TNPSC CURRENT AFFAIRS IMPORTANT TOPIC FROM 2022 - PART 11
தலிபான்கள் மேற்குலக நாடுகள் பேச்சு - நாா்வேயில் தொடக்கம்
- மேற்குலக நாடுகளின்
அதிகாரிகள், ஆப்கன் சிவில் சொசைட்டி பிரதிநிதிகள் ஆகியோருடன் தலிபான்கள்
நடத்தும் மூன்று நாள் பேச்சுவாா்த்தை நாா்வேயில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
- நாா்வே தலைநகா்
ஓஸ்லோவில் நடைபெற்றுவரும் இப்பேச்சுவாா்த்தையில் தலிபான்கள் தரப்பில்
வெளியுறவு அமைச்சா் ஆமிா் கான் முத்தகி தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது.
- ஆப்கானிஸ்தானை
தலிபான்கள் கைப்பற்றிய பின்னா் சா்வதேச நாடுகள் அந்நாட்டுக்கான உதவியை
நிறுத்தியுள்ளன. இதனால் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
- சா்வதேச நிதியுதவி
மற்றும் அங்கீகாரத்தை தலிபான் ஆட்சியாளா்கள் எதிா்நோக்கியுள்ள சூழலில்
இப்பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.
- இப்பேச்சுவாா்த்தையின்போது,
அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகளால் முடக்கப்பட்ட 10 பில்லியன் டாலா்
(சுமாா் ரூ.74,000 கோடி) நிதியை விடுவிக்கும்படி அமைச்சா் முத்தகி
வலியுறுத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
- நாா்வே இதற்கு முன்னா்
பல்வேறு நாடுகளில் நிலவும் பிரச்னைகள் தொடா்பாக இரு தரப்பினரிடையே மத்தியஸ்த
முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இப்போது ஆப்கன் பிரச்னை தொடா்பான
பேச்சுவாா்த்தையை நடத்துகிறது.
2021ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டி20 வீரர்
- 2021-ஆம் ஆண்டின்
சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை சர்வதேச
கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.
- டி20 கிரிக்கெட்டில்
பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 2021, 29 ஆட்டங்களில்
விளையாடிய ரிஸ்வான் 1,326 ரன்களைக் குவித்துள்ளார்.
- பேட்டிங் சராசரி 73.66.
ஸ்டிரைக் ரேட் 134.89. பேட்டிங் மட்டுமில்லாது கீப்பிங்கிலும் ரிஸ்வான்
அசத்தியுள்ளார்.
சிறந்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு விருது
- நாடு முழுவதும் பல்வேறு
மாநிலங்களிலும் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி உள்ளிட்ட பல தேர்தல்கள் வெவ்வேறு
காலக்கட்டங்களில் நடைபெற்று வருகின்றன.
- இந்த தேர்தல்களை சரியாக
நடத்தி முடிக்க மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகள் தேசிய தேர்தல் ஆணையத்தால்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இந்நிலையில் கடந்த
ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மாநில தேர்தல் அதிகாரிக்கு விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் சிறந்த தேர்தல்
அதிகாரியாக தமிழக மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- ஜனவரி 25ம் தேதி
டெல்லியில் நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது.
வெள்ளரி மற்றும் கெர்கின்ஸ் ஏற்றுமதியில் உலகிலேயே முதல் நாடாக இந்தியா
உருவெடுத்துள்ளது
- உலகில் கெர்கின்ஸ்
ஏற்றுமதியில் இந்தியா முதல் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 1,23, 846
மெட்ரிக் டன் அளவுக்கு வெள்ளரி மற்றும் கெர்கின்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது.
ஏப்ரல் முதல் அக்டோபர் (2020-21) வரை 114 மில்லியன் டாலர் அளவுக்கு
ஏற்றுமதியாகியுள்ளது.
- பதப்படுத்தப்பட்ட வேளாண்
பொருட்கள் ஏற்றுமதியில் 200 மில்லியன் டாலர் என்ற அளவை இந்தியா
தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கெர்கின்ஸ் என்றழைக்கப்படும் வெள்ளரி ஊறுகாய்
ஏற்றுமதியிலும் இந்தியா சாதனை படைத்துள்ளது.
- 2020-21-ல் இந்தியா 223
மில்லியன் டாலர் மதிப்பிலான 2,23,515 மெட்ரிக் டன் வெள்ளரி மற்றும்
கெர்கின்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது.
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாளை தேசிய பெண்
குழந்தைகள் தினம் குறித்த ‘உமாங்’ என்னும் ரங்கோலி விழாவுக்கு கலாச்சார அமைச்சகம்
ஏற்பாடு
- இந்தியாவின் 75 ஆண்டு
சுதந்திர தினம், அதன் பெருமைமிகு மக்களின் வரலாறு, கலாச்சாரம், சாதனைகளைக்
குறிக்கும் வகையிலான, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாளை
தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த ‘உமாங்’ என்னும் ரங்கோலி அலங்காரம்
செய்யும் விழாவுக்கு கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாள் ஒவ்வொரு
ஆண்டும் தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்த நிகழ்ச்சியில்
கலந்து கொள்ளும் குழுக்கள், சாலைகள் மற்றும் சதுக்கங்களில் ஒரு கிலோ மீட்டர்
தூரத்துக்கு ரங்கோலி அலங்காரங்களைச் செய்ய வேண்டும்.
- அவற்றுக்கு பெண்
விடுதலைப் போராட்ட வீரர்கள் அல்லது நாட்டின் பெண் முன்னோடிகளின் பெயர்களைச்
சூட்ட வேண்டும். நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ரங்கோலி
அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
- இந்த நிகழ்ச்சி மூலம்,
பெண் குழந்தைகள் தினம், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாட ஒரு
பெரும் வாய்ப்பாக அமையும்.
ஜப்பான் பிரதமருக்கு நேதாஜி விருது
- இந்திய சுதந்திர
போராட்டத்தில் பல்வேறு வீரர்கள் போராடிய நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
அவர்களின் முக்கியமானவராக திகழ்கிறார். ஆசாத் ராணுவத்தை உருவாக்கி
பிரிட்டிஷாரை அவர் எதிர்த்த போக்கு மக்களின் மனதில் எழுச்சியை
ஏற்படுத்தியது.
- ஜப்பான் உள்ளிட்ட
நாடுகளின் உதவியுடன் ஆசாத் ராணுவத்தை அமைத்து பர்மாவை கைப்பற்றி
இந்தியாவிற்குள் நுழைய ஆசாத் ராணுவம் செய்த முயற்சி இந்திய சுதந்திர போராட்ட
வரலாற்றின் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- இன்று நேதாஜியின்
125வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்திய அரசின் நேதாஜி விருதை
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இந்திய அரசு வழங்கியது.
- நேதாஜி இல்லத்தில்
நடைபெற்ற அவரது பிறந்தநாள் விழாவில் ஜப்பான் தூதரக ஜெனரல் நகமுரா யுடகா, அபே
சார்பில் விருதை பெற்றுக் கொண்டார்.
பியூச்சர் ஜெனரல் இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை
நெதர்லாந்து நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்
- பியூச்சர் ஜெனரல்
இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எப்ஜிஎல்ஐசி) பங்குகளை நெதர்லாந்து
என்வி ஜெனரல் நிறுவனம் (ஜிபிஎன்) வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ)
ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து எப்ஜிஎல்ஐசி-யில் ஜிபிஎன்-ன் பங்கு 49%ல்
இருந்து தோராயமாக 71% ஆக இருக்கும்.
- இந்த கொள்முதல்
எப்ஜிஎல்ஐசி-யில் தற்போதைய ஜிபிஎன்-ன் பங்குகளை அதிகரிக்கும். இதுதொடர்பான
சிசிஐ-யின் விரிவான உத்தரவு வெளியிடப்பட உள்ளது.
கரீப் பருவத்தில் (23.01.2022 வரை) 606.19 லட்சம் மெட்ரிக் டன் நெல்
கொள்முதல்
- 2021-22-ம் ஆண்டு கரீப்
சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் சுமுகமாக
நடந்து கொண்டிருக்கிறது.
- 2021-22 கரீப்
பருவத்தில், 23.01.2022 வரை, 606.19 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளது. குஜராத், அசாம், அரியானா, இமாச்சல் பிரதேசம், ஜம்மு
காஷ்மீர், ஜார்க்கண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட், தெலங்கானா,
ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், திரிபுரா, பாகர், ஒடிசா,
மகாராஷ்ட்ரா, சத்தீஷ்கர், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- குறைந்தபட்ச ஆதரவு
விலையில் ரூ.1,18,812.56 கோடி மதிப்பிலான நெல் கொள்முதல் மூலம், இதுவரை,
77.00 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
- 23.01.2022 வரை,
தமிழகத்தில் இருந்து, 7,43,077 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளது. 1,20,231 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மின்னணு உற்பத்திக்கான தொலைநோக்கு ஆவணத்தின் இரண்டாம் தொகுதியை மின்னணு
& தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியீடு
- 2026-க்குள் $300
பில்லியன் நிலையான மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி" என்ற தலைப்பில்
மின்னணு துறைக்கான 5 ஆண்டு செயல்திட்ட வரைபடம் மற்றும் இலக்குகள் ஆவணத்தை
இந்திய செல்லுலர் மற்றும் மின்னணு சங்கத்துடன் இணைந்து மின்னணு மற்றும் தகவல்
தொழில்நுட்ப அமைச்சகம் இன்று வெளியிட்டது.
- இரண்டு பகுதி தொலைநோக்கு
ஆவணத்தின் இரண்டாவது தொகுதி இதுவாகும். "இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியை
அதிகரித்தல் மற்றும் சர்வதேச மதிப்புச் சங்கிலிகளின் பங்கு" என்ற
தலைப்பில் நவம்பர் 2021-ல் முதல் தொகுதி வெளியிடப்பட்டது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஸ்குவாஷ் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க
கிறிஸ் வாக்கரை நியமிக்க அரசு ஒப்புதல்
- இரண்டு முறை உலக
ஸ்குவாஷ் சாம்பியன் பதக்கம் வென்ற கிறிஸ் வாக்கரை இந்த ஆண்டின் இறுதியில்
நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணிக்கு வெளிநாட்டு
பயிற்சியாளராக நியமனம் செய்ய மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு
அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- ஸ்குவாஷ் மற்றும்
மிதிவண்டி ஓட்டுதலில் இங்கிலாந்தின் சார்பாக போட்டிகளில் கலந்து கொண்ட
வாக்கர், 16 வாரங்களுக்கு இந்திய அணிக்கு பயிற்சியளிப்பார்.
- முன்னாள் இங்கிலாந்து
கேப்டனான வாக்கரின் நியமனம் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேர்வுக் குழு
மற்றும் ஸ்குவாஷ் ராக்கெட் கூட்டமைப்பு அதிகாரிகளால்
பரிந்துரைக்கப்பட்டது.
பெண் குழந்தை பாதுகாப்பு’ குறித்த இணையவழி கருத்தரங்கு – மகளிருக்கான தேசிய
ஆணையம் நடத்தியது
- பெண் குழந்தைகளின்
உரிமைகளை பிரபலப்படுத்தவும் அவர்களின் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உட்பட
பெண் குழந்தைகள் தொடர்பான பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை அதிகரிக்கவும்
தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று ‘பெண் குழந்தை பாதுகாப்பு’ குறித்த
இணையவழி கருத்தரங்கிற்கு மகளிருக்கான தேசிய ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
- இந்த ஆணையத்தின் தலைவர்
திருமதி. ரேகா சர்மா, ஹரியானாவின் முன்னாள் அமைச்சர் திரு.ஓ.பி.தங்க்கர்,
குழந்தைகளைப் பாதுகாப்போம் இயக்கத்தின் தலைவர் பிரக்யா வாட்ஸ் ஆகியோர் இந்தக்
கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினர்.
- மத்திய மகளிர் மற்றும்
குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் மகளிருக்கான தேசிய
ஆணையம், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கு அர்ப்பணிப்போடு
பணியாற்றுகிறது.
- இந்த அமைச்சகத்தின்
மூலம் 2008-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள்
தினம் கொண்டாடப்படுகிறது.
