Way to Increase Your Self Respect - Dr Ambedkar | Tamil Thoughts and Article

Way to Increase Your Self Respect – Dr Ambedkar


Way to Increase Your Self Respect  – சுயகௌரவம்

 Ways to Increase Your Self Respect / Self-Esteem / Self-worth:

Self-Respect meaning in Tamil:

சுயகௌரவம் (Self-respect) என்பது நம்மைப்பற்றி நாம் எப்படி எண்ணுகிறோம் (Thought Process – How do we feel about ourself) என்பதே ஆகும்.

 • நம் வேலையில் நம் செயல்திறன்
 • நம் உறவுமுறைகள்
 • பெற்றோர்களாக செயல்படும் விதம்
 • வாழ்வில் நாம் சாதிப்பவை

போன்ற “எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது”.

Few Facts about Self-Respect:
 1. சுயகௌரவம் என்பது வெற்றி அல்லது தோல்வியைய் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 2. உயர்ந்த சுயகௌரவமானது ஒரு மகிழ்ச்சிகரமான, மனதிருப்தியுடைய, குறிக்கோளுள்ள ஒரு வாழ்க்கையைத் தருகிறது.
 3. உயர்ந்த சுயகௌரவமுள்ளவர்கள் ஆழ்ந்த நம்பிக்கையிலும், திறனிலும், பொறுப்பினை ஏற்கும் விருப்பத்திலும் உயர்ந்தவர்கள்.
 4. அவர்கள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள்.
 5. அவர்களால் விமர்சனங்களையும், பாராட்டுதல்களையும் தரவும் பெறவும் முடியும்.

சுயகௌரவமான வாழ்க்கை என்றால் என்ன (Role model for Self-resspect / Self-esteem life) என்பதற்கு பீமாராவ் (இயற்பெயர்) வாழ்க்கையைவிடச் மிகச்சிறந்த உதாரணம் காட்ட இயலாது.

ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று பெருமிதம் கொண்டிருந்த தேசதந்தை காந்தியைய் உருக்குலையச்செய்தவர் தனது சுயகௌரவத்திற்காக!

1891ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிமாபாய் – ராம்ஜி சக்பால் என்ற தம்பதியினருக்கு பீமாராவ்  பிறந்தார். மஹர் என்ற தீண்டப்படாத ஒடுக்கப்பட்ட சமுகத்தில் பிறந்தார். (இந்துக்களால் பிரித்து வைத்த கீழ்சாதிகளுள் ஒன்று)

தீண்டப்படாதவர் என்பதற்காக சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட அநீதிகள்:
 • பள்ளிக்கு புத்தக பையைய் எடுத்து செல்வதைவிட முக்கியமானது சாக்கு துணியைய் கையில் எடுத்து செல்லது.
 • வகுப்பறையின் ஓரமாக சாக்கு துணியின் மீது உட்கார்ந்து பாடம் கவனிப்பது.
 • பள்ளியில் அனைவரும் தண்ணீர் குடிக்கலாம். ஆனால் இவருக்கு மட்டும் விதிவிலக்கு. அதாவது, உயர்சாதியினர் தண்ணீரை குவலையில் ஊற்ற வேண்டும் அதைமட்டும் தான் இவர் குடிக்க வேண்டும். சிதறிய தண்ணீரை சாக்குதுணி கொண்டு இவரே துடைக்க வேண்டும்.
 • ஊரின் ஒதுக்குப்புறத்தில் மட்டும் வசிக்க வேண்டும் மற்றும் பொது இடங்களில் செல்லத் தடை.

இது மட்டுமல்ல நண்பர்களே! தனது இரண்டாவது மொழி விருப்பப்பாடமாக, சமஸ்கிருதத்தை தோ்வு செய்தார். அவரது ஆசிரியர் கூறிய வார்த்தைகள் அவரது இதயத்தில் காயத்தை ஏற்படுத்தியது.

அந்த வார்த்தைகள் “சமஸ்கிருதமா? உனக்கா? அதெல்லாம் முடியாது! தீண்டப்படாத சாதியைய் சோ்ந்தவர்கள் புனித மொழியான சமஸ்கிருதத்தைப் படிப்பது பாவம். அது சமஸ்கிருத மொழியின் புனிதத்தைக் கெடுத்து விடும். படிப்பது என்ன? மற்றவர்கள் படிப்பதை அருகில் இருந்து கேட்கவும் அனுமதி இல்லை.

இளம்வயதில் தனது இதயத்தில் ஏற்பட்ட இத்தகைய காயங்கள் அவருக்கு மறையவே இல்லை, தனது கடைசி மூச்சு இருக்கும் வரை.

காலம் புறட்டிப்போட்டது:
 • பள்ளிப்படிப்பை தொடர்ந்த காலத்தில் பள்ளியில் முதலிடம்
 • எல்பைன்ஸ்டோன் கல்லூரியில் பட்டப்படிப்பில் முதலிடம்
 • பரோடா மன்னரின் உதவியுடன், அமொிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு
 • அமொிக்காவில் இருந்து லண்டன் சென்று சட்டப்படிப்பு

இவ்வளவு படித்தபிறகும், தீண்டத்தகாதவர் என்ற காரணத்திற்காக எவரும் அவருக்கு வழக்குகள் கூடத் தர முன்வரவில்லை.

தீண்டப்படாத சாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காகத் தன்னையும் தன்னுடைய சாதியினரையும் துரத்தி துரத்தி அவமானப்படுத்தும் கும்பல்களுக்கு எதிராகப் போராட்டத்தில் குதிக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்கினார்.

