Lenin Revolution | லெனின் புரட்சி | Tamil Thoughts

Lenin Revolution | லெனின் புரட்சி


அன்பிற்குரிய நண்பர்களே

லெனின் புரட்சி

Click here for English Translation

Lenin Revolution /  லெனின் புரட்சி :

இன்றைய தினம் ஒரு தகவலில் பார்க்கக் கூடிய தலைப்பு ரஷ்ய புரட்சி (Russian Revolution).

ரஷ்ய புரட்சி / Russian Revolution

ரஷ்ய புரட்சி என்று சொன்ன உடனேயே எல்லோருடை இதயத்திலும் தோன்றக்கூடிய ஒரே ஒரு மாமனிதர் லெனின் (Nobleman Lenin). ஆம் அவரை பற்றிய சில தகவல்களை இன்றைய தினம் ஒரு தகவலில் நாம் பார்க்கப்போகிறோம்.

அதாவது 23 தலைமுறைகளாக ஜார் மன்னனின் (King of Russia) காலடியில் அடிமைகளாக கிடந்த ரஷ்யாவை (Slave of Russia), சோஷியலிச நாடாக மாற்றும் இந்த முயற்சியே லெனின் புரட்சி (Lenin Revolution). அதாவது, அனைத்து பணக்காரர்களும், தொழிலதிபர்களும், நிலச்சுவான்தாரர்களும் ஜார் மன்னனுக்கு முகஸ்துதி பாடிக்கொண்டிருந்த காலத்தில், ஜார் மன்னனை எதிர்ந்து இந்த நாட்டில் யாருமே எதுவுமே செய்ய முடியாது என்று இருந்த சமயத்தில் இரஷ்யாவை சோஷியலிச நாடாக மாற்றிய ஒரே பெருமை மாமனிதர் லெனினுக்கே சேரும்.

லெனின் பிறப்பு (Lenin’s birth):

இலியா உலியானவ் மற்றும் மரியா ஆகிய தம்பதியனருக்கு இளைய குழந்தையாக ஏப்ரல் 22ம் தேதி 1870ம் ஆண்டு பிறந்தார் விளதீமிர் இலியா உலியானவ் (லெனின்Lenin). எல்லோரைப் போலவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வருமையில் வாடிய இவர் சிறுவயதிலேயே மிகவும் துடிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தார். இவரது இளம் வயது பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவராலும் வையப்படும் ஒருவராக இருந்தார்.

இளமைக்காலம் (Lenin History in Tamil):

ஒரு கட்டத்தில் அன்னையின் அறிவுரையே ஏற்று, தன்னையே மாற்றிக் கொண்டு தனது அண்ணன் அலெக்ஸாந்தர் என்ன செய்கிறானோ அதை அப்படியே செய்தான் விளதீமிர். அலெக்ஸாந்தர் காபி அருந்தினால் இவனும் காபி. தேநீர் அருந்தினால் இவனும் தேநீர். ஆற்றங்கரைக்கு மாலை நடந்து போனால் இவனும் கூடவே ஓடிக் கொண்டான். தேவாலயத்திற்கு செல்வதிலும், பைபிள் படிப்பதிலும் அலெக்ஸாந்தருக்கு ஆர்வம் இல்லை ஆகவே எனக்கும் இருக்கப்போவதில்லை என்று முடிவு செய்தான்.

அரசியல் அறிவு (Lenin Political Knowledge):

ஒரு முறை அலெக்ஸாந்தர் ரஷ்ய அரசியல் பற்றிய புத்தகங்களை படித்துக் கொண்டு இருந்தான். விளதீமிர் அண்ணன் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து அரசியல், அரசியல் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன என்று கேள்வி கேட்டான். அலெக்ஸாந்தர் பொறுமையாக சொல்லிக் கொடுத்தான்.

 • ரஷ்யாவை பற்றி.
 • ரஷ்யாவை ஆண்டு கொண்டு இருந்த ஜார் மன்னனை பற்றி.
 • ஆட்சி செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ரஷ்யர்களை அடிமைப்படுத்திக் கொண்டு வைத்திருக்கிற ஜார் மன்னர்களைப் பற்றி.
 • ரஷ்யாவில் உள்ள ஏழைகளைப் பற்றி.
 • ரஷ்யாவில் உள்ள ஏழ்மை பற்றி.
 • வசதி வாய்புள்ளவர்கள் ஏழைகளை ஏய்ப்பதைப் பற்றி.
 • கரும்புச் சக்கையாகத் தொழிலாளர்களை கசக்கிப் பிழியப்படுவது பற்றி.
 • அடக்குமுறையைப் பற்றி.

இவ்வாறு ரஷ்ய அரசியல் பற்றி அறிந்த விளதீமிர், ரஷ்ய அரசியல் பற்றி நிறைய அறிய ஆரம்பித்தான்.

விளதீமிர் (லெனின் வாழ்க்கையின்) சோதனைக்காலம்Vladimir (Lenin’s life) Trial:

1886ம் வருடம் ஜனவரி மாதம். விளதீமிர் தன்னுடைய 16வது வயதை நெருங்கிக் கொண்டிருந்த சமயம். விளதீமிர் அப்பா இலியா உலியனாவ் தீடீரென்று இறந்து போனார். அவரது வாழ்வில் இடி விழுந்தது. ஒட்டு மொத்த குடும்பமும் சோர்வில் ஆழ்ந்தது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மற்றுமொறு இடி அவரது வாழ்வில். ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியைய் பொறுத்துக் கொள்ள முடியாத அண்ணன் அலெக்ஸாந்தர் அவரை கொல்ல முயன்றார் என்ற குற்றத்திற்காக 1888ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி அலெக்ஸாந்தர் தூக்கிலடப்பட்டார்.

தன் சகேதரனின் அறையில் உட்கார்ந்திருந்தான் விளதீமிர். இனி என் வாழ்க்கையை நானே வாழ வேண்டும்.

 • வழிகாட்ட யாருமில்லை.
 • அப்பாவும் இல்லை.
 • அண்ணனும் இல்லை.
 • என் அண்ணனின் கனவை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.
 • ரஷ்யா உலகின் தலைசிறந்த நாடாக மாறும்.
 • அதற்கு என்னால் ஆனதை நிச்சயம் செய்வேன்.

விளதீமிர் லெனினான உருவாகத் தொடங்கியிருந்தார்.

ஜார் ஆட்சியல் நடந்த கொடுமைகள் (The horrors of Jar’s rule):
 • தோ்தல், வாக்கெடுப்பு கிடையாது.
 • ராணுவம், காவல்துறை, தேவாலயம், தொழில்துறை எல்லாமே ஜார்கையில் தான்.
 • அனைத்து பெரும் புள்ளிகளும், செல்வந்தர்களும் ஜார் ஆட்சியைய் கொண்டிடாடினார்கள் தங்களது சுய லாபத்திற்காக.
 • ஜார் ஆட்சியில் மக்களுக்கு மற்றொரு பெயர் அடிமைகள்.
 • நிலங்களை வாங்கும் போதும் விற்கும் போதும் அந்த நிலப்பகுதியில் வேலை செய்யும் அடிமைகளையும் சோ்த்தே விலை பேசுவார்கள்.
 • அடிமைகளுக்கு சம்பளம் கொடுக்க தேவையில்லை
 • ஒரு வகையில் அடிமைகள் என்பவர்கள் அசையும் சொத்துக்கள்.
 • மக்கள் ஆடு, மாடுகள் போன்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அடிமைகளாக விற்கப்பட்டனர்.
 • இவர்களுக் சம்பளம் எதுவும் கிடையாது.
 • யார் யாரெல்லாம் ஜாரை எதிர்க்கிறார்களோ அல்லது அவருக்கு எதிராக கொடை பிடிக்கரார்களோ அவர்களை எல்லாம் இறக்கம் இல்லாமல் சிறையில் தள்ளினர்.
லெனின் படிப்புக் காலம் (Lenin Study Period):

இந்த சூழ்நிலையில் தான் லெனின் தனது பள்ளிப் படிப்பின் இறுதித் தோ்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தான். மனதில் இருந்தது எல்லாம் ஒரே வெறி. நன்றாக படிக்க வேண்டும். முதல் மதிப்பெண் பெற வேண்டும். சட்ட கல்லூரியில் சேர வேண்டும். சட்டத்தின் மூலம் ஜார் மன்னனை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே கனவு. எதிர்பார்த்தது போலவே கனவு நினைவானது. இறுதித் தோ்வு முடிவுகள் வெளியாயின. எல்லா பாடங்களிலும் லெனின் முதலிடம். லெனினுக்குத் தங்கக் கோப்பை கொடுத்தாக வேண்டும். ஆனால், லெனின் சகோதரன் அலெக்ஸாந்தர் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு அரசாங்கத்தால் தூக்கிலடப்பட்ட கொலைக்காரனின் சகோதரன் என்ற காரணத்திற்காக அவனுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. ஏன். மிகுந்த போராட்டத்திற்கு பிறகே பள்ளியல் நன்னடத்தை சான்றிதலும் அளிக்கப்பட்டது. இறுதியாக கஸான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும்  மாணவனாக மாறினார்.

கஸான் பல்கலைக்கழகத்தில் மூன்று கோரிக்கைகளை முன் வைத்தனர்:
 •  மாணவர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறுதல்.
 • அற்ப காரணங்களுக்காக படிப்பை ரத்து செய்து விட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவர்களை திரும்ப கல்லூரியல் சோ்க்க அனுமதி.
 • மாணவர் அமைப்பை வேவு பார்ப்பதை நிறுத்துவது மற்றும் மாணவர் அமைப்பை தடை செய்யாதே.

இதனை எற்க மறுத்தது பல்கலைக்கழக வளாகம். சட்டம் சொல்லித்தர வேண்டிய அமைப்பே சட்டவிரோதமாக நடைபெறும் போது, எங்களால் எப்படி சட்டம் படிக்க முடியும்? அப்படிப்பட்ட கல்வியே எங்களுக்கு தேவையில்லை என்று பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினார்.

அடுத்த சில தினங்களில் லெனின் மற்றும் அவரது நண்பர்கள் காவல் துறையினரால் கைது செய்தனர். காவல் துறையினர் ஒருவர்,எதற்காக இந்த போராட்டம்? ஜார் அரசாங்கம் ஒரு சுவர். அதைச் சிறுவனாகிய உன்னால் உடைக்க முடியாதுஎன்றார். ம்! புரிந்தது. அது ஒரு மட்கிப் போனசுவர். அதை உடைக்க வேண்டாம். ஓங்கி தள்ளினாலே உதிர்ந்துவிடும். அதை நீங்கள் எல்லோரும் பார்க்கத்தான் போகிறீர்கள் என்று சூழுரைத்தான்.

சில தினங்களில் சிறையில் இருந்து வெளிவந்தான். கல்லூரியில் மட்டும்தான் படித்து பட்டம் பெற முடியுமா என்ன? வெளியில் இருந்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் கட்டு கட்டாக புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தான். அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம், இலக்கியம், இன்னும் நிறைய. அதிகாலை முதலே படிக்க ஆரம்பித்துவிடுவார். கண்களைத்திறந்த மறுகணமே படிப்பு தொடங்கிவிடும். இப்படியாக படிக்கத் தொடங்கி, 1891ம் ஆண்டு தனது 21ம் வயதில் பல்கலைக்கழகத்தில் நேரடியாக தோ்வு எழுதினார் லெனின். அந்தக் காலக் கட்டத்தில் நேரடியாக தோ்வு எழுதியவர்களில் ஒருவர்கூட தோ்ச்சி பெறுவது கடினம். ஆனால் தோ்வு எழுதிய அனைத்து மாணவர்களிலும் லெனின் மட்டும் தான் முதலிடத்தில் தோ்ச்சி பெற்றான்.

அரசியல் வாழ்க்கை (Lenin Political Life):

சட்டம் முடித்த லெனின் வக்கீல் வேலைக்கு போகவில்லை. அவனுடைய எண்ணம் அனைத்தும் ஒன்றே ஒன்று தான்.

