மெதுவாகத் தலையை வருடியவாறு செல்லமாய்

மெல்லிய குரலில் உரைப்பாய்..மகளே ஓய்வெடு சரியாகிவிடும் என்று.

என் மனைவிக்கு மூன்று நாளாம், ஐந்து நாளாம், ஏழு நாளாம் என்று ஏளனமும் எருச்சுலுமாய்

எண்ணிக்கொண்டு மனைவியிடம் விலகி சுவரை நோக்கிப் படுக்கும் கணவர்களே…

தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றிகொண்ட உங்களால் ஏன் ஓர் தலைவனாய் நண்பனாய் திகழ்ந்திடமுடியவில்லை என்று புரிந்திருக்கும்.

மாதவிடாக் காலங்களில் எந்த ஒரு கணவன் தன் மனைவியின் உடலளவிலும் மனதளவிலும் அடையும்வேதனை அறிந்து அவளைக் கசிந்து கொள்ளாமல் நெஞ்சத்தில் அரவணைக்கிறானோ அவனே அவள்தந்தையையும் மிஞ்சுவான்.

மகளை அழைத்து நடைபாதையில் செல்லுகையில் கரங்களைப் பிடித்துக்கொண்டு நகர்ந்திடுவாய் .தன்னைச் சுற்றியிருக்கும் காம நாயர்களின் அதிர்வுகள் கூட தன் மகளைத் தீண்டிடக்கூடாது என்று!

கணவனே – உன் மனைவி அவள் கரங்களை உன் கரங்களுக்குள் இணைத்து நடந்திட ஆசைப்படுவது ஏதோ இட்ச்சை அல்ல…தந்தையின் கரங்களாய் உன் கரங்களை பாவிப்பதால் மட்டுமே!

சோர்ந்த போதும், துவண்ட போதும் தன்மகள் வளர்ந்து விட்டால் என்பது கூட மறந்து அவளை

இரு கரங்களிலும் சேர்த்து நெஞ்சோடு அனைத்து

உச்சிதனை முகர்ந்து கம்பீரமாய் ஒலித்திடுவாய்…

அப்பா நான் இருக்கிரேனடா பார்த்துக்கொள்கிறேன் என்று!

ஆணே அறிந்துகொள் உன் மனைவி உன் மஞ்சத்தில் தலைசாய்ந்திட‌ உன்னைத் தேடுவது

காமத்தின் பாலல்ல தந்தையிடம் அனுபவித்த அந்த‌ பாசத்தையும் பற்றுதலையும் தேடி.

சண்டையிட்டதும் தீண்டாமையாய் விளக்கிச் செல்லாமல்

ஓர் தந்தையாய் அவளை மார்போடுஅணைத்திடு. அவள் தோற்றிடுவாள் மகளாய் உன்னிடம்!!!

அவள் தந்தையையும் நீஜெயித்திடுவாய்!!!

நரை தொட்ட போதும் கம்பீரமாய் நிற்பார் ஒரு பாதுகாவலனாய்

நிலா வரும் முன்னே வீடுவருவார் மகளின் புன்னகையை கண்டு மகிழ -ஆனால்

மனைவியாய் பலதும் பறிபோனது.

அதட்டலும் அக்கரையும் கலந்து உணவு கொள்வார் குடும்பத்தை ஒருவட்டத்தில் அமர்த்தி

எத்தனைக் கவலைகளும், கடமைகளும், கணக்குகளும் தலையை சுற்றி வந்துகொண்டு இருந்தாலும்

மனதை நிசப்த படுத்தி தன் செவிகளை விரித்து மகளின் ‘இன்று எனது நாள்’ என்று அவள் பிதற்றும் அனைத்தையும் அன்போடும் ஆர்வத்தோடும் கேட்டு ரசிப்பார்.

ஆணே இன்று உன் மனைவி பேசும் முன்னே ஒதுங்கிக் கொள்வாய் இல்லை

ஓலம் இடுவாய் அமைதியாக இரு என்று – ஆணே உன் மனைவி காலத்தை கழிக்க உன்னிடம் கலகலக்கவரவில்லை – தந்தை கற்றுத்தந்த உரையாடல் என்ற கலாச்சாரத்தையே உண்ர்த்திடவந்தால்.

பல கணவர்களும் உணர மறந்ததால்தான் என்னவோ இன்று

கள்ள காதலனின் கதைகளும் பாலியல் பலாத்காரமும் தலை ஓங்கி நிற்கிறது.

ஆணின் உச்சக்கட்ட வெற்றியே அவன் ஒரு பெண்ணுக்கு தந்தையாவதாகும்.

தனக்கு உயிர் கொடுத்து, உருவம் கொடுத்து, உடல்கொடுத்து, ஊரரிய தந்தை என்ற முத்திரையும் கொடுத்து தன்னையே மெழுகாக்கும் ஒரு மானிடபிறவி – ஆம்

“மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடவேண்டும்”

இவை அனைத்து சிறப்புகளும் கொண்ட ஒரு பெண் தேவதையை கைகளில் ஏந்தி “அப்பாடா செல்லம் என்று” கண்ணில் நீர்விட்டு முகத்தோடு முகம் சேர்த்து தன் மகளின் வாசத்தினை நுகர்ந்து தன் சுவாசத்தினில் கலந்து அதை வாழ்வின் இறுதிவரை பொக்கிஷமாய் பாதுகாத்திடும் அந்த வெற்றியே!!!

தந்தையே!

மகளின் மூச்சின்கடைசி நிமிடம்வரை நீயே அவளது முதலாமவன், தலைவன், தோழன், ஊக்கம்.

எத்தனை ஆண் தன் வாழ்வில் கடந்து சென்றாலும் அவள் உச்சிமுகர்ந்த முதல்வன் நீயே.

ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள்

உங்களின் மனைவியும் தேடிக்கொண்டுதான் இருப்பார்கள் அவரது தந்தையை உங்களுக்குள்.

முடிந்தால் முயர்ச்சித்துப்பாருங்கள் ஒருதந்தையாய் உணர்ந்திட‌, உச்சி முகர்ந்திட…

ஆண்களே குறைகூறவில்லை…

மனைவி என்ற கதாபாத்திரத்தை வெறும் காகிதப்பூக்களாக அலங்கரிக்காமல் வாசமுள்ள மலராய்உங்கள் கைகளில் ஏந்திடுங்கள் ஒரு தந்தையாய்!!!

ஓர் தலைவனாய் ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்தின் உச்சத்தில் குடிகொண்டிருக்கும்

பெண்ணைப்பெற்ற தந்தையர் அனைவருக்கும் என் மனமார்ந்த‌ வாழ்த்துக்கள்!!!

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Tamil New Kavithai :

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your email address will not be published. Required fields are marked *