Physical Courage | Tamil Thoughts | Tamil Thoughts

Physical Courage | Tamil Thoughts


அன்பிற்குரிய நண்பர்களே,
அனைவருக்கும் காலை வணக்கம்.

Physical Courage / Tamil :

இன்றைய தினம் ஒரு தகவலில் நாம் பார்க்கக்கூடிய தலைப்பு மனஉறுதி அல்லது மனதைரியம்.

அன்றாட நம் வாழ்வில் பலதரப்பட்ட மக்களைப் பார்க்கின்றோம். உதாரணமாக ‘அப்பா’ என்ற திரைபடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள 3 விதமான குழந்தைகளை மனதைரியத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

“மனதைரியம்” என்பது நமது மனது சார்ந்த விஷயம். ஒரு செயலை தன்னிச்சையாக எவ்வாறு முடிவு எடுக்கிறோம் என்பது ஆகும். இந்த ஒரு தன்னிச்சையாக முடிவு எடுக்கின்ற பழக்கத்தினை குழந்தை பருவத்திலிருந்தே பழக்கபடுத்த வேண்டும்.

இந்த குழந்தை பருவத்தில் உருவாகின்ற மனதைரியத்தை நம் பெற்றோர்கள் இவ்வாறு கூறுவார்கள்.

“விளையும் பயிர் முளையிலேயே தொியும்”

இதையே சற்று எதிர்மறையாக,

“ஐந்தில் விளையாது ஐம்பதில் விளையாது” என்பார்கள்.

Physical Courage Videos :

பிறப்பால் அனைவரும் நல்ல குழந்தைகள்தான்”. அவர்கள் நல்லவர் ஆவதும் கெட்டவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே!

உதாரணமாக, உங்களது நான்கு வயது டாமிற்கு சரியாக காது கேட்கவில்லை! அவன் இந்த பள்ளியில் படிக்க இலாயிக்கில்லாதவன் என்று கூறிய ஆசிரியரிடம் இருந்து தனது குழந்தையினை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியாக உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதும் அவரது தாயே!

நமது சிந்தனை எப்பொழுதும் நோ்மறையானதாகவே இருக்கட்டும். இந்த மனதைரியம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கு சுவாமி விவேகானந்தருக்கு தனது சிறுவயதில் எற்பட்ட இந்த சுவாரஷ்யமான விஷயத்தை பார்ப்போம்.

சுவாமி விவேகானந்தரின் குழந்தை பருவத்தில் பல தைரியமான செயல்களை செய்திருக்கிறார். அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது ஒரு மரத்தின் மீது உள்ள கிழையில் ஏறி தலைகீழாக ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தார். ஒரு வயதான முதியவர், நரேந்திராவின் (சுவாமி விவேகானந்தர்) நண்பர்களிடம் இந்த மரத்தில் வெள்ளை ஆடை அணிந்த பேய் இருப்பதாக எச்சரித்தார்.  அவரது நண்பர்கள் மிகவும் பயந்து, மரத்திலிருந்து விலகி இருந்தார்கள். ஆனால் நரேந்திரா சற்றும் பயம் இல்லாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். தனது நண்பர்களையும் பின்தொடர வற்புறுத்தினார். மீண்டும் மரத்தில் ஏறி, சிறு கிழைகளை உடைத்து கிழே போட்டு மரத்தில் பேய் ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்தார்.

பலசமயங்களில் நாமும் இதுபோன்ற மற்றவர்களின் ஆலோசனையைய்  கேட்டு சுயமாக முடிவெடுப்பதை விட்டுவிடுகிறோம் அல்லது உண்மையைக் கண்டுபிடிப்பதன் அவசியத்தை உணராமல் இருந்து விடுகிறோம். இதுபோன்ற குருட்டு நம்பிக்கைகள் மற்றும் பகுத்தறிவற்ற அச்சங்கள் நம் மனதை முடக்கி நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்யைாகி விடுகின்றன.

Swami Vivekananda Childhood Story:
சுவாமி விவேகானந்தரின் குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த சம்பவம் கூறும் உண்மை:

நாம் மற்றவர்களின் முட்டாள்தனமான ஆலோசனையினை கேட்டு நமது செயலில் பின்வாங்கக்கூடாது என்பதை காட்டுகிறது. உண்மையைத் தெரிந்துகொள்வதன் மூலம் தைரியமாக செயல்படுங்கள்.

அனைவரின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள். இறுதியான முடிவு, சரியோ தவறோ நம்முடையாத மட்டுமே இருக்க வேண்டும்.

Developing physical courage in Tamil :
சில மேற்கோள்கள்:
  • ஒருபோதும் தவறு செய்யாத எவரும், புதிதாக எதையும் படைத்ததாக சரித்திரமில்லை. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
  • Anyone who has never made a mistake, has never tried anything new. -Albert Einstein
  • எந்த நியாயத்துக்கும் கட்டுப்படாத கோணல் புத்திக்காரர்களால்தான் உலகின் எல்லா முன்னேற்றங்களும் நடக்கின்றன. – ஜார்ஜ் பொ்னாட்ஷா
பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Physical Courage / Tamil :

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your email address will not be published. Required fields are marked *