Ads Top

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT TOPIC FROM 2022 - PART 13

 


பாசறை திரும்பிய முப்படை வீரர்கள் நிகழ்ச்சி

  • குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்கள் அவர்களின் முகாமுக்கு மீண்டும் திரும்பும் முன்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ம் தேதி நடத்தும் அணிவகுப்பு பாசறை திரும்புதல் எனப்படுகிறது. 
  • இந்த ஆண்டிற்கான முப்படை வீரர்களின் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி விஜய் சவுக் பகுதியில் கோலாகலமாக நடந்தது. 
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிர‌தமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் வந்து நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
  • வண்ணமயமான சீருடைகளு‌டன் இசைக்கருவிகளை வாசித்தபடி முப்படைகளின் இசைக்குழுக்களும் நடத்திய அணி வகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 
  • குறிப்பாக, இம்முறை 1000 டிரோன்களுடன் வானில் பல்வேறு கருத்துக்கள் ஒளிபரப்பப்பட்டன. நாட்டின் 75 ஆண்டுகால சுதந்திர தினத்தை சித்திரிக்கும் வகையிலும் மேக் இன் இந்தியா திட்டத்தை விளக்கும் வகையிலும் டிரோன்கள் நடனமாடப்பட்டது. 
  • கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக மகாத்மா காந்தியின் விருப்பமான 'அபைட் வித் மி' பாடல் ஒலிபரப்பப்படவில்லை. அதற்கு பதிலாக, 1962 இந்திய-சீனப் போரின் போது இந்திய வீரர்கள் செய்த உயர்ந்த தியாகத்தை நினைவுகூரும் வகையில் கவி பிரதீப் எழுதிய பிரபலமான தேசபக்தி பாடலான 'ஏ மேரே வதன் கே லோகன்' பாடல் ஒலிபரப்பானது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆஷ்லி பார்டி சாம்பியன்

  • ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் நட்சத்திரம் ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இத்தொடரில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆஸ்திரேலிய வீராங்கனை கோப்பையை முத்தமிட்டது. 
  • தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனையாகும் முயற்சியில் 2014ம் ஆண்டில் டென்னிசில் இருந்து விலகியிருந்த ஆஷ்லி, தற்போது மகளிர் டென்னிசில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருப்பதுடன் ஆஸி. ஓபனையும் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
  • 1978ல் ஆஸி. ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை கிறிஸ்டைன் ஓ நீல், நேற்று ஆஷ்லிக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார்.
  • ஆஷ்லி வென்ற 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. முன்னதாக, 2019ல் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தையும் அவர் வென்றிருந்தார்.

இந்தியா, ஆசியான் டிஜிட்டல் பணித்திட்டம் 2022-க்கு 2-வது ஆசியான் டிஜிட்டல் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் ஒப்புதல் 

  • இரண்டாவது ஆசியான் டிஜிட்டல் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் இணையம் வழியாக நேற்று நடைபெற்றது. தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் திரு தேவுசின்ஹ் சௌகான், மியான்மரின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அட்மிரல் டின் ஆங் சான் கூட்டாக இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
  • அனைவரையும் உட்படுத்தும் டிஜிட்டல் உணர்வு மற்றும் ஒருங்கிணைப்பில் பிராந்திய டிஜிட்டல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு பொருத்தமான பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
  • களவாடப்பட்ட மற்றும் போலியான செல்பேசிகள் பயன்பாட்டை தடுப்பதற்கான நடைமுறை, தேசிய அளவிலான பொது பயன்பாட்டு இணையத்திற்கு வைஃபை வசதி கிடைக்க செய்வது, 5ஜி, நவீன செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, கணினி வழியிலான தடய அறிவியல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இந்தியா ஆசியான் டிஜிட்டல் பணித்திட்டம் 2022 உள்ளது.

சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ஏர் இந்தியா இபிஃஎப்ஓவில் சேர்ந்துள்ளது

  • ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களின் சமூக பாதுகாப்பு சேவைக்காக இபிஃஎப்ஓவில் சேர்ந்துள்ளது. 1952-ன் இபிஃஎப் மற்றும் எம்பி சட்டத்தின் பிரிவு-1(4)-ன் கீழ் ஏர் இந்தியா நிறுவனம் தாமாக முன்வந்து பதிவு செய்துள்ளது. 
  • இது 01-12-2021-ல் இருந்து அமலுக்கு வரும் வகையில் அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் 13-01-2021 டிசம்பர் மாதத்திற்கான இபிஃஎப்ஓ மூலம் ஏர் இந்தியாவிலிருந்து தாக்கல் செய்த சுமார் 7,453 தொழிலாளர்களின் பங்களிப்புக்காக இந்த சமூக பாதுகாப்பு கிடைக்க உள்ளது. 

படையில் இருந்து விலக்கப்பட்ட குக்ரி போர்க்கப்பல், டையு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படையின் முதல் ஏவுகணை ஏந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் குக்ரி (பி49), தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ நிர்வாகத்திடம் 26 ஜனவரி 2022 அன்று ஒப்படைக்கப்பட்டது.
  • நேர்த்தியாக நடைபெற்ற விழாவில் படையில் இருந்து விலக்கப்பட்ட ஐஎன்எஸ் குக்ரியை தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ மற்றும் லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான திரு பிரஃபுல் படேலிடம் ரியர் அட்மிரல் அஜய் வினய் பவெ ஒப்படைத்தார்.

மேல்தள சூரிய மின்சக்தி திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஆர்இடிஏ-வும் கோவா கப்பல் கட்டும் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன

  • மேல்தள சூரிய மின்சக்தி திட்டத்தின் தொழில்நுட்ப- நிதி சார்ந்த நிபுணத்துவத்தை வழங்குவதற்கு இந்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ) கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துடன் (ஜிஎஸ்எல்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • இந்த இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் முறையே புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் கீழ் செயல்படுகின்றன.
  • இந்த ஒப்பந்தத்தில் ஐஆர்இடிஏ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு பிரதீப் குமார் தாஸ், ஜிஎஸ்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு பரத் பூஷன் நாக்பால் ஆகியோர் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
  • இந்த ஒப்பந்தத்தின்படி கோவாவின் வாஸ்கோ ட காமாவில் உள்ள ஜிஎஸ்எல் நிறுவனத் தலைமையகத்தின் மேல் தளத்தில் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைப்பதற்கு ஐஆர்இடிஏ உதவி செய்யும்.
  • இந்த சூரிய சக்தி மின்திட்டம் அமைக்கப்பட்ட பின் ஜிஎஸ்எல் நிறுவனத்தின் மின்சார செலவு குறையும் என்பதோடு அதன் கரியமில வாயு வெளிப்பாடும் குறையும்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு முதல் முறையாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடக்கம்

  • மியான்மர் எல்லையில் உள்ளது மணிப்பூர் மாநிலம். மலைகள் நிறைந்த இந்த மாநிலம் சமீபத்தில்தான் ரயில்வே வரைபடத்தில் இடம்பிடித்தது. இம்மாநிலத்துக்கு கடந்த 6-ம் தேதி பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அசாம் மாநிலம் சில்சர் நகரிலிருந்து மணிப்பூரின் பொங்கைசுங்பாவ் ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.
  • இதன் ஒரு பகுதியாக, ஜிரிபம் முதல்இம்பால் வரையிலான 111 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் அமையும் இந்த ரயில் வழித்தடத்தில் 46 சுரங்கப்பாதைகள், 153 மேம்பாலங்கள் அமைகின்றன.
  • இந்த வழித்தடத்தில் உலகின் மிக உயரமான (141 மீட்டர்) ரயில்வே மேம்பாலம் நோனே மாவட்டத்தில் அமைகிறது. கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் ஒரு பகுதியான ரானி கைடின்லியு ரயில் நிலையத்துக்குதான் சரக்கு ரயில் சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா சினியகோவா சாம்பியன்

  • ஆஸி. ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா - கேதரினா சினியகோவா (முதல் ரேங்க்) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
  • பைனலில் கஜகஸ்தானின் அன்னா டானிலினா - பீட்ரைஸ் ஹடாட் (பிரேசில்) ஜோடியுடன் மோதிய செக். இணை 6-7 (3-7), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றது. கோப்பையுடன் சினியகோவா - கிரெஜ்சிகோவா.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன்

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் டானியல் மெட்வதேவை ஐந்தரை மணி நேரம் போராடி வென்ற ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.
  • 5 மணி, 24 நிமிடத்துக்கு நீடித்த இந்த மாரத்தான் போராட்டத்தில், நடால் 2-6, 6-7 (5-7), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி 2வது முறையாக ஆஸி. ஓபனில் கோப்பையை முத்தமிட்டார். ஏற்கனவே அவர் மெல்போர்னில் 2009ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 35% அதிகரிப்பு

  • கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 35% அதிகரித்து $ 6.1 பில்லியன் ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய இதே காலத்தில் 4.5 பில்லியன் டாலராக இருந்தது.
  • டிசம்பர் 2021-ல் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 720.51 அமெரிக்க டாலராக இருந்தது. 2020 டிசம்பருடன் ஒப்பிடுகையில், இது 28.01% அதிகமாகும்.
  • இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்கா (44.5%), சீனா (15.3%), ஜப்பான் (6.2%) ஆகியவை உள்ளன. இந்தியாவின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட எறால் பெரும் இடத்தைப் பிடித்துள்ளது.
  • கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி கடந்த 2017-18-ம் ஆண்டில் 7.02 பில்லியன் டாலர் என்ற மிக அதிக அளவுக்கு நடைபெற்றிருந்தது. தற்போது, கொரோனா பரவலுக்கு இடையிலும், இந்த அதிக அளவை மிஞ்சி சாதனை படைக்கப்படும்

No comments:

Powered by Blogger.