 • அடிமைத்தனம் ஒழிய வேண்டும்.
 • தொழிலாளர்களுக்கு சமஉரிமை வழங்கவேண்டும்.
 • தொழிலாளர் உரிமை சுரண்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
 • தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
 • இறுதியாக தனது அண்ணனின் கனவு நினைவாக வேண்டும்.

ஆனால், தொழிலாளர்கள் அனைவரும் வெறும் உணவிற்காக மட்டும் தினமும் பதினெட்டு மணிநேரம் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு அவர்களது உரிமை எதுவென்றே தொியாமல் அடிமைகளாக வாழ்ந்து வந்தனர்.

இதனை ஒரு சிறு கதையின் மூலம் தொழிலாளர்களுக்கு விளக்குகிறார்:

ஒரு சிங்கம் தான் வேட்டையாடிய உணவை எப்படி பகிர்ந்து கொள்கிறது என்று பார்ப்போம். முதலில் அந்த உணவை நான்கு துண்டுகளாக அந்த சிங்கம் பிரித்தது. பிற விலங்குகள் ஆசை ஆசையாக சிங்கத்தை நெருங்கி வந்தன.

 • முதல் பங்கை சிங்கம் எடுத்துக் கொண்டது. ஏனென்றால் வேட்டையாடியது சிங்கம்தான். உரிமை சம்மந்தப்பட்ட விஷயம்.
 • இரண்டாவது பங்கையும் சிங்கம் எடுத்துக் கொண்டது. காரணம், அந்தக் காட்டின் ராஜா அது.
 • மூன்றாவது பங்கையும் அது எடுத்துக்கொண்டது. காரணம், இருப்பதிலேயே வலிமையான விலங்கு அதுதான். பிற விலங்குகளை விட அது உயர்ந்தது அல்லவா.
 • நான்காவது பங்கையாவது பிற விலங்குகளுக்கு கொடுக்க வேண்டும். எந்த விலங்காவது எங்களுக்கு பங்கு கொடு என்று சிங்கத்திடம் போய் கேட்க முடியுமா? அப்படி கேட்டாலும் அந்த சிங்கம் சும்மா விடுமா?

இது தான் லெனின் அடிமைகளிடம் ஏற்படுத்திய புரட்சி. தொழிலாளர்களால் நேசிக்கப்படும் தலைவராக லெனின் உருவாக ஆரம்பித்தது இந்தப்புள்ளியில் இருந்துதான்.

போராட்டம் ஆரம்பம் (The Beginning of Russia Revolution):
 • ஜார் மன்னனுக்கு எதிராக தொழிலாளர்களை ஒன்று திரட்டியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
 • கடுமையான சோதனைகளுக்கு பிறகே அவருக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டன.
 • அனைத்து தொழிலாளர்களும் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
 • தொழிற்சாலைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன.
 • இது மட்டுமல்லாமல், முதல் முறையாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்.
உள்நாட்டுப் போர் மற்றும் முதல் உலகப்போர் (Civil War and First World War):
 • உள்நாட்டில் மக்களிடையே அமைதி இல்லை.
 • தொழிற்சாலைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன.
 • தொழிலாளர்கள் வேலையில்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.
 • உள்நாட்டில் தொழிலாளிகள் புரட்சி.
 • விவசாயம் சரியாக நடைபெறவில்லை மற்றும் உணவுத் தட்டுப்பாடு.
 • நிதிநிலைமை சரியில்லை.

இ்ந்த சூழ்நிலையில் தான் ரஷ்யா ஜொ்மனி மீது போர் தொடுத்தது. ரஷ்ய துருப்புகளுக்கு பலத்த சேதம். வீரர்களுக்கு தேவையான வசதிகள் எதையுமே ஜார் செய்து தரவில்லை. போர் வீரார்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை. மருந்து மாத்திரைகள் இல்லை. கடுங்குளிரைத் தாங்கக் கூடிய கம்பளி ஆடைகள் இல்லை. இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார்  லெனின்.

வீரர்கள் சாய்ந்து துவண்டு போய் இருப்பார்கள் என்று லெனினுக்கு தொியும். சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார் லெனின். தைரியமாக போர் வீரர்களை அனுகினார் லெனின். யாருக்காக போராடுகிறீர்கள். தேவையற்ற இந்த போருக்காக இத்தனை போ் உயிர் இழக்க வேண்டுமா? யோசித்துப் பாருங்கள் என்று போர்வீரர்களை சிந்திக்க வைத்தார். போர் வீரர்கள் அனைவரும் பின்னோக்க ஆரம்பித்தனர். அதே சமயம், இளைஞர்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். எஞ்சி இருந்தவர்களும் ஜார் மன்னனை உதாசினப்படுத்தினர்.

ஜார் மன்னிரின் சோதனைக்காலம் (King of Russia Jar’s Trial):
 • உள்நாட்டுப்போர். அவமானம்.
 • போர் முனையில் இழப்பு. அவமானம்.
 • மீதமிறுந்த இராணுவப்படையும் தங்களது சீறுடையையும் பழைய தொப்பியையும் தூக்கி எறிந்தவிட்டு மக்களுடன் ஒன்று சோ்ந்தனர்.

மொத்தத்தில் ஜார் ஆட்சி கவிழ்ந்துவிட்டதுOverall, The King of Russia Jar’s regime has collapsed.

லெனின் தலைமையில் புதிய ஆட்சி – The New Regime Led by Lenin:
 • நிலங்கள் தேசியமயமாக்கப்படும்
 • எஸ்டேட்டுகள் பறிமுதல் செய்யப்படும்.
 • பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் விவசாயிகள் கட்டுப்பாட்டின் கீழ் வந்து சேரும்.
 • புதிய விவசாய பண்ணைகள் உருவாக்கப்படும்.
 • அனைத்து வங்கிகளும் இணைக்கப்படும். தேசிய வங்கி உருவாகும்.
 • பொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் இனி தொழிலாளர்கள் பொறுப்பில் விடப்படும்.
 • பண்ணையடிமை உள்ளிட்ட அனைத்து அடிமை முறைகளும் முற்றிலுமாக ஒழிக்கப்படும்
லெனின் குறிக்கோள் (Lenin’s Goal):
 • இனி ரஷ்யாவில் ஒருவரும் ஒரு துளி ரத்தம் கூட சிந்தக்கூடாது.
 • இனி சிந்த வேண்டியது வியர்வை மட்டும்தான்.
 • புதிய அரசை கட்டுமானம் செய்ய வேண்டும்.
 • வேலைகளைத் தொடங்க வேண்டும்.
 • அரசாங்கம் என்றால் என்ன என்று மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
 • சோவியத்தில் இனி அமைதி மட்டுமே நிலவ வேண்டும்.

லெனின் தயாரானார். சோவியத்தின் புதிய சரித்திரம் ஆரம்பமானது.

 

இதுவே இந்திய சுதந்திரத்திற்கும் காரணமாக இருந்தது. லெனின் வாழ்க்கை வரலாறு இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டது என்றும் கூறலாம்.

மாவீரன் பகத்சிங்கை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல வெள்ளையர்கள் வந்து அவசரப்படுத்திய போது, லெனின் எழுதிய அரசும் புரட்சியும்State and Revolution by Leninஎன்ற புத்கத்தை படித்துக்கொண்டிருந்த பகத்சிங், ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனோடு பேசிக்கொண்டிருக்கிறான். கொஞ்சம் பொறுங்கள் என்றார். இறக்கும் தருவாயிலும், லெனின் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார் என்றால் எத்தனை சக்திவாய்ந்த புத்தகம் மற்றும் சக்திவாய்ந்த எழுத்துக்கள் லெனினால் உருவாக்கப்பட்டது.

நாமும் இது போன்ற உலக சரித்திர நிகழ்வுகளை அறிவதின் மூலம், நம் வாழ்விலும் ஏதேனும் புரட்சி செய்வோம். பிறந்தோம், வாழ்ந்தோம் மற்றும் இறந்தோம் என்று இல்லாமல், பிறந்தோம், சரித்திரம் படைப்போம் என்று சூழுரைப்போம்.

 

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Lenin Revolution /  லெனின் புரட்சி :

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

 


One Comment

Your email address will not be published. Required fields are marked *