சுட்டொிக்கும் ஆசை | Burning Desire in Tamil | Tamil Thoughts

சுட்டொிக்கும் ஆசை | Burning Desire in Tamil


Burning Desire (Aasai): உலக வரலாற்றைப் பார்த்தால் சாதனையாளர்கள் யாருக்குமே வெற்றிக்கான சூழ்நிலை அமைந்திருந்ததே இல்லை. அவர்களுடைய சுட்டொிக்கும் ஆசைதான் அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஆசையானது வெறும் ஆசையாக மட்டுமல்லாமல் தங்களது நாடி, நரம்புகள், இரத்த ஓட்டம் எல்லாவற்றிலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தது. – சுட்டொிக்கும் ஆசை 

வெற்றிகான சூழ்நிலைகள் எங்கும் உருவாகவில்லை. அவர்கள்தான் உருவாக்கினார்கள். வெற்றிபெற விரும்புவர்கள்தான் அதற்கான சூழலை அவர்கள்தான் உருவாக்க வேண்டும்.

உணர்ச்சியோடும், தெளிவான நம்பிக்கையோடும் ஆழ்மனதிற்குள் (Subconscious) அனுப்பப்படுகின்ற எண்ணங்கள் (Thoughts) மட்டுமே வெற்றியாக நமக்குத் திரும்பிவரும் (Victory).

ஆசை என்றால் என்ன – Tamil Motivation

 • இயேசு, முகமதுநபி போன்ற உலகத்தையே மாற்றிய சக்திகள் ஆரம்ப காலத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
 • ஷேக்ஸ்பியர் குதிரை லாயத்தில் குதிரைச் சாணம் அள்ளிக் கொண்டிருந்தார்.
 • அமொிக்காவின் 16வது ஜனாதிபதியான அபிரஹாம் லிங்கன் சட்டம் படிப்பதற்காக ஸ்டூவர்ட் என்பவரிடமிருந்து புத்தகங்கள் (கடன்) வாங்க நீயுசேலம் என்ற ஊரிலிருந்து 32 கிலோமீட்டர் நடந்து போக வேண்டியிருந்தது! ஒரு முறையல்ல, பலமுறை!
 • வியன்னாவின் தெருக்களில், படங்கள் தீட்டி வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தான் சிறுவன் ஹிட்லர்.
 • நியுட்டனும் சிறுவயதில் மாடு மேய்த்தார்.
 • உலகப் பெரும் கோடீஸ்வரர்களான ஆன்ட்ரூ கார்னிஜ், ராக்ஃபெல்லர், ஹென்றி ஃபோர்டு ஆகியோர் முறையே 4, 6, 21 டாலர்களை வாரச் சம்பளமாக பெற்றுக்கொண்டிருந்தனர்.
 • மளிகைக் கடையில் ஆரம்பத்தில் வேலைபார்த்தார் பொ்னார்ட் ஷா (Bernard Shaw).
 • ராக்ஃபெல்லர், ஈஸ்ட்மன், தாமஸ் லிப்டன் முதலிய கோடீஸ்வரர்கள் எல்லாம் குடிசையில் பிறந்து வளர்ந்தவர்கள்.
 • எளிய குடும்பத்தில் பிறந்து, காது கேளாத நிலையில் இருந்த டாம் தான் பின்னாளில் உலகம் போற்றப்பெற்ற விஞ்ஞானி தாமஸ் ஆல்வாய் எடிசன்.
 • ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து தனது கட்டுரைகளை பத்திரிகைக்களுக்கு அனுப்பி ஒன்று கூட பிரசுரிக்காமல், இறுதியாக எழுதிய நாடகம்தான் உலக மேதையாக மாற்றியது பொ்னாட்ஷாவை.
 • தினமும் பள்ளி சென்றுவிட்டு தன் தாய் வீடு வரும்வரை, கோவில் திண்ணையில் சுண்ணாம்பு கல்லில் சூத்திரங்களை எழுதி பார்த்தவர் தான் பின்னாளில் கணித மேதை ராமானுஜர்.

 

திறமையுள்ளவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறான். ஆனால் ஒரு மேதை வாய்ப்புகளை உருக்குகிறான்” என்பது முதுமொழி.

 

தனது உணர்சியோடும், தெளிவான நம்பிக்கையோடும் நமது ஆழ்மனதிற்குள் அனுப்பப்படும் எண்ணங்கள் நம்மை வெற்றியாளானக்குகிறது. இங்கு கூறப்படும் ஆழ்மனது வேறு. நமது வெளிமனது (Conscious) வேறு. உதாரணமாக, ஒரு அழகிய காரை பார்க்கிறோம் அந்த ஒரு நிமிடம் நமது மனதில் தோன்றும் எண்ணம் நாம் இந்த காரில் சென்றால் எப்படி இருக்கம். இது வெளிமனது. இதற்கு அப்பாற்பட்ட இன்னொரு மனது உள்ளது. இதனை பிரபஞ்ச மனம் (Unconscious). இதை பின்னால் பார்ப்போம். இந்த ஆழ்மனதில் தான் கொண்ட நம்பிக்கையின் மூலம் ஒரு உரையாற்றி அதன் மூலம் பத்தாயிரம் மில்லியன் டாலர் பெற்று ஒரு கல்லூரியைய் ஒருவர் கட்டினார் என்றார் என்றால் எத்தகைய ஆழ்மன நம்பிக்கை.

 

கொன்சாலஸ் என்ற ஒரு பாதிரியார் இருந்தார். அவர் தவறுகள் இல்லாத ஒரு கல்விக்கூடத்தை நிருவ ஆசைப்பட்டார். அதற்கு அவருக்கு பத்து மில்லியன் டாலர்கள் தேவைப்பட்டன. ஒரு பாதிரியாரிடம் என்ன இருக்கும்?

நீளமான ஒரு கவுன் இருக்கும். இரண்டு அல்லது மூன்று சிலுவைகள் இருக்கும். அவற்றை விற்றால் ஆயிரம் இந்திய ரூபாய்கள் கூட தோறாது. ஆனால் பத்து மில்லியன் டாலர் செலவில் ஒரு கல்விக்கூடம் அமைக்க அவர் ஆசைப்பட்டார். இது பேராசையாகத் தொியவில்லையா? ஆம்.

ஆசை தத்துவம் (சுட்டொிக்கும் ஆசை)

ஆனால் அந்த ஆசையில் ஒரு சமூக அக்கறை இருந்தது. அதுமட்டுமல்ல. அந்த ஆசையை அவர் தனது பொருளாதார நிலையை கணக்கில் வைத்து விட்டுவிடவில்லை. ஒவ்வொரு நாள் இரவுப் படுக்கைக்குச் செல்லும் போதும் அவர் அந்த ஆசையோடு படுத்தார். மறநாள் கண்விழிக்கும்போது அந்த ஆசையோடு கண்விழித்தார். அது அவருடைய கொந்தளிக்கும் ஆசை. இந்த ஆசையை அவர் திரும்பதிரும்ப நினைத்துநினைத்து செல்லம் கொடுத்து, கட்டியணைத்து வளர்த்தார்.

கொந்தளிக்கும் ஆசையின் (Bubbling Desire) ஒரு குணம் என்னவெனில், ஒரு குறிப்பிட்ட காலம் சென்றவுடன் அது வெறும் நினைப்பு என்ற நிலையைத் தாண்டி அந்த ஆசையை நிறைவேற்றக்கூடிய சூழ்நிலையைக் கொணடுவரக்கூடிய செயல்களை செய்வதற்குத் தூண்டிவிடும். பூமியைத் தோண்டிக்கொண்டே போனால் ஒரு குறிப்பிட்ட தூரம் போனவுடன் தண்ணீர் கிடைப்பது மாதிரி. அதாவது அந்த குறிப்பிட்ட காலஅவகாசத்துக்கு மேல் அந்த ஆசை கொண்டவனால் அவன் விரும்பினாலும் சும்மா இருக்க முடியாது. செயல்படத் துவங்கிவிடுவான்.

 

அந்த நேரம் கொன்சாலஸீக்கும் வந்தது.  அவரும் செயலில் இறங்க ஆரம்பித்தார். என்ன செயல்? அவர் முடிவு செய்தார். அதாவது அவரை முடிவு செய்ய வைத்தது அந்த ஆசை. இனிமேல் வெறும் சிந்தனை போதாது. இந்த பத்து மில்லியன் டாலர் இன்னும் ஒரு வாரத்தில் வந்தாக வேண்டும். இது தான் அவர் முடிவு? தேவாலயத்தில் கூடும் கூட்டத்தினரிடம் சொற்பொழிவு நிகழ்த்த முடியும். அவரும் அதைத்தான் செய்ய முயன்றார். அவர் முடிவு செய்தார். ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும். அதன் தலைப்பு “என்னிடம் பத்து மில்லியன் டாலர் இருந்தால்”. அவ்வளவுதான். இந்த பேச்சைக் கேட்டு யாரவது அந்தப் பணத்தைத் தர முன்வரலாம். இது முதல் கட்ட முயற்சி.

 

அதற்கான சொற்பொழிவை அவர் தயார் செய்தார். சொற்பொழிவாற்ற மேடையில் ஏறியதும் தான் தொிந்தது, சொற்பொழிவுக்கான குறிப்புகளை அவர் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது. அதனால் என்ன? உண்மையில் அதற்கான அவசியமே அவருக்கு இல்லை. அந்த சொற்பொழிவைத்தான் அவர் கடந்த இரண்டு வருடங்களாக தயார் செய்து கொண்டிருந்தாரே? தன் மனதில் இரண்டு வருடங்களாக இருந்ததையெல்லாம் உருக்கமாக உணர்ச்சியோடு அவர் சொற்பொழிவாக்கிக் கொட்டினார். அவர் பேசி முடித்ததும் அவரிம் ஒருவர் வந்தார். “உங்கள் சொற்பொழிவைக் கேட்டேன். நீஙகள் ரொம்ப தெளிவாக இருப்பதாக எனக்குப் படுகிறது. நாளைக் காலையில் எனது அலுவலகத்துக்கு வந்தால் உங்களுக்கு பத்து மில்லியன் டாலர் தரப்படும்” என்று சொல்லி தனது முகவரியைக் கொடுத்துச் சென்றார் அந்த கோடீஸ்வரர். அவர் பெயர் ஆர்மர். முதலில் ஆர்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அமொிக்காவின் புகழ்பெற்ற இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் வரலாறு இது!

சுட்டொிக்கும் ஆசை 

கொந்தளிக்கும் ஆசை கொடுத்த பரிசு!!!

 

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
சுட்டொிக்கும் ஆசை | Burning Desire in Tamil :

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your email address will not be published. Required fields are marked *