Integrity | Lal Bahadur Shastri in Tamil | Tamil Thoughts

Integrity | Lal Bahadur Shastri


அன்பிற்குரிய இனிய தமிழ் நண்பர்களே,

Integrity | Lal Bahadur Shastri

(Scroll Down For English Translation)

Interesting Facts about Lal Bahadur Shastri

Integrity / Quotes :

இன்றைய தினம் ஒரு தகவலில் நாம் பார்க்கக் கூடிய தலைப்பு நோ்மை (Integrity). இ்ந்த வார்த்தை மிகவும் ஆழம் பொறுத்தியது. இதன் முழு அர்த்தத்தை அவ்வளவு சுலபாக நம்மாள் புரிந்து கொள்ள முடியாது. இந்த நோ்மை (Integrity) என்ற வார்த்தையைய் பெறு நிறுவனங்களில் ஒரு இலக்கு அல்லது குறிக்கோள் சொல்லாக பயன்படுத்துகிறார்கள். எப்பொழுதும் இந்த நோ்மை என்ற வார்த்தையைய் சொல்லும்  பொழுதும், அந்த வார்த்தைக்கே இலக்கணமாக வாழ்ந்தவர் “லால்பகதூர் சாஸ்திரி” அவர்கள்.

Lal Bahadur Shastri biography

லால்பகதூர் சாஸ்தரி மற்றும் நோ்மை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:
பிறப்பு மற்றும் இளமைக்காலம்:

1904ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் காந்தி பிறந்த அதே நாளில் வாரணாசியில் முகல்சராய் என்னுமிடத்தில் ஒர் இரயில்வே குடியிருப்பில் மிகவும் ஏழ்மை நிலையில் பிறந்தார்.பிறப்பு என்பது ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு என்பது பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டும்” என்பது போல் நோ்மையாக வாழ்ந்தவர். பள்ளியில் படித்தபோது புத்தகம் வாங்க பணமின்றி உடன் படித்த மாணவனின் புத்தகத்தை இரவலாக பெற்று இரவு முழுவதும் தெரு மின்கம்பத்தின் அடியில் உட்கார்ந்து ஒரு நோட்டு புத்தகத்தில் அதை நகலெடுத்த இளைஞர் லால் பகதூர். அதை ஏற்க மறுத்து அடித்த ஆசிரியரிடம், நான் புத்தகம் வாங்கும் நிலையில் இல்லாத தந்தையை இழந்த அநாதை பையன்” என்று கூறி ஆசிரியரை நெகிழ வைத்தார். காசி வித்யாபீடத்தில் படித்தபோது, தாய் உடல்நலமற்றிருக்கும் செய்தியறிந்து, படகில் செல்ல பணமின்றி கங்கையில் நீந்திச் சென்று முகல்சராயை அடைந்த ஏழ்மையானவர் அவர்.

திருமண வாழ்க்கை:

தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் இருந்து சாஸ்திரி அவர்கள் கதர் ஆடையையே அணிந்தார். தனது திருமண நாலன்று மணமேடையில் புரோகிதர் தனது மனைவிக்கு ஏழு அறிவுரைகள் கூறினார். மணமகன் சாஸ்திரி, நானும் ஒரு அறிவுரை வழங்க விரும்புகிறேன். இன்று முதல் நீ கதரை மட்டுமே அணிய வேண்டும்”. இது என் எட்டாவது அறிவுரை என்றார். முதலிரவில் தனது மனைவி கதராடை அணியாததால் மனைவியைய் அறையில் இருந்து வெளியேற்றினார். சாஸ்திரியின் தங்கை தனது கதர் ஆடையைய் கொடுத்தபின், அதை அணிந்து கொண்டு திரும்பவும் அறைக்குள் நுழைந்தார். ஏற்றுக் கொண்ட கொள்கையிலிருந்து எந்த நிலையிலும் லால்பகதூர் வழுவியதில்லை.

அரசியல் வாழ்க்கை:

சாஸ்திரி அவர்கள் விடுதலை வேண்டி ஏழு முறை சிறை சென்றார். 1952ம் ஆண்டு நேரு அமைச்சரவைியல் இரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை இலாகா சாஸ்திரி அவர்களுக்கு வழங்கப்பட்டது. மெகபுப்நகர் மற்றும் அரியலூர் இரயில் விபத்து காரணங்களுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று தனது பதவியிலிருந்து விலகி மக்களின் மனதில் இடம் பிடித்தார். ஒரு முறை இரயில்வே அமைச்சராக இருந்த பொழுது, இரயிலைப் பிடிப்பதற்காக காரில் விரைந்தார். சாஸ்திரி அவர்கள் வருவது அறிந்த இரயில்வே கார்டு சாஸ்திரி வருகைக்காக இரயிலை தாமதப்படுத்தினார். தன் வருகைக்காக இரயிலை தாமப்படுத்தியதற்காக இரயில்வே கார்டை பணிநீக்கம் செய்தார். “கோடிக்கணக்கான மக்களில் தன்னையும் ஒருவராக எப்போதும் பாவித்த அந்த உயர்ந்த மனிதர், பதவியின் பொறுட்டு வழங்கப்படும் சலுகைகளை வெறுத்தார்.