சுயகௌரவம்சில சுவரஷ்யமான விஷயங்கள்:

– 1930ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வட்டமேஜை மாநாட்டிற்கு இந்தியர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியனர் அனைவரும் புறக்கணித்தனர். முதலாம் வட்டமேஜை மகாநாடு தோல்வியுற்றது என்று அறிவித்த நிலையில் இவர் முதலாம் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு தீண்டப்படாத சாதியினரின் பிரச்சனை குறித்து பேசினார் மற்றும் முதலாம் வட்டமேஜை மகாநாட்டில் தீண்டப்படாத சாதியினரின் முன்னேற்றத்திற்கு அடிக்கல்நாட்டப்படுள்ளது என்றார்.

இந்த ஒரு முயற்சி, இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கபட்ட காந்தியையும், இந்தியாவின் மிகப்பெரும் கட்சியான காங்கிரஸ்யும், தீண்டப்படாத ஒதுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த இவரை திரும்பிப்பார்க்க வைத்தது.

சுயகௌரவம் தொடர்கிறது:

ஒரு முறை காந்தி மிகவும் உறுக்கமாக, நான் நெருப்புக்குச் சமமான இந்தப் படுக்கையில் இருந்து உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். எனது மூச்சு வேண்டுமெனில் சுதந்திர இந்தியாவை பெறுவதற்கு ஒத்துழையுங்கள் என்று பீமாராவிடன்” கேட்டுக்கொண்டார்.

ஆனால் இவரோ, அவருக்கு சலித்தவர் அல்ல!

காந்தியின் மூச்சில் எங்களுக்கு அக்கரை உண்டு அதே நேரத்தில் திண்டாமையினரை ஆதரிக்கிறோம் அவர்களுக்கும் சமூகத்தில் சக அந்தஸ்து கொடுக்கிறோம் என்று வாக்கு கொடுங்கள் என்று தனது விடா கோரிக்கையைய் விடுத்தார்.

ஒரு கட்டத்தில் காந்தியே இவரால் நமக்கு நன்மைகிடைக்கப்போவதில்லை!

அது நமது சுதந்திரத்திற்கே தடையாக இருக்கும் என்று எண்ணினார். ஆனால் இவரோ காந்தியின் உயிரைக்காக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய மக்களின் நலனுக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு திட்டத்தையும் நான் ஏற்கமாட்டேன்என்று தெளிவான அறைகூவல் விடுத்தார்.

தேசத்தந்தை காந்தியின் மீது இவர் வைத்த வாதங்கள்:
 • காந்தியின் தத்துவத்தின்படி விவசாயி என்பவன் ஏரோடு பூட்டப்படும் மூன்றாவது மாடு மட்டுமே!
 • வாயில் கடவுளின் பெயரை உச்சரித்துக்கொண்டே தன்னுடைய அக்குளுக்குள் கத்தியை மறைத்து வைத்திருக்கும் மனிதனுக்கு பெயர்தான் மகாத்மா காந்தி அல்லது கரம்சந் காந்தி.
பீமாராவின் இறுதியான வார்த்தைகள்:

நான், 

 • ஏழையாகப் பிறந்தவன்
 • ஏழைகளின் மத்தியில் வளர்ந்தவன்
 • ஏழைகளைப் போலவே ஈரமான சாக்கு துணியைய் போட்டு அதன்மீது படுத்து உறங்கியவன்.
 • ஏழைகளின் சுக, துக்கங்களில் பங்குபெற்றவன்.

தீண்டாமை ஒழிப்பு என்பது கிடைக்கும் வரை நான் என்னுடைய கொள்கைகளில் இருந்து மாறமாட்டேன் என்று உறுதியாக இருந்த அவர் இறுதியில் பௌத்த மதத்தில் இணைந்தார்.

இந்த பீமாராவ் தான் இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர்.

சுயகௌரவம் என்ற ஒன்றிற்காக தனது இறுதி மூச்சிறுக்கும் வரை போராடி தன் உயிரை நீத்தவர்.

Tamil Quotes for Self-respect:

சாதிக்க வேண்டுமென்றால், நம் யோசனை வித்தியாசமாக இருந்தால் போதாது; செயலும் வித்தயாசமாக இருக்க வேண்டும்.

Tamil Quotes About Self-Respect (நல்லவித சுயகௌரவம் – Good Self-esteem):
 • சுயமரியாதை
 • சுயநம்பிக்கை
 • சுயமதிப்பு
 • சுயஏற்பு
 • சுயஅன்பு
 • சுயஅறிவு
 • சுயகட்டுப்பாடு
உயர்ந்த சுயகௌரவம் உள்ளவர்களின் பண்புகள்:
 1. சிந்தனைகள் பற்றிய பேச்சு
 2. அக்கறையுள்ள மனப்பாங்கு
 3. பணிவு
 4. அதிகாரிகளை மதித்தல்
 5. ஆழ்ந்த நம்பிக்கையினால் கிடைக்கும் தைரியம்
 6. தன்னம்பிக்கை
 7. பண்பு பற்றிய கவலை
 8. உறுதிமனப்பான்மை
 9. பொறுப்பேற்பது
 10. சுயஆர்வம்
 11. நல்லதையே எதிர்பார்த்தல்
 12. புரிந்து கொள்ளுதல்
 13. கற்க விரும்புதல்
 14. எதையும் உடனடியாக உணர்தல்
 15. தனித்திருப்பது
 16. ஆலோசிப்பது
 17. சுயமதிப்பில் நம்பிக்கை
 18. வழிநடத்தப்படுவது
 19. ஒழுக்கம்
 20. பிறரை மதிப்பது
 21. நாகரிகத்தன்மையை விரும்புவது
 22. கொடுப்பவர்.

பிற கட்டுரைகள் (Other Inspirational Thoughts):

பிற காணொளிகள் (Other Videos):

Self Respect / Esteem:

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your email address will not be published. Required fields are marked *