TNPSC CURRENT AFFAIRS IMPORTANT TOPIC FROM 2022 - PART 1
2021 டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.29 லட்சம் கோடி
- 2021 டிசம்பரில்
ஜிஎஸ்டி ஆக ரூ.1,29,780 கோடி வசூல் ஆகி உள்ளது. அதில் சிஜிஎஸ்டி ரூ.22,578
கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.28,658, ஐஜிஎஸ்டி ரூ.69,155 கோடி (பொருட்களின்
இறக்குமதி வரி ரூ.37,527 கோடி உள்பட), செஸ் ரூ.9,389 கோடி( பொருட்களின்
இறக்குமதி வரி ரூ.614 கோடி உட்பட) அடங்கும்.
- அதேநேரத்தில், கடந்த
ஆண்டு (2020) டிச., மாதம் வசூல் ஆன ரூ.1.15 லட்சம் கோடியை விட, இது 13
சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ந்து 6வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம்
கோடியை தாண்டி உள்ளது.
பிரதமரின் விவசாய உதவி தொகை திட்டம் - ரூ.20,900 கோடி விடுவித்தார் மோடி
- நாடு முழுதும் உள்ள
10.09 கோடி விவசாயிகளுக்கு, பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ்
ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதி தலா 2,000 ரூபாய் வீதம்
மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 'டிபாசிட்'
செய்யப்படுகிறது.
- 10வது தவணைஇந்த
திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணை நிதி கடந்த ஆண்டு ஆகஸ்டில்
விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் 10வது தவணையாக 20 ஆயிரத்து 900 கோடி ரூபாயை
பிரதமர் மோடி விடுவித்தார்.
சர்வதேச அளவில் நம்பகத்தன்மை குறித்து கருத்து கணிப்பு
- பிரான்ஸ் தலைநகர்
பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இப்சாஸ் என்ற நிறுவனம் சர்வதேச
அளவில் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தி வருகிறது.
- இந்த வரிசையில் சர்வதேச
அளவில் நம்பகத்தன்மை குறித்து அந்த நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி
முடிவுகளை வெளியிட்டுள்ளது.
- இதில்
நம்பகத்தன்மைமிக்க பணியாளர்களில் மருத்துவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
மருத்துவர்களுக்கு ஆதரவாக 64% பேர் வாக்களித்துள்ளனர்.
- அதற்கு அடுத்து
விஞ்ஞானிகளுக்கு 61%, ஆசிரியர்களுக்கு 55%, ராணுவ வீரர்களுக்கு 42 %,
போலீஸாருக்கு 37%, நீதிபதிகளுக்கு 34%, வழக்கறிஞர்களுக்கு 29%, தொலைக்காட்சி
செய்தி வாசிப்பாளர்களுக்கு 27%, மத போதகர்களுக்கு 25%, அரசு ஊழியர்களுக்கு
24%, செய்தியாளர்களுக்கு 23%, வங்கி ஊழியர்களுக்கு 23%, தொழிலதிபர்களுக்கு
23%, அமைச்சர்களுக்கு 14% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.
- இப்சாஸின்
நம்பகத்தன்மைபட்டியலில் அரசியல்வாதிகள் கடைசி இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு
ஆதரவாக 10% மக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
- சர்வதேச நாடுகளில்
மருத்துவர்கள் மீது அந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர்
என்பது குறித்து இப்சாஸ் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இதில் பிரிட்டிஷ்
மருத்துவர்களுக்கு 72% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
- நெதர்லாந்து
மருத்துவர்களுக்கு 71% பேரும், கனடா மருத்துவர்களுக்கு 70% பேரும் ஆதரவு
தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவர்கள் மீது 64% மக்கள் நம்பிக்கை
வைத்துள்ளனர்.
- உலகின் நம்பகமான நாடு
குறித்து இப்சாஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் மலேசியா முதலிடத்தைப்
பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. சுவீடன்,
நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா, துருக்கி, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ்,
ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில்
உள்ளன.
பிரிட்டன் முன்னாள் பிரதமருக்கு டோனி பிளேருக்கு 'சா்' பட்டம்
- 'ஆா்டா் ஆஃப்
காா்ட்டா்' உறுப்பிராக டோனி பிளேரை அரசி எலிசபெத் நியமித்துள்ளாா்.
பிரிட்டனின் மிகப் பழையதும் முதன்மையானதுமான இந்த விருது, 1348-ஆம் ஆண்டு
உருவாக்கப்பட்டது. சிறந்த சமுதாய சேவை ஆற்றியவா்களுக்கு இந்த விருது
வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த விருதைப் பெற்ன்
மூலம் டோனி பிளோ, இனி 'சா் டோனி பிளோ' என்று சனிக்கிழமை முதல்
அழைக்கப்படுவாா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் தயான்சந்த் விளையாட்டு
பல்கலைக்கழகம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- ரூ.700 கோடி செலவில்
மேஜர் தயான்சந்த் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர
மோடி அடிக்கல் நாட்டினார்.
- ஹாக்கி விளையாட்டில்
புகழ்பெற்ற மேஜர் தயான்சந்த் நினைவாக உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில்
இந்தப் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆடவர் மற்றும்
மகளிர் இங்கு பட்டம் பெறவுள்ளனர்.
- இந்தப்
பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 1,080 விளையாட்டு வீரர்களுக்கு (540 ஆடவர்,
540 மகளிர்) பயிற்சி அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
- உலகத் தரத்தில் நவீன
வசதிகள் இங்கு அமைக்கப்படவுள்ளன. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நவீன
சிந்தெடிக் ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, வாலிபால்,
ஹேண்ட்பால் மைதானங்கள், கபடி ஆடுகளம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.
நேரம் தவறாத விமான சேவை - உலகளவில் சென்னை விமான நிலையத்துக்கு 8-வது இடம்
- கடந்த ஆண்டில் பல்வேறு
பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள் குறித்து சிரியம் என்ற
நிறுவனம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்த பட்டியலில் 96.51 சதவீதத்துடன்
ஜப்பானின் இட்டாமி விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது.
- இந்த பட்டியலில்
இந்தியாவில் இருந்து ஒரே ஒரு