நோ்மையின் இலக்கணம்:

ஒரு முறை காஷ்மீரில் கலவரம் வெடித்தபோது நிலைமையை நோில் கண்டறிய சாஸ்திரியைய் அனுப்ப நேரு முடிவு செய்தார். அப்போது தன்னிடம் “உல்லன் கோட்” இல்லாததால் வேறு ஒருவரை ஸ்ரீநகருக்கு அனுப்புமாறு வேண்டினார், சாஸ்திரி. நேரு தன்னுடைய உல்லன் கோட்டை சாஸ்திரி அவர்களுக்கு இரவல் கொடுத்தார். தான் குள்ளமாக உள்ளதால் தனது கணுக்காள்களை தொட்டுக் கொண்டு இருந்தது. நண்பரின் ஆலோசனைப்படி தையல்காரரை வரவழைத்து, அந்தக் கோட்டை மாற்றி தைக்கச் செய்தார். மத்திய மந்திரியாக இருந்த போது தைத்து அணிந்த அதே கோட்டை தான் பிரதமராக ரஷ்யா சென்றபோதும் அவர் அணிந்திருந்தார். மகாத்தாவின் வழியில் நடந்து “நோ்மையின் இலக்கணமாக” வாழ்ந்த மாமனிதர்.

சாதாரண மனிதர்:

அவர் பிரதமராக இருந்த பொழுது அவரால் வளர்த்து ஆளாக்கப்பட்ட ராம்ஸ்வரூப் என்ற தலித், பிரதமர் வீட்டிற்கு தரமான அரிசியை வாங்கி வந்தார். அந்த அரிசியை பார்த்த சாஸ்திரி “ராம்ஸ்வரூப் ஒரு சாதாரண மனிதரால் இது போன்ற அரிசியை விலைக்கு வாங்க முடியாது, இதை திருப்பி கொடுத்து விட்டு சாதாரண மக்கள் சாப்பிடும் அரிசியை வாங்கி வா” என்றார். இப்படி ஒரு நோ்மையின் சின்னமாக வாழ்ந்த பிரதமரை நமது இந்தியா இனி பார்க்க முடியுமா??

சாஸ்திரி தனது குழந்தைகளை மிகவும் எளிமையாக வாழப் பழக்கினார். தனது பிரதமர் பதவியின் மூலம் தனது குழந்தைகள் எந்தச் சிறப்பு சலுகையும் அடைவதை அவர் விரும்பியதே இல்லை. தனது மகன் அனில் சாஸ்திரி டெல்லி பல்கலைக்கழகம் ஸ்டீபன் கல்லூரியில் சோ்வதற்கு விண்ணப்பித்தார். இடம் கிடைத்ததும், கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் அனில் நின்றார். நீ்ண்ட நேரம் நின்ற அவர் வெயில் தாங்காமல் மயக்கி கீழேவிழந்தார். உடனே கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பேராசிரியர்கள் முதலுதவி அழித்து தனது முகவரியைய் கேட்டனர். “என் தந்தை லால்பகதூர் சாஸ்திரி, என் முகவரி – எண் 1, மோத்திலால் நேரு மார்க்” என்றதும் அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர். இன்று அனில் சாஸ்திரி போன்றவர்களை எங்காவது காண முடியுமா?

தனது மூத்த மகனின் விருப்பப்படி ஹரிகிரிஷனை லண்டனில் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிக்க வைத்தார். படிப்பு முடிந்ததும் ஹரிகிரிஷன் இந்தியா திரும்பினார். ஒரு நாள் பிரபலத் தொழில் நிறுவனத்திடமிருந்து ஹரிகிரிஷனுக்கு நியமனக் கடிதம் வந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த ஹரி தந்தையிடம் சென்று கடிதத்தைக் காட்டினார். தன் மகனை கனிவாகப் பார்த்த சாஸ்திரி, மகனே… இந்த நியமனம் உனக்கல்ல; பிரதமரின் மகனுக்காக கொடுக்கப்பட்ட நியமனக் கடிதம், இதை நீ ஏற்கக்கூடாது என்பது என் கருத்து” என்றார். ஹரிகிரிஷன் சாஸ்திரி அந்த நியமனக் கடிதத்தை கிழித்தெறிந்தார்.

சாஸ்திரி பிரதமராக இருந்தபொழுது தனது குடும்ப பயன்பாட்டிற்காக ஒரு சிறிய ஃபியட் கார் தவணை முறையில் வாங்கப்பட்டது. சாஸ்திரி திடீர் மரணத்தைச் சந்தித்தபின்பு, அவருடைய குடும்பத்தால் மாதத் தவணையைச் செலுத்த முடியாத நிலையில், கார் கடன் வாங்கப்பட்ட நிறுவனத்திடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

சாஸ்திரி என்றால் அரசியில் அகராதியில் எளிமை(Simplicity), நோ்மை (Integrity), உண்மை (Truthful), ஒழுக்கம் (Virtue) என்று பொருள்.

Integrity | Lal Bahadur Shastri

Today we see “the Integrity” as just a word, but the word has very deep meaning and we cannot understand the whole meaning just like that.

The term “integrity” is used as a target or object word for corporate entities even there is the certain organization it’s the Vision & Mission Statement and it’s the promising word to the customers, stakeholders, employees and whomever part of the organization.

“Birth can be an event, but death must be history” -APJ Abdul Kalam

Some interesting facts about Lal Bahadur Shastri which is a role model for “Integrity”.

Who was Lal Bahadur Shastri?

Lal Bahadur Shastri Early Days

Born on October 2, 1904, Shastri was born in Mughalsarai at a railway station in Varanasi. When he was a student, he was not able to buy the school books and every day used to under the Street Lights. At his Early age, he lost his father. When Shastri was studying in Kashi Vidyapeeth, he got to know that, he lost his mother. Though he was not having enough money to go by boat, so he had swum on the Ganges river and reached home.

Married Life

Lal Bahadur Shastri married Lalita Devi, the youngest daughter of Ganesh Prasad. Shastri was wearing only the khadi dress since being part of the national liberation struggle. On the wedding day, the priest said to his wife seven words of advice. As advice Groom Shastri said I also want to give you one more an advice. From today, you have to wear only the Khadi dress”. This is my eighth advice. At first day night, his wife had not worn the Khadi Dress so Shastri sent her out from the room. After Shastri’s sister gave her a Khadi Dress, she wore it and entered the room again.

Political Life:

At a young age, he was inspired by the stories and speeches of national leaders,
developed a desire to participate in the Indian Nationalist Movement. A speech of Mahatma Gandhi changed the course of his life and decided to actively participate in India’s freedom struggle.

At his Yong Age, Shastri went to jail seven times. On August 15, 1947, he became the Minister of Police and Transport. Impressed by his acts Jawahar Lal Nehru Invited Shastri to joint union cabinet as Railway Minister in 1952.

But then in 1956 he resigned from the post because of the tragedy rail accident in Ariyalur, Tamilnadu which he took the moral responsibility for the causes of the accident and resigned the post and took over the people’s mind.

Lal Bahadur Shastri Biography:

Nehru decided to send Shastri to find the situation in Kashmir once the riots broke out in Kashmir. At that time he did not have a woolen coat (jacket) because that requested Nehru to send someone else to Srinagar. Nehru lent his woolen coat to Shastri.

It was touched his knuckles because he is being short. By the advice of a friend, he brought the tailor and altered the jacket he was wearing the same jacket when he was the prime minister.

Ordinary man:

When he was prime minister, Ramaswaraop a Dalit (the person who brought up by Sastry), who bought quality rice for the Prime Minister’s house.

Shastri saw the rice and said, “Ramaswaroop do not buy the rice like this for an Ordinary man, return it back and buy the ordinary people’s rice.

“Can we see the Prime Minister of India as a symbol of such an ordinary man?

Shastri used to make his children live very simple. He did not want his children to get any special concessions through his prime ministerial position. His son Anil Shastri applied for admission at Stephen College, Delhi University.

After getting the call letter, Anil stood on a long line to pay the college/admission fee. He stood down a few hours and fainted and fell down due to waiting in the long queue. The professors who saw the situation immediately took him to the college hospital for the first aid and asked his address.

“My father Lal Bahadur Shastri, my address – Number 1, Motilal Nehru Mark” This led all were all in the surprise.

Hari Krishna Shastri was educated in Automobile Engineering in London. After completion of the study, he returned to India and received a letter of appointment from one of the famous industrial establishments. Hari was very happy and went to the Father and showed the letter.

Shastri, who saw this and said to a son this appointment is not for you; The letter of appointment given to the son of the prime minister and my opinion is that you should not accept it. At the Moment Hari Krishnan Shastri tore the letter of the appointment.

Can anyone be like Shastri today?

The man who walked in the way of Mahatma was the

“gem of the law”.

The superior man who always used himself as one of the millions of people and always dislike the concessions offered by the office.

Shastri bought a small Fiat car on installment for his family use while being prime minister. After the sudden death of Shastri, his family could not pay a monthly installment and returned the car to the loan company.

This led us to realize that Lal Bahadur Shastri lived all his life with simplicity, Truth, and Virtue. And this made us understand the clear meaning of Integrity.

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்.

இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

 


0 Comments

Your email address will not be published. Required fields are marked *