யுகாதி விரதம் இருக்கும் முறை / UGADI FASTING
யுகாதி பண்டிகை என்பது தெலுங்கு மொழி பேசும் மக்களின் வருட பிறப்பு மட்டுமல்ல நல்ல காரியங்கள், புதிய தொழில்கள் அல்லது முயற்சிகள் துவங்குவதற்கு மிகவும் ஏற்ற நாளாகும்.
இந்துக்களின் புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களின் படி, இது முக்கிய வழிபாட்டு நாளாகும்.
To Know More About - CSL PLASMA PROMO CODE 2024
யுகாதி நாள், பிரம்ம தேவர் தனது படைப்பு தொழிலை துவங்கிய நாளாக கருதப்படுகிறது. இதனால் இந்த நாளில் துவங்கப்படும் ஒவ்வொரு காரியமும் வெற்றியாக முடியும் என்பத நம்பிக்கை.
அப்படிப்பட்ட உன்னதமான யுகாதி பண்டிகை நாளில் நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார்கள் என அனைவருடனும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சிகரமாக கொண்டாடி மகிழலாம்.
யுகாதி பச்சடி
யுகாதி பச்சடி என்பது அறுசுவையும் கலந்த ஒரு பச்சடி ஆகும். இதில் வெல்லம், வேப்ப இலை, வேப்பிலைக் காய், வேப்பம் பூ, புளிச் சாறு அல்லது புளி, மாங்காய் போன்றவை கலந்திருக்கும். இந்த பச்சடியை யுகாதி பண்டிகையின் சிறப்பு உணவாக கடவுளுக்கு படையலிடுகின்றனர்.
இது இன்பம் மற்றும் துன்பம் என அனைத்தும் கலந்த கலவையாக வாழ்க்கை இருக்கும் என்பதையே குறிக்கிறது. மேலும் பூர்ண போளி என்கின்ற இனிப்பு பண்டமும் சமைத்து படையலிடுவது வழக்கம்.
யுகாதி வழிபாடு
உகாதி நாளில் பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை அல்லது காலை 6 மணிக்கு முன் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
சாணம் அல்லது மஞ்சளால் விநாயகர் பிடித்து வைக்க வேண்டும். வெள்ளை எருக்கு விநாயகரை வீட்டில் வைத்திருந்தால் கெட்ட சக்திகள் விலகும் என்பது ஐதீகம்.
ஆகவே வெள்ளை எருக்கால் செய்யப்பட்ட பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். சாணம் அல்லது மஞ்சளால் ஆன பிள்ளையார் அல்லது வெள்ளை எருக்கால் செய்த விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி ஏதேனும் ஒரு நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.
உகாதி அன்று இபப்டி பிள்ளையாருக்கு தூப, தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளமாகும் என்பது நம்பிக்கை.
No comments: