Ads Top

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT TOPIC FROM 2022 - PART 5

 


இந்திய கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ராமானுஜத்துக்கு 'டைம்' வாழ்நாள் சாதனையாளர் விருது

  • உலகம் முழுவதும் உள்ள கணித அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஒன்று கூடி விவாதிப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 'டைம்' (TIME -Technology and Innovation in Math Education) என்ற சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது. 
  • இந்த மாநாட்டில் கணித கல்வியில் சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு 'நளினி பாலா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படும்.
  • அதன்படி 10-வது டைம் மாநாடு கரோனா பரவலால் கடந்த டிசம்பர் மாதம் இணையவழியில் நடைபெற்றது. இதில் புதுமையான கற்பித்தல் முறைகள், தொழில்நுட்பங்களுடன் கணிதத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதன் ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. 
  • மேலும், இந்த மாநாட்டில் கணித பேராசிரியர் ஆர்.ராமானுஜத்துக்கு 'நளினி பாலா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதேபோல், அறிவியல் பரப்புரை பணிக்காக 2020-ம் ஆண்டு இவருக்கு இந்திரா காந்தி விருது தரப்பட்டது. 

வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்ய இ-வாடகை செயலி தொடக்கம்

  • நெல் தரிசில், உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை 11 லட்சம் ஏக்கரில் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் விதைகள் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. 
  • உற்பத்தி செய்யப்பட்ட பயறு வகைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில்கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
  • செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 5 விவசாயிகளுக்கு இடுபொருளை வழங்கி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மூலம் ரூ.97.01 கோடியில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை, வணிகத்துறை கட்டிடங்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
  • வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • மேலும், ரூ.50.73 கோடி மானியத்தில், விவசாயிகளுக்கு 2,118வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் வழங்குதல்மற்றும் வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்து, 5 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை வழங்கினார்.

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக 11 கோடியில் 'நீடித்த நிலையான பருத்தி இயக்கம்' முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

  • சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பருத்தி விவசாயிகளின் நலனுக்காக 11 கோடியில் 'நீடித்த நிலையான பருத்தி இயக்கம்' என்ற புதிய திட்டத்தை 5 விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
  • இதில், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • அவற்றில் ஒரு சிறப்பம், நீண்ட இழை பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம்.

மானாமதுரை அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

  • சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கல்குறிச்சியில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மானாமதுரை மீனாட்சிசுந்தரம், உசிலங்குளம் தாமரைக்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
  • கல்குறிச்சி கிராம மயானத்தில் கிடைத்த தாழியின் தடிமன் ஒரு இஞ்ச் ஆகும். இந்த தாழிகளின் வாய்ப்பகுதி ஒரு இஞ்ச், முக்கால் இஞ்ச், அரை இஞ்ச், கால் இஞ்ச் தடிமனில் காணப்படுகிறது.
  • ஓடுகளின் உட்பகுதி கருமை நிறத்திலும், வெளிப்பகுதி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது. மேலும் தாழியின் கழுத்து பகுதியில் அழகிய வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. 
  • இந்த தாழிகள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது'

நடப்பு நிதியாண்டில் 9.2% பொருளாதார வளர்ச்சி - தேசிய புள்ளியியல் அலுவலகம் கணிப்பு

  • கொரோனா தொற்றால் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், உலகம் முழுவதும் பணக்கார நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை பொருளாதார சந்திப்பை சந்தித்து வருகின்றன.
  • இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. பல்வேறு தொழில்துறைகள் பெரும் பொருள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 9.2 சதவிகிதம் வளர்ச்சியடையும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

மணிப்பூர் - திரிபுரா இடைய முதல் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் - மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • மணிப்பூர் - திரிபுரா மாநிலங்களை அசாம் வழியாக இணைக்கும் முதல் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் மணிப்பூர் முதல்வர் திரு நாங்தோம்பம் பிரன் சிங் மற்றும் திரிபுரா முதல்வர் திரு பிப்லப் குமார் தேவ் ஆகியோர் முன்னிலையில் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.
  • மணிப்பூர், திரிபுரா மற்றும் தெற்கு அசாம் மக்களின் நீண்டநாள் கோரிக்கை அகர்தலா- ஜிரிபம்-அகர்தலாவை இணைக்கும் சிறப்பு ரயில்கள் ஜன் சதாப்தி தொடக்கம் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் அகர்தலா மற்றும் ஜிரிமம் ரயில் நிலையங்களில் இருந்து ஒரே நேரத்தில் தொடங்கி வைக்கப்பட்டன.

இ-நிர்வாகம் 2021 குறித்த 24-வது தேசிய கருத்தரங்கு ஐதராபாதில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

  • தெலங்கானாவின் ஐதராபாதில் ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்ற இ-நிர்வாகம் 2021 குறித்த 24-வது தேசிய கருத்தரங்கு நிறைவடைந்தது. 
  • “இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகில் டிஜிட்டல் நிர்வாகம்” என்பது இந்தக் கருத்தரங்கின் மையப் பொருளாகும். இரண்டு நாள் நடைபெற்ற அமர்வுகளில் ஆழ்ந்த விவாதத்திற்குப் பின் இ-நிர்வாகம் குறித்த ‘ஐதராபாத் பிரகடனம்’ ஏற்கப்பட்டது.
  • இந்தக் கருத்தரங்கின் அமர்வுகள் அனைத்தும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதாகவும் குடிமக்கள் பயனடைய இ-நிர்வாக கருவிகளை பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தைக் கற்றறிவதாகவும் இருந்தன.

நிலவில் தண்ணீர் ஆதாரம் சீன விண்கலம் கண்டுபிடிப்பு

  • நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சாங்கே-5 என்ற விண்கலத்தை 2020, நவம்பரில் சீனா அனுப்பியது. நிலவின் மத்திய உயர் அட்சரேகை பகுதியில் தரையிறங்கிய அந்த விண்கலத்தின் லேண்டரில் உள்ள ஒரு கருவி, தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது. பின்னர், 1,731 கிராம் எடையிலான பாறை மாதிரியுடன் விண்கலம் பூமிக்குத் திரும் பியது.
  • அந்தப் பாறை மாதிரியை சீன அறிவியல் அகாதெமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் முடிவுகள் 'சயின்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியாகியுள்ளது.
  • அதன்படி, நிலவின் தரைப்பரப்பில் உள்ள பாறைப் படிவங்களில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தண்ணீர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு காரணம் சூரிய காற்று ஆகும். 

சீக்கிய குரு கோவிந்த் சிங் மகன்களின் நினைவாக டிச. 26-ம் தேதி வீர் பால் தினம் கொண்டாடப்படும் - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

  • சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங். இவரது தந்தையும் சீக்கியர்களின் 9-வது குருவுமான தேக் பகதூர் காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்புக்காக போராடினார். இதன்காரணமாக அப்போதைய முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கொலை செய்யப்பட்டார். 
  • இதைத் தொடர்ந்து 9-வது வயதில் 10-வது சீக்கிய குருவாக கோவிந்த் சிங் பொறுப்பேற்றார்.
  • இவருக்கு 4 மகன்கள். இதில் 5, 8 வயதான மகன்களை முகலாய ஆட்சியாளர்கள் சிறை பிடித்து உயிரோடு சுவரில் புதைத்தனர். 13, 17 வயது மகன்கள் முகலாய படையுடனான போரில் உயிரிழந்தனர். 
  • கடந்த 1708-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி மகாராஷ்டிராவில் முகாமிட்டிருந்த குரு கோவிந்த் சிங், முகலாய உளவாளிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
  • குரு கோவிந்த் சிங் மகன்களின் உயிர்த் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26-ம் தேதி வீர் பால் திவஸ் தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

சீனாவில் செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி துணை தலைவரானார் உர்ஜித்

  • கடந்த 2016ம் ஆண்டு ரகுராம் ராஜன் ஓய்வு பெற்ற பிறகு, ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்றவர் உர்ஜித் படேல். இவர் தனது பதவிக்காலம் முடியும் முன்பாக கடந்த 2018ம் ஆண்டு. சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார். 
  • இந்நிலையில், உர்ஜித் படேல் தற்போது ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஏஐஐபி வங்கி சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடன் வழங்கி வருகிறது. 
  • இந்த வங்கியை உருவாக்கிய உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த வங்கியில் சீனா 26.06 சதவீத பங்குகளையும், இந்தியா, 7.5 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் 2022

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்-1 தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரோகன் போபண்ணா - ராம்குமார் ராமநாதன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
  • இறுதிப் போட்டியில் குரோஷியாவின் இவான் டோடிக் - மார்செலோ மெலோ (பிரேசில்) முதல் நிலை ஜோடியுடன் நேற்று மோதிய இந்திய இணை 7-6 (8-6), 6-1 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று கோப்பையை முத்தமிட்டது.
  • இதே தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எலனா ரிபாகினாவை (கஜகஸ்தான்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
  • மெல்போர்ன் சம்மர் செட்-1 தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குடெர்மடோவாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 14 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
  • மெல்போர்ன் சம்மர் செட் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மேக்சிம் கிரெஸ்ஸியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். 
  • இப்போட்டி 1 மணி, 44 நிமிடத்துக்கு நீடித்தது. நடால் 2004ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு ஏடிபி டூர் லெவல் போட்டியில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக காவல்துறை வரலாற்றில் உளவுத்துறையின் ஐஜியாக பெண் நியமனம்

  • தமிழக காவல்துறையைச் சேர்ந்த 14 உயரதிகாரிகளுக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஒரு முக்கியப்பிரிவு. 
  • அதில் அதிக அனுபவமும், திறமையும் கொண்டவர்களே அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த உளவுத்துறையின் பெண் ஐஜி என்ற சாதனையை ஆசியம்மாள் படைத்துள்ளார்.
  • தற்போது 56 வயதான ஆசியம்மாள் தூத்தக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் குரூப் 1 தேர்வு மூலமாக பணியில் சேர்ந்தார். படிப்பில் மிகவும் தேர்ந்தவரான ஆசியம்மாள் எம்.எஸ்.சி., எம்.டெக். எம்.பி.ஏ. பட்டங்களை பெற்றுள்ளார். 

சர்வதேச மலர் ஏல மையம் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையோரம் 20.2 கோடி ரூபாயில், சர்வதேச மலர் ஏல மையம் கட்டும் பணி துவங்கியது. 
  • கடந்தாண்டு நவ., 1ல் கட்டுமான பணிகள் நிறைவடைந்தன.இதையடுத்து சென்னை தலைமை செயலகத்திலிருந்து, காணொலி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் ஏல மையத்தை திறந்து வைத்தார்.

தமிழகத்தில் புத்தாக்கத்தின் மூலமாக புதிய தொழில்களை உருவாக்க அரசு துணை நிற்கும் சென்னையில் நடந்த 'இஸ்பா' மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • இஸ்பா (Indian STEPs and Business incubators Association) அமைப்பின் 14-வது மாநாடு சென்னையில் தொடங்கியது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
  • 'இஸ்பா' போன்ற புத்தொழில் காப்பகங்கள் மூலமாகவே இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள புத்தொழில் காப்பகங்களை உலகத் தரத்துக்கு மேம்படுத்தவும், அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு இத்தகைய புத்தொழில் காப்பகங்கள், புத்தொழில் பூங்காக்களை உருவாக்கவும் செயல் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
  • தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 60 நிறுவனங்களில் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல விண்வெளி, மின் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நிறுவனங்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். வரும்நாட்களில் புத்தொழில் முதலீட்டாளர்களின் பணத் தோட்டமாக தமிழகம் உருவெடுக்கும்.

பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • கொரோனோ ஊரடங்கால் பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால் வருமானம் இன்றி அதுசார்ந்த தொழிலாளர்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அதனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. 
  • இந்நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், 'பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் என உதய் (UIDAI) அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது. 

கொரோனா அவசரகால பயன்பாட்டுக்கு ரூ.23,123 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்

  • கொரோனா அவசரகால பயன்பாட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.23,123 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • அதன்படி சுகாதார கட்டமைப்பை தயார்படுத்தும் வகையில் 37,157 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன், ஆம்புலன்ஸ், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளன. நாளொன்றுக்கு 19,236 மெட்ரிக் அளவிற்கு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது.

ஐசிசியின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார் அஜாஸ் படேல்

  • கடந்தாண்டு டிசம்பர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேலை தேர்வு செய்தது ஐசிசி.
  • அஜாஸ் படேல் கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்தியாவின் 73வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகி 14 வயது பரத் சுப்ரமணியம் சாதனை

  • பதினான்கு வயதான பரத் சுப்ரமணியம் இந்தியாவின் 73வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகி சாதனைப்படைத்துள்ளார்.
  • ஞாயிற்றுக்கிழமை, இத்தாலியில் நடந்த வெர்கானி கோப்பை ஓபனில் பதினான்கு வயதான பரத் சுப்ரமணியம் தனது மூன்றாவது மற்றும் இறுதி கிராண்ட் மாஸ்டருக்கான நெறியை முடித்த பிறகு இந்தியாவின் 73வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகி சாதனை படைத்தார்.

பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது

  • இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ஏவுகணையான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • இந்திய கடற்படையின் தகவலின்படி, இந்த ஏவுகணை மேற்கு கடற்கரை கடலில் சோதனை செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமான இலக்கை அழித்தது.

மதுரையில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

  • மதுரையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள, கலைஞர் நினைவு நுாலகத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக அடிக்கல் நாட்டினார்.
  • அதற்கேற்ப, மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள, பொதுப்பணித்துறை வளாகத்தில், 2.70 ஏக்கர் நிலத்தில், 99 கோடி ரூபாய் மதிப்பில், 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில், எட்டு தளங்கள் உடைய கலைஞர் நுாலகம் அமைய உள்ளது. 

மனிதனுக்கு பன்றியின் இதயம் மருத்துவ துறையில் புதிய சாதனை 

  • அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட டேவிட் பென்னட், 57, என்ற தொழிலாளிக்கு உடனடியாக மாற்று இதயம் பொருத்த வேண்டிய நிலை இருந்தது.
  • ஆனால் மாற்று உறுப்பை ஏற்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை. அதனால் பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தும் பரிசோதனை குறித்து டாக்டர்கள் தெரிவித்தனர்.
  • உயிர் பிழைப்பதற்கு இது ஒன்றே சாத்தியம் என்ற நிலையில், இந்த மருத்துவ பரிசோதனை முயற்சிக்கு டேவிட்டும், அவரது குடும்பத்தாரும் சம்மதித்தனர். 
  • இதன்படி மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் அவருக்கு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாட்களாகியுள்ள நிலையில், புதிய இதயம் செயல்படத் துவங்கியுள்ளது.

No comments:

Powered by Blogger.