உயர்ந்தாள் சிற்பியென | The Great Sculptor | Tamil Thoughts

உயர்ந்தாள் சிற்பியென | The Great Sculptor


உயர்ந்தாள் சிற்பியென…!

Kavithai by arthi

பாவை….!

புவிமகளென பறைசாற்றியதன்

பலனோ..! பொறுமையை

புன்னகையில் ஏந்திய

பதுமை ஆகிவிட்டாள்…..!!

மௌனமே மங்கையரின்

மொழியென மொழிந்ததாலோ

மீட்க மறந்த மலரென

மண்ணில் மிதிபடுகிறாள்…!!

மண்ணில்  விழும் மழையாயினும்

மனதிற்கு மட்டற்ற மகிழ்வு

மட்டுமளிக்கும் மழலையின்

மறுவுருவம் கொண்டுவிட்டாள்….!!

வசனங்களும் வார்த்தைகளும்

வனிதையை வசைபாட

வதைகளை மனமேற்றாமல்

விதையென விண்ணை எய்திவிட்டாள்.!

சலித்து வாழ்வதல்ல வாழ்வு

சாதித்து வாழ்வதே வாழ்வென….!

செம்மையாய் இல்வுலகை அன்பால்

செதுக்கி உயர்ந்தாள் சிற்பியென…!

– Arthi 

arthibanu81297@gmail.com

Other Kavithai:
பிற காணொளிகள் (Other Videos):
Other Inspirational article in English

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்


0 Comments

Your email address will not be published. Required fields are marked *