8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்;ரூ.1 லட்சம் காசோலை -
வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
- நாட்டின் 73 வது
குடியரசு தினத்தையொட்டி, தமிழகத்தில் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா
பதக்கம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில்
வழங்கப்படவுள்ளது.
- உயிருக்கு போராடியவரை
தோளில் தூக்கி சென்ற டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு விருது.
- திருவொற்றியூர் கட்டட
விபத்தின்போது,அப்பகுதி மக்களை காப்பாற்றிய திமுகவின் தனியரசுக்கு விருது.
- விழுப்புரம்,திருவெண்ணெய்நல்லூரில்
வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்புத்துறை வீரர் ராஜீவ்காந்திக்கு
விருது.
- கோவை வனக்கால்நடை உதவி
மருத்துவர் அசோகன் என்பவர் விருது பெறுகிறார்.
- மதுரை அருகே விபத்தில்
சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் என்பவருக்கு விருது.
- திருச்சி மணப்பாறை
அருகே நீரில் மூழ்கிய சிறுமியை காபடரிய தேதுலுக்கம்ப்பட்டியைச் சேர்ந்த 4 ஆம்
வகுப்பு சிறுவன் லோகித்திற்கு 2022 ஆம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா
பதக்கம் வழங்கப்படுகிறது.
- திருப்பூரில் நீரில்
மூழ்கிய 5 சிறுமிகளை காப்பாற்றிய சொக்கநாதன் மற்றும் சுதா ஆகியோருக்கு 2022
ஆம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா விருது வழங்கப்படுகிறது.
வீர தீர செயல்கள் புரிந்த 6 ராணுவ வீரர்களுக்கு 'சவுரிய சக்ரா' விருது
- குடியரசு
தினத்தை முன்னிட்டு வீர தீர செயல்கள் புரிந்ததற்காக ராணுவ வீரர்கள் ஆறு
பேருக்கு, 'சவுரிய சக்ரா' விருது வழங்கப்பட்டுள்ளது.
- ஆண்டுதோறும்
குடியரசு தின விழாவின்போது வீர தீர செயல்கள் புரிந்த ராணுவ வீரர்களுக்கு
விருது வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.
- இந்நிலையில்
இந்த ஆண்டிற்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்திய
ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான சவுரிய சக்ரா விருது ஆறு
வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் வீரமரணமடைந்த ஐந்து பேருக்கு
வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பயங்கரவாதிகளை
துணிச்சலுடன் சுட்டு வீழ்த்தி, வீர மரணமடைந்த நைப் சுபேதார் ஸ்ரீஜித்,
ஹவில்தார் அனில் குமார் தோமர், ஹவில்தார் பின்கு குமார், ஹவில்தார் கஷிரே
பம்மநல்லி, செபாய் மருப்ரோலு ஜஸ்வந்த் குமார் ரெட்டி ஆகியோருக்கு சவுரிய
சக்ரா விருது மரணத்துக்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.
- இவர்களைத்
தவிர கடந்த ஆண்டு ஜூலையில் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்
ராகேஷ் ஷர்மாவுக்கும் சவுரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
- இதேபோல்
19 பேருக்கு பரம் விஷிஸ்த் சேவா பதக்கம்; நான்கு பேருக்கு உத்தம் யுத்த சேவா
பதக்கம்; 33பேருக்கு அதி விஷிஸ்த் சேவா பதக்கம்; 84 பேருக்கு சேனா பதக்கம்
ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ராவுக்கு பரம வசிஷ்ட சேவா பதக்கம்
- டோக்கியோ ஒலிம்பிக்கில்
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அபினவ் பிந்த்ராவுக்கு
அடுத்தபடியாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இரண்டாவது ஹரியாணா வீரர். இதைக்
கௌரவிக்கும் வகையில், குடியரசு தின நாளில் அவருக்கு பரம வசிஷ்ட சேவா பதக்கம்
வழங்கப்படவுள்ளது.
- ஹரியாணா மாநிலத்தில்
குடியரசு நாள் அணிவகுப்பில் நீரஜ் சோப்ரா குறிப்பு
காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்த அணிவகுப்பில் 10 ஒலிம்பிக் வீரர்கள்
குறித்து காட்சிப்படுத்தப்படவுள்ளதாக ஹரியாணா அரசு தெரிவித்துள்ளது.
அம்பேத்கர், பகத்சிங் படங்களுக்கு மட்டும் அனுமதி! - டெல்லி முதல்வர்
அதிரடி அறிவிப்பு
- டெல்லியில் உள்ள
அனைத்து மாநில அரசு அலுவலங்களிலும் அரசியல்வாதிகளுக்குப் பதிலாக டாக்டர்
பிஆர் அம்பேத்கர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் ஆகியோரின்
புகைப்படங்கள் வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அறிவித்துள்ளார்.
- இனி அரசு அலுவலங்களில்
முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களையும் வைக்க
மாட்டோம் என்று குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில்
ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட டாங்கா தீவுக்கு நிதியுதவி அறிவித்த மத்திய அரசு
- சுனாமியால்
பாதிக்கப்பட்ட டாங்கா தீவுக்கு பேரிடர் புனரமைப்பு உதவியாக 2 லட்சம் அமெரிக்க
டாலர்களை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- கடந்த
சனிக்கிழமை பசிபிக் பெருங்கடல் நாடான டாங்கா அருகே, கடலடியில் உள்ள
எரிமலையில் ஏற்பட்ட திடீா் சீற்றம் காரணமாக சுனாமி ஏற்பட்டது. அதையடுத்து,
எரிமலைப் பிழம்பும், நெருப்பு மற்றும் சாம்பலும் கடலுக்கு வெளியே எழுந்தன.
- டாங்கா
தீவின் நிலைக்கு ஆழ்ந்த வருத்தங்களைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ள
மத்திய வெளியுறவுத்துறை கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியின் போது,
இந்தியா டாங்காவிற்கு ஆதரவாக நின்றதை குறிப்பிட்டுள்ளது.
225 பறவைகள் உள்பட சேலம் வன கோட்டத்தில் 147 பட்டாம் பூச்சி
இனம்கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு
- சேலத்தை
தலைமையிடமாக கொண்டு, செயல்பட்டு வரும் சேலம் வனக்கோட்டம், மிகவும் பழமை
வாய்ந்த வனக்கோட்டமாக திகழ்ந்து வருகிறது. தர்மபுரி, ஈரோடு, நாமக்கல்,
கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்டு சேலம்
வனக்கோட்டம் அமைந்துள்ளது.
- மாவட்டத்தில்
சேர்வராயன் மலை, ஜருகுமலை, பச்சமலை, கல்ராயன் மலை, கோதுமலை, பாலமலை, நகரமலை,
கஞ்சமலை என பல மலைகள் மற்றும் குன்றுகள் உள்ளன. அத்துடன் காவேரி, சுவேதா நதி,
சரபங்கா நதி, வெள்ளாறு, வசிஷ்ட நதி, ஆணைமடுவு ஆறு, திருமணி முத்தாறு,
காட்டாறு, கோமுகி நதி என சிறு, சிறு ஓடைகள் மற்றும் ஆறுகள் நீர் ஆதாரமாக
இருக்கின்றன.
- வனப்பகுதிகளில்
உள்ள விலங்குகள், பறவையினங்கள் குறித்து வனத்துறை சார்பில்
கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணிகள்
கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இதில், சேலம் வனக்கோட்டத்தில் 225
பறவையினங்களும், 147 பட்டாம்பூச்சி இனங்களும் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 73-வது குடியரசு தின விழா 2022
- நாட்டின்
வலிமையை பறைசாற்றும் வகையில் நடந்த அணிவகுப்பில் புதிய சீருடையுடன் ராணுவ
வீரர்கள் வீர நடை போட்டு சென்றனர்.
- தலைநகர்
டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத்
கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
- அவை
இந்தியாவின் ஆயுத வலிமையை பறைசாற்றும் வகையில் இருந்தன. ராஜ்புத் படை
பிரிவினர் ராஜபாதையில் மிடுக்குடன் அணிவகுத்தனர்.
- மெட்ராஸ்
ரெஜிமென்ட், அசாம் ரெஜிமென்ட் வீரர்கள் உள்ளிட்டோர் கம்பீரமாக அணிவகுப்பில்
பங்கேற்றனர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் சீக்கிய படை பிரிவுகளும் அணிவகுப்பில்
இடம்பெற்றன.
