Interesting Facts About Kamarajar - Black Gandhi | Tamil Thoughts

Interesting Facts About Kamarajar – Black Gandhi


பெருந்தலைவர் காமராஜர்

(For English Translation Scroll Down)

Interesting Facts About Kamarajar in Tamil/ Achievement / Thoughts :

அனைவருக்கும் வணக்கம். இன்று நம் வாழ்நாளில் மிகவும் முக்கியமான ஒரு நாள்.

நமது தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்தநாள்! (Our nationalist Gandhiji’s birthday)

இந்த நன்நாளில் காந்தியடிகளின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி, அவரது அனைத்து கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு அவரைப் போன்றே வாழ்ந்து அவர் பிறந்த நாளிலேயே மரணம் அடைந்த மாமனிதர்

– கருப்பு காந்தி

– காலா காந்தி

– கர்ம வீரர்

– பெருந்தலைவர்

– கல்விக்கண் திறந்த கமாராஜர்

அவரைப் பற்றிய ஒரு சில சம்பவங்களை தொிந்து கொள்வோம்!

Kamarajar Story in Tamil:

“பிறப்பது ஒரு சம்பவமாக இருக்கலாம், இறப்பு என்பது ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்” என்ற அடைமொழிக்கேற்ப வாழ்ந்தவர்.

காந்தி, நேரு, நேத்தாஜி, ராஜாஜி, படேல், திலகர், வா.உ. சி, பொியார் போன்ற பொிய வசதிபடைத்த குடும்பம் அல்லது உயர்கல்வி படைத்தவர்களுக்கு மத்தியில் இவை எதுவுமே இல்லாமல் தன் உழைப்பையும் உறுதியையும் வைத்து இமயம் வரை உயர்ந்தவர்.

 • தனக்கென ஒரு குடும்பம் வேண்டாம்…
 • தனக்கென ஒரு சொந்தம் வேண்டாம்…
 • தனக்கெண ஒரு சொத்து வேண்டாம்…
 • தனக்கென ஒரு நட்பு வேண்டாம்…
 • ஏன்? பெற்ற அன்னையின் அரவணைப்பு கூட வேண்டாம்
 • என்று பற்றற்ற ஞானியாக அரசியலில் திகழ்ந்தவர்.

அத்தகைய மாமனிதரை நாம் அறிவோம் நண்பர்களே!

Kamarajar History in Tamil:

கருப்பு காந்தி வரலாறு:

1903ம் ஆண்டு ஜீலை மாதம் 15ம் நாள் குமாரசாமி-சிவகாமி அம்மையார் தம்பதியினருக்கு முதல் குழந்தையாக பிறந்தார். “முதல் குழந்தைக்கு குல தெய்வத்தின் பெயர் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் தெய்வ குத்தமாகிவிடும்” என்று “காமாட்சி என்று பெயர் வைத்தாள் அவரது பாட்டி பார்வதி அம்மையார். ஆனால் தந்தை குமாரசாமியும், தாய் சிவகாமியும் “ராஜா” என்று செல்லமாக அழைப்பதையே விரும்பினார்கள். பின்னாளில் பாட்டி சூட்டிய “காமாட்சி” பெற்றோர் விரும்பிய “ராஜா” இரண்டையும் சோ்த்து “காமராஜ்” என்று அழைத்தார்கள்.

ஏடு தொடங்குதல்:

அந்த காலத்தில் குழந்தைக்கு ஐந்து வயதாகியதும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் முன் சரஸ்வதி பூஜை அன்று உறவினர்கள் அனைவரையும் அழைத்து ஒரு சிறப்பு விழாவாக கொண்டாடுவது வழக்கம். அந்த விழாவன்று தாய்மாமன் மடியில் குழந்தையைய் உட்காரவைத்து புத்தாடை அணிவித்து, அணிகலன்கள் பூட்டி, பூக்கள் சூட்டி, திண்ணைப் பள்ளிக்கு கொண்டு போய் சோ்ப்பார்கள். அவ்வாறே காமராஜர் கல்வியும் தொடங்கியது.

Kamarajar Education / Kalvi:

பிடி அரிசி பள்ளி:

ஒரு வருட காலமே திண்ணைப் பள்ளியில் படித்த காமராஜர், பிறகு விருதுநகரில் உள்ள ஆங்கிலப் பள்ளியான “சஷ்த்திரிய வித்தியாசாலை” பள்ளியில் சோ்ந்தார். இந்த பள்ளி அவரது வாழ்வில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பள்ளியே பின்னாளில் அவர் மதிய உணவுத்திட்டத்தை கொண்டுவருவதற்கு காரணமாக இருந்தது.

