Love yourself - ஆட்கொள்ள அனுமதிக்காதே | Tamil Thoughts

Love yourself – ஆட்கொள்ள அனுமதிக்காதே


ஆட்கொள்ள அனுமதிக்காதே!!!

love yourself Tamil Kavithai- ஆட்கொள்ள அனுமதிக்காதே
Love yourself  – ஆட்கொள்ள அனுமதிக்காதே!!!

வியர்த்த முகம்தனை கழுவிடுவோம்!

கந்தல் உடைதனை மாற்றிடுவோம்!

சிதறிய பொருட்களை அலங்கரிப்போம்!

அழிந்த உணவினை அகற்றிடுவோம் !

அநீதியினை மறுத்திடுவோம்!

 

அனைத்தும் நடக்கும் அனிச்சை செயலாய்

அன்றாட வாழ்க்கையில் !

விரும்பிய செயல்கள்! இதயத்தில் இன்பமாய் !

 

அழுகை , கோபம் , பழி , கேலி ,கடுஞ்சொல்,

அவமானம் , அலட்சியப்படுத்தல்,

அனைத்தும்  விரும்பாத உணர்ச்சிகளே! ஆனால்

ஆட்கொள்ளப்படும் மனது நம்மைச்சுற்றிய உறவினால்!

 

மானுட !

ஒவ்வொரு சிறு இடை வெளியிலும்

மனதில் மந்திரமாய் ஒலித்திடுவோம்! – ஆம்

அனிச்சை செயலாய் அகற்றிட வேண்டும்

மனதில் விழும் நொடிப்பொழுதே இவ்வலியினை!

 

ஆட்கொள்ள அனுமதித்தால்

அஸ்த்தமனமாகிப்போகும் நம் வாழ்வு!

 

நம் வினாடி நாம் விரும்பிய உணர்வால் அலங்கரிப்போம் !

அடுத்தவர் எண்ணங்கள் நம்மீது ஆட்கொண்டால்

வாழ மறந்திடுவோம்! வலிகளின் சுழற்சியில்!

 

ஆற்றல்கொண்ட நம் இதயம்தனை உடைத்திட வேண்டாம்

தேவையற்ற எண்ணம்தனை சிந்தனை செய்து!

 

வேதனைதரும் உணர்வுகள் வேண்டாம் எனக்கு!

பலனுள்ள செயல்கள் பட்டியலிட்டு காத்திருக்கிறது!

 

முயற்சித்துக்கொண்டே இரு! முரசொலித்துக்கொண்டே இரு!

மாற்றங்கள் அழகாய் வெளிப்படும் வெற்றியை நோக்கி!

 

ஆட்கொள்ள அனுமதிக்காதே அடுத்தவரின்

நியாயமற்ற உணர்வுதனை உனக்குள்!!!

 

By Krishna Priya Mylsamy

Other Tamil Kavithais:
பிற காணொளிகள் (Other Videos):

0 Comments

Your email address will not be published. Required fields are marked *