Kavithai - எல்லாம் கனவாகவே இருக்கிறது | Tamil Thoughts

Kavithai – எல்லாம் கனவாகவே இருக்கிறது


எல்லாம் கனவாகவே இருக்கிறது

Kavithai :

எல்லாம் கனவாகவே இருக்கிறது !

என் வயது மட்டுமே என்னை கடந்து செல்கிறது !! 

Kavithai
எல்லாம் கனவாகவே இருக்கிறது…
எல்லாம் கனவாகவே இருக்கிறது!

10ம் வகுப்பில் நன்றாக படி, எதிர்காலம் நன்றாக அமையும் என்றார்கள்!

அமாம் நன்றாக இருந்தது. பாராட்டுகளும் நிறைந்தது!

பத்தாம் வகுப்பில் மதிப்பெண் பெற்ற அந்த ஒரு மாதம் மட்டுமே

அவ்வாறே 12ம் மற்றும் கல்லூரி வகுப்புகளும் கடந்தன!

எல்லாம் கனவாகவே இருக்கிறது!

கல்லூரியில் முதல் வகுப்பில் தோ்ச்சி பெறு, எதிர்காலம் நன்றாக அமையும் என்றார்கள்!

படித்து, படித்து எண்ணிக்கைளின் அறிவை (புத்தக அறிவை) மட்டுமே அறிந்து

கல்லூரியிலும் தோ்ச்சி பெற்றேன் புத்தக அறிவோடு மட்டுமே ( மனஅறிவில்லாமல்)

போராட்டத்திற்கு பிறகு வேலையும் கிடைத்தன, ஊதியமும் கிடைக்கப்பெற்றன.

எல்லாம் கனவாகவே இருக்கிறது!

எண்(ன்)ணளவில் படித்தவன், நல்ல வேலையில் இருக்கிறேன். கைநிறைய சம்பளம்.

பெற்றோர் சந்தோசத்திற்காக அல்லது ஊரார் மற்றும் உற்றோர் பெருமைக்காக

என் ஆழ்மனதிற்குத்தான் மட்டும்தான் தொிகிறது, நானும் அடிமைதான்.

பணத்திற்காக வேலை செய்கிறேன் ஆனால் அந்த பணம் என்னிடமில்லை.

எல்லாம் கனவாகவே இருக்கிறது!

வேலையையும் கிடைத்தது! கூடவே நல்ல சம்பளமும் கிடைத்தது

கூட்டியும் கொடுக்கப்பட்டது – ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் கடன் அட்டைதாரரிடம் (Credit Card)!

எல்லாம் இலவசம், தள்ளுபடி என்றான். இத்தனை வருடமான சுயகட்டுபாடு சூதாட்டமானது

எனது சம்பளம் – கடன் அட்டைகாரருக்கும் மற்றும் ஆன்லைன் வணிக நிறுவனத்துக்கும்.

எல்லாம் கனவாகவே இருக்கிறது!

அறிவுடன் வேண்டாம் என்றேன் – கடன் அட்டை இலவசம் வைத்துக்கொள் என்றான்!

அறிவுடன் வேண்டாம் என்றேன் – இன்று இரவு மட்டும் தள்ளுபடி, முயற்சி செய்து பார் என்றான்!

அறிவுடன் வேண்டாம் என்றேன் – புதிய பொருள் கழிவு விலைக்கு, மீண்டும் இந்த வாய்ப்பு வரவே வராது என்றான்!

அறிவுடன் வேண்டாம் என்றேன் – அணிந்துபார்! வேண்டாம் என்றால் திரும்பி பெற்றுக் கொள்கிறேன் என்றான் வணிகக்காரன்!

எல்லாம் கனவாகவே இருக்கிறது!

எல்லா சுயகட்டுப்பாடும் பாழாய் போனது – வணகக்காரனின் தந்திரத்திற்கு முன்னால்

எல்லாக் குப்பைகளும் வீட்டினுள் அரங்கேறியது – சந்தோஷத்தை தவிர

எல்லாம் புதிது புதிது – மாதந்தோறும் வாங்கிய ஊதியத்தை தவிர

எல்லாம் விட்டில் உள்ளது – அனுபவிப்பதற்கு மனதில்லாமல்

எல்லாம் கனவாகவே இருக்கிறது!

அன்றே ஐன்ஸ்டீன் சொன்னான் – வேண்டாத குப்பைகள் இவ்வளவு என்று! எது பிடித்தது? இந்த வணிக வளாகத்தில் என்றதற்கு

எல்லாம் கனவாகவே இருக்கிறது!

விஞ்ஞானம் சொல்கிறது – உன் வாழ்க்கையே போட்டியின் ஆரம்பத்தில் தான் துவங்குகிறது.

ஆம் உண்மைதான் – கோடி விந்தணுக்கள் ஒரு கருமுட்டைக்காக.

ஒன்று மட்டும் ஜெயிக்கிறது – மற்றவை எல்லாம் தோற்றுப்போகின்றன.

அன்று ஜெயித்த நான், இன்று வரை அடிமையாகவும் தோற்றுப்போனவனகவும் இருக்கிறேன் படித்தும், சம்பாதித்தும்.

எல்லாம் கனவாகவே இருக்கிறது!

சந்தோசமும் கனவாகவே வந்து போகிறது.

ஆழ படித்தவன் பணத்திற்காக வேலை செய்கிறான்.

பணக்காரன் – பணத்தை வேலை செய்ய வைக்கிறான்.

படித்தவன் பணக்காரணாக ஆவது இல்லை! எல்லாவற்றிற்க்கும் காரணம் நானே!

-Ananth Prasath

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Kavithai : 

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *