ஜெயிலர் 2 டைட்டில் என்ன தெரியுமா? / JAILER 2 TITLE REVEALED
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம், ஜெயிலர். இப்படத்தில் மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, விநாயகன் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் ஆகியவை பெரியளவில் ஹிட் ஆகின.
படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. தயாரிப்பு நிறுவனமே ஜெயிலர் திரைப்படம் வசூலில் 500 கோடியை கடந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
ஜெயிலர் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்திற்கு 1.20 கோடி பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரையும், படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு 1.40 கோடி மதிப்புள்ள 'Porsche' காரை பரிசாக வழங்கினார். கூடவே இருவருக்கும் லாபத்தில் இருந்து தான் விருப்பப்பட்ட தொகையை காசோலையாகவும் கொடுத்தார்.
TO KNOW MORE ABOUT OF POCKET FM PROMO CODE 2024
இந்த நிலையில் தன்னுடைய இசை மூலம் படத்தின் வெற்றிக்கு பெருந்துணையாக நின்ற அனிருத்திற்கு எதுவும் வழங்கப்படாதது குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து அவருக்கு சொகுசு கார் மற்றும் காசோலையை வழங்கினார் கலாநிதிமாறன்.
இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அங்கும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
கிட்டத்தட்ட இந்தப்படம் உறுதியாக நடக்கும் என்று சொல்லப்படும் நிலையில், அந்தப்படத்திற்கு ஹூக்கும் என்ற டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
படத்தில் இந்த வார்த்தையை ரஜினி பல இடங்களில் பயன்படுத்தி இருப்பார். அந்த வார்த்தை ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சினிமா ஹீரோ ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதற்கு அடுத்தபடியாக ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் நடக்க இருக்கிறது. அண்மையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருந்தார். அத்துடன் படத்தின் தலைப்பு வருகிற ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார்.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற காமிக் கான் விழாவுக்கு சென்றிருந்த லோகேஷிடம் Thalaivar 171 படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய லோகேஷ் " Thalaivar 171 படத்துக்கான திரைக்கதை எழுதும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிடும்.
ரஜினிகாந்திடம் எப்போதும் போன் மூலம் தொடர்பில் இருந்து வருகிறேன். இந்த படத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். அடுத்த திட்டங்கள், பணிகளில் பிஸியாக இருப்பதால் சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டவர்களிடம் தொடர்பில் இருக்க முடியவில்லை." என்று கூறினார்
Thalaivar 171 படப்பிடிப்பு விரைவில் தொடங்கி 2025இல் மிக பிரமாண்டமாக திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் உலாவுகின்றன.
No comments: