
பூமித்தாய்தேடுகிறாள்…
அலைகளின்அழகேகரையில்விளையாடும்
பாதங்களைத்தட்டிச்செல்வதுதான்!
அடர்ந்தமரக்கிளைகளின்களிப்பே
அதன்நிழலில்நின்றுஉலாவும்மனிதனின்காட்சிதான்!
சிறுவர்களின்சீண்டுதலில்தோழமைகொண்ட
சிறுசெடிகள்தேடுகின்றதுதன்னைத்தட்டும்பந்துகளை…
தேவதைஊர்வலம்போல்தன்சிறப்பில்அழகாய்பூத்துநிற்கும்
மரங்கள்தேடுகிறதுதன்தினசரிரசிகரைகாணோமேஎன்று!
பூங்காக்களும்பழகிப்போனதுசெல்ஃபிக்கு!
நெடுஞ்சாலைபயணம், தட்டிச்செல்லும்இளங்காற்று
தனிமையாய்உலாவருகிறது!
ஆற்றங்கரைகளும்நொடிந்தபோனது – ஆம்
நீர்கொண்டகாலம்மகளிரின்கூட்டம் – வலையோசையோடு
ஆடைகள்துவைக்கின்றஓசை!
தண்ணீரோடு, தனக்குத்தெரிந்தஅத்தனைசாகசத்தையும்
செய்துகாட்டும்இளைஞர்கூட்டம்!
வறண்டகாலத்திலும்மறக்காமல்தஞ்சம்கொள்ளும்
மனிதன்ஆடுமாடுகளோடு!
யாரும்வரவில்லையே…
ஓசைகள்பலநூறுவந்தபோதும்
தன்குரலுக்குநிகருண்டோஎன்றுபோட்டிக்கொள்ளும்
காக்கைகூடவெறித்துக்கிடக்கும்தெருவில்கவலையாய்!
வேலைப்பளுவின்இடைவெளியில்ஜன்னலின்பார்வையில்
சீண்டுதலாய்சிறகடித்துதன்சுதந்திரவாழ்வைச்சுட்டிக்காட்டும்
பறவைகள்கூடஏதோபுரிந்தார்போல்மௌனமாய்!
தாயேஉன்சீற்றம்முறைதான்…
முறையாகவீட்டைஅலங்கரித்து,சுகாதாரமானஉணவுகொடுத்து
அழகாய்ஆடையுடுத்தப்பட்டு ,விளையாடப்பொம்மைகளும்தந்து
விருப்பம்போல்விளையாடுஎன்றபின்பும்,
அவ்வப்போதுஅறிவுறுத்திக்கொண்டேஇருப்பாய்
எதையும்வீணாக்காதே ,அசுத்தமாக்கிவிடாதே
நண்பர்களோடுசண்டைக்கொள்ளாதே…
அமைதியாய்முறையாய்விளையாடுஎன்று! – ஆனால்
அடங்கமறுத்தகுழந்தைகளுக்குப்பலனோ
அத்தனையும்பறிக்கப்படும், செய்ததவறுமறக்காமல்இருக்க
பதமும்பார்க்கப்படும். மிஞ்சியதுஎன்னவோ
சுவற்றுமுக்குதான்- கண்ணீரோடு
வெளிக்காட்டமுடியாதவேதனையும், தனிமையும்குமரிக்கொண்டு.
காலம்கனிய, குழந்தையும்தவற்றைப்புரிந்துகொள்ள
கட்டியணைத்தால்தாய்.
மீண்டும்அமர்த்தினால்அத்தனையும்கொடுத்து.
தாயேபுரிந்துகொண்டோம்! நாங்களும்!
காத்திருக்கிறோம் …
உன்அழைப்பிற்கு!
வேண்டியஅனைத்தும்நான்குசுவருக்குள் – ஏன்
கையளவுகைப்பேசியில்கொண்டுவந்தபோதும்
அறிந்தோம்!
இவைஅனைத்தும்சலித்துவிடும்
உன்பிரம்மாண்டத்திற்குமுன்பு!
பட்டியலிட்டஆசைகளும்கையளவுக்குசுறுங்கிவிட்டது
வயிற்றுப்பசிக்குஉண்டால்போதும்அதுவும்
ஆரோக்கியஉணவு – பக்குவம்வந்தது
ஆடம்பரதேவைகள்எட்டிப்பார்க்கக்கூடவெட்கம்கொள்கிறது
பட்டணத்தார்சுகாதாரம்தேடிகிராமத்தில்
வேண்டியநேரம்கிடைத்தும்பேசாமல்அமைதியாய் – ஆம்
கருவிகளோடுவாழ்ந்துமறந்துவிட்டகலை
மனிதர்களோடுஉரையாடல்!!
ஆனால்ஒன்றுமட்டும்உண்மை
இனிவரும்தலைமுறையில்நல்லதொருமாற்றம்வரும்!!!
இறைவா!
பூமித்தாயும்தேடுகிறாள்…
இனியும்வேண்டாம்தண்டனை
உன்அருளால்இவ்வேதனைகள்ஒடுங்கட்டும்!
நாளைவிடியல்நல்லதாய்இருக்கட்டும்!!!
By
Krishna Priya Mylswamy
04-04-2020 9:30 AM
0 Comments