விருதுப்பட்டியில் (விருதுநகர்) மாடிக்கட்டிடத்துடன் கூடிய ஒரு இலவசப் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று நாடார் சமுகத்தினர் விரும்பினர். அதற்காக வியபாரிகள் அனைவரும் ரசிது போடும் போதே “மகிமை” என்று வசுல் செய்வது வழக்கம். அப்படி சோ்த்த பணம் கட்டடம் கட்டுவதற்கு போதியதாக இருக்கவில்லை. அப்போதுதான் இலவசப் பள்ளிக்கு கைக்கொடுக்க வந்தார்கள் விருதுப்பட்டி பெண்கள்.

அதாவது, ஊரில் இருந்த பெண்மணிகள் அனைவரிடமும் ஒரு மண்பானை கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு நேரமும் சமையல் செய்யும்போது “பிடி அரிசியைய்” அந்தப் பானையில் போட்டு சேமிக்க வேண்டும். வசதி குறைவானவர்கள் அளவாகச் சோ்த்தார்கள். வசதியான வீட்டுப் பெண்மணிகள் அள்ளி அள்ளி சோ்த்தார்கள். “சிறு துளி பெரு வெள்ளமாகி” அரிசி மூட்டை மூட்டையாக சேர ஆரம்பித்தது. அத்தனை அரிசியும் விற்கப்பட்டு இந்த பள்ளி கட்டப்பட்டதால் இதற்கு “பிடி அரிசி பள்ளி” என்றே பெயராயிற்று.

தந்தையின் மரணம்:

தன் இளம்வயதிலேயே அறியாப் பருவத்தில் தனது தந்தை குமாரசாமியைய் இழந்தார் என்பது பெரும் சோகம். சிறவயதிலே இருந்து மிகவும் செல்லமாக வளர்ந்ததால் “தந்தையின் இழப்பு” தொியக்கூடாது என்பதற்காகவே அவர் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து மிகவும் செல்லமாக வளர்த்தாள் தாய் சிவகாமியும் பாட்டி பார்வதியும். அதனால் காமராஜருக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைந்தது.

படிப்புக்கு முழுக்கு:

சஷ்த்திரிய வித்தியாசலை மிகவும்  கண்டிப்பான பள்ளி என்பதால் செல்லமாக வளர்ந்த காமராஜருக்கு படிப்பு கசப்பாக இருந்தது. அந்த சிறுவயதிலேயே படிப்பை விட பிராக்கு பார்ப்பதிலும், ஊரில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தார். இதனால் கோபமான அவரது மாமா கருப்பையா நடார், அவரது பள்ளிப்டிப்பை ஆறாவது முடிக்காமலேயே நிறுத்திவிட்டு, தனது ஜவுளிக்கடையில் சோ்த்துக் கொண்டார். அந்த வயதில், இது அவருக்கு ஒரளவு சந்தோசமாக இருந்தது.

எந்தத் தாய் தன் குழந்தை சிறுவயதில் படிப்பை நிறுத்துவதை விரும்புவாள். இதில் சிவகாமி அம்மையாருக்கும் விதிவிலக்கு அல்ல. அவரும் “கெஞ்சி கேட்டு, படிக்க போங்கய்யா….” என்ற போதும் “மூலைக்கு எட்டல…. போகப் பிடிக்கல” என்று சொல்லி பள்ளிப் படிப்புக்கு முற்றுகையிட்டு விட்டார் காமராஜர்.

பள்ளிப் படிக்கும் காலத்தின் சுவாரஷ்யமான விஷயங்கள் (The interesting things of schooling)

வயிற்றுப் பசி:

தனது இரண்டாம் வகுப்பு படிக்கும் போது தன் நண்பர் பெருமாள் வெகு தொலைவில் இருந்து வருவதால் பெரும்பாலும் அவர் தண்ணீரையே மதிய உணவாக எடுத்துக் கொள்வதை பார்த்து மனம் வருந்தினார். பிறகு தனது தாயாரிடம் இன்று முதல் நான் பள்ளியிலேயே மதிய உயவு சாப்பிடுகிறேன் என்று கூறி தினமும் மதிய உணவினை எடுத்து கொண்டு சென்று தன் நண்பர் பெருமாளுடன் பகிர்ந்து சாப்பிட்டு  இருவரும் பசியாறினார்கள். தன்னுடன் படித்த ஒரு நண்பன் பசியோடு இருக்கக்கூடாது என்ற காமராஜரின் இந்த சிறு வயது சிந்தனைதான், இந்த நாட்டு மாணவர்கள், மக்கள் அனைவரது வயிற்றுப் பசியயையும்  போக்கியது என்றே சொல்லலாம்.

சமமாக பகிர்ந்து அளித்தல்:

ஒரு முறை விநாயகர் சதூர்த்தி தினத்தன்று பள்ளியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது ஆசிரியர் அனைவரையும் வரிசையாக நிற்க்க வைத்து முறைப்படி வழங்காததால் முண்டியடித்து கொண்டு சென்றவர்களுக்கு பிரசாதம் எல்லாம் கிடைத்தது. எனவே நான் அதை வாங்கவில்லை என்று தன் பாட்டியிடம் கூறி வருத்தப்பட்டார்.

எல்லோருக்கும் எல்லாம் சமமாக கிடைக்க வேண்டும் என்ற குணம் சிறுவயதிலேயே அவரிடம் இருந்தது. அதுமட்டுமின்றி தனக்கென எதையும் அள்ளிக் கொளளும் அற்பக்குணம் இல்லாதவர் என்பதை இந்த சம்பத்தில் இருந்து அறிய முடிகிறது.

பயம் அறியாத வயது:

ஒரு முறை தனது வீட்டிற்கு பக்கத்தில் இருந்த கோயில் யானையைய் குளிக்க கூட்டிச் சென்றான் பாகன். எப்பொழுதும் அதன் துதிக்கையில் சங்கிலி இருக்க வேண்டும். பாகன் சங்கிலியைய் எடுத்து வர மறந்துவிட்டான். இதனால் யானைக்கு மதம் பிடித்து அங்கும் இங்குமாக ஆடத் தொடங்கியது. இதைக்க கண்ட மக்கள் நாலாப் பக்கமும் ஓடத் தொடங்கினர். இதைக் கண்ட காமராஜர் “இளம் வயது கன்று பயம் அறியாது” வேகமாக கோவிலுக்கு ஓடிச் சென்று சங்கிலியைய் எடுத்து வந்து யானையின் தும்பிகையின் மீது வீசினார். அவ்வளவுதான்! அதுவரை வெறியாட்டம் போட்ட யானை சாந்தமாக நின்றுவிட்டது. பக்கத்தில் சென்று தட்டிக் கொடுத்தார். காமராஜரின் இந்த வீரச்செயல் ஊர்முழுவதும் பரவியது.

துணிக்கடையில் வேலை:

பள்ளிப் படிப்பை தொடர விருப்பமில்லாமல் தனது தாய்மாமா கருப்பையா நடார் துணிக்கடையில் வேலையில் சோ்ந்தார். பகல் நேரங்களில் ஆட்கள் வருவது குறைவு என்பதால் அப்போது கடையில் இருக்கும் அனைத்து நாளிதல்களையும் ஆழ்ந்து படிக்கத் தொடங்கினார். அவரின் அடுத்தக்கட்ட வளர்ச்சி இந்தக் கடையில்தான் தொடங்கியது. ஆம், சுதந்திரப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி எப்படி செயல்பட்டுவருகிறது; யார் யாரெல்லாம் தலைவராக இருக்கிறார்கள்; என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்பதையெல்லாம் நாளிதல் படித்து தன் மனதில் பதியவைத்துக் கொண்டார். தான் கற்றுக் கொண்டதையும் தன் கருத்துக்களையும் அவ்வப்போது தன் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். அவ்வப்போது நடக்கும் பொது கூட்டங்களில் கலந்து கொண்டார். ஆரம்பம் முதல் முடியும் வரை கூட்டத்தில் பேசப்படும் கருத்துக்களை கவனத்துடன் கேட்பார்.

Kamarajar Good Deeds:

அரசியல் ஆர்வம்:

தன் தாய் சிவகாமி அம்மையார் அவ்வப்போது அறிவுரை கூறினார்.

 • அரசியல் சோறுபோடாது
 •  சின்ன வயதினர் யாரும் அதில் கலந்து கொள்ள கூடாது
 •  தேவையில்லாத சிக்கல் வரும்
 •  போலீஸ், சிறைவாசம் என்று வாழ்க்கை கெட்டு போகும்
 •  பணம் சமபாதிக்கவே முடியாது
 •  வாழ்க்கை சிறப்பாக அமையாது

காமராஜர் அனைத்தையும் கேட்டுக் கொண்டாரே தவிர, செயல்பாடுகள் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை. நாளுக்குநாள் இன்னும் அரசியல் ஆர்வம் அதிகரித்தது.

காங்கிரஸ் உறுப்பினர் (Member of Congress):

காந்தியடிகளின் சத்தியாகிரகத்தை நசுக்க, 1919ல் – ரௌலட் சட்டத்தை இயக்கியது வெள்ளையர் அரசு. ஆர்பாட்டக்காரர்களை, அரசை எதிர்ப்பவர்களை, விசாரணையின்றி ஜெயிலில் அடைக்க வழிவகுத்தது. பத்திரிக்கை குரல்வலையைய் நெறித்தது. நாடெங்கும் இதற்கு எதிரான ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன.

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அந்த இடத்துக்கு ஜெனரல் ரெஜினால்ட் டயர் என்பவர் 100 வெள்ளையரையும் 50 இந்தியப் சிப்பாய்களையும் அனுப்பி அனைவரையும் கொன்று குவித்தார். ஒரே இடத்தில் 379போ் கொல்லப்பட்டனர். இதுவே ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆகும். இந்த செய்தியைய் சுதேசமித்திரன் நாளிதளில் படித்து அறிந்த காமராஜர் மனம் உடைந்து பித்துப் பிடித்தவர் போல் இருந்ததார்.

ஒரு புறம்,

விதவையான தன் தாய்!

வயதான தன் பாட்டி!

இளம் வயது தன் தங்ககை…. குடும்பசூழல்!

மறு புறம்,

நாடுபடும் வேதனை!

என்ற தீவிர சிந்தனையில் இருந்தார்.

இனியும் பொறுப்பதற்கு இல்லை என்று சுதந்திரப் போராட்டத்தில் தன்னை அர்பணித்துக் கொண்டார். போராடுவதற்கு வசதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியல் உறுப்பினாராக சோ்ந்தார். இதுவே அவரது அரசியல் வாழ்வின் தொடக்கமாகும்.

Interesting facts about K Kamarajar

About Kamarajar in Tamil

As we Celebrated Gandhi Jayanti (Mahatma Gandhi’s Birthday) this month, I wanted to inform you that there was a person who followed Gandhiji’s principles, accepting all his views and lived like him and the man who died on the same date which Gandhiji was born. The men with Principles, the Kingmaker with “K”, the Black Gandhi- he is none other than K Kamarajar. The great man was born on July 15, 1903, to Kumaraswamy-Sivagami, he was the first child of the couple. His grandmother Parvathi had named him “Kamatchi” But Father Kumaraswamy and Mother Sivagamy wanted to call him “Raja”. Later, the Kamatchi” changed to Kamarajar.

Kamarajar History in Tamil

The Rowlatt Act (The Anarchical and Revolutionary Crimes Act) to suppress Gandhiji’s Satyagraha, Passed by the Imperial Legislative Council in Delhi. The Act Named after Sir Sidney, Rowlatt (President Rowlatt Committee) which authorized the government to imprison any Person (protester) without trial, based on the suspect of violence. The newspaper rang a voice. All the March and public meetings took place throughout the country.

On April 13, 1919, men, women and children gathered in Jallianwala Bagh in Amritsar, Punjab. General Reginald Dyer, the person who had sent 100 white soldiers and 50 Indian soldiers to the area to kill everyone. 379 people were killed in one place; this is the Jallianwala Bagh massacre.

The news spread through the newspapers and it stunned the entire nation and he was like a man who broke his mind. It was the turning point for nations freedom fight and to put an end to British rule, on the other hand, he had to take care of his widowed mother, old grandmother, younger sister.

The pain of living was in serious thought. He devoted himself to the freedom struggle not to bear anymore. Tamil Nadu Congress became a member of the CPI (M) in order to fight. This is the beginning of his political career.

Kamarajar Story in Tamil

Kamrajar Participated in Salt Satyagraha and was imprisoned for 2 years in 1930. Kamarjar became the CM of Tamilnadu in 1954 after the Indian Independence. The Best thing about Kamarajar’s rule in Tamilnadu was that he made sure that education was reaching for all the poor and he believed that only education has the power to change the societal Barriers, including Local Development Works, Women Welfare, rural Welfare, National Extension Scheme, Public Health, Revenue Management and Local Administration. K Kamarajar was a sensible man known for his simplicity and Integrity.

“Born to be an event, death must be a history”.

-K Kamarajar

பிற கட்டுரைகள் (Other Inspirational Thoughts):

பிற காணொளிகள் (Other Videos):

Interesting Facts About Kamarajar – Black Gandhi:

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your email address will not be published. Required fields are marked *