- அதைத்
தொடர்ந்து மேகாலயா, குஜராத், கோவா, ஹரியாணா, உத்தராகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட
பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. மத்திய அரசு துறை
ஊர்திகளும் இதில் பங்கேற்றன.
- 25
அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அணிவகுப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை சென்றது.
- இவை
நடனங்கள், விளையாட்டுத் திறன், பல்லுயிர் பெருக்கம், சுதந்திரப் போராட்டம்,
மதம் சார்ந்த இடங்கள், வளர்ச்சி ஆகியற்றை சிறப்பிக்கும் வகையில்
அமைந்திருந்தன.
- இவை
தவிர மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 9 ஊர்திகளும் ஆயுதப் படைகள்
மற்றும் டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்)
சார்பில் 3 ஊர்திகளும் இடம்பெற்றன.
- கடற்படையின்
அலங்கார ஊர்தி இரண்டு முக்கிய கருப்பொருளை சித்தரித்தது. முதலாவது இந்திய
சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் 1946-ம் ஆண்டு கடற்படை
எழுச்சி. 2-வது, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கடற்படை உருவாக்கும்
முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை சித்தரித்தது.
- பாகிஸ்தானுக்கு
எதிராக 1971-ல் நடந்த போரில் கிடைத்த வெற்றிக்கு. விமானப் படை ஊர்தியில்
மரியாதை செலுத்தப்பட்டது. ராணுவ வீரர்கள் புதிய வகை சீருடை அணிந்து
ஆயுதங்களுடன் பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது.
- அணிவகுப்பு
முடிந்ததும் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. 75 விமானங்கள் வானில்
பறந்து சாகசம் செய்தன. இதில் ரஃபேல் விமானங்கள் விண்ணில் பறந்து சாகசங்களை
நிகழ்த்தின.
- அத்துடன்
சுகோய், ஜாகுவார், எம்ஐ-17, சாரங், அபாச்சி, டகோட்டா, ராஹத், மேக்னா, ஏகலைவா,
திரிசூல், திரங்கா, விஜய், அம்ரித் போன்ற விமானங்கள், ஹெலி காப்டர்களும்
வானில் வட்டமடித்து சாகசங்கள் செய்தன.
- தேசிய
மாணவர் படையின் சாகச நிகழ்ச்சி, 480 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற
கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாராசூட் ரெஜிமெண்ட் ராணுவப் பிரிவு வீரர்கள்
புதிய ரக போர் உடையில் பங்கேற்றனர்.
- முதன்முறையாக
விமானப் படை விமானிகள், விமானத்தை இயக்கிய காட்சி அங்கிருந்த பெரிய திரையில்
ஒளிபரப்பப்பட்டது. இதற்காக இந்திய விமானப் படையின் உதவியை தூர்தர்ஷன்
தொலைக்காட்சி பெற்றிருந்தது.
- அணிவகுப்பின்போது
ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைப் பெற்ற
ஷிவாங்கி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரத்தில் குடியரசு தின விழா
அணிவகுப்பில் பங்கேற்ற 2-வது பெண் போர் விமானி ஷிவாங்கி என்பது
குறிப்பிடத்தக்கது.
- வாரணாசியைச்
சேர்ந்த ஷிவாங்கி சிங், இந்திய விமானப் படையில் 2017-ல் சேர்ந்தார். முதலில்
மிக்-21 பைசன் ரக விமானத்தை இயக்கி வந்த ஷிவாங்கி தற்போது ரஃபேல்போர்
விமானத்தை இயக்கி வருகிறார்.
- குடியரசு
தின விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, டெல்லியில் உள்ள தேசிய போர்
நினைவிடத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் மாநிலத்தின்
பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தார்.
- அதில்,
அந்த மாநிலத்தின் மாநில மலரானபிரம்ம கமலம் பொறிக்கப்பட்டிருந்தது. அதோடு,
மணிப்பூர் மாநில பாரம்பரிய துண்டினையும் பிரதமர் மோடி அணிந்திருந்தது பலரது
கவனத்தையும் ஈர்த்தது.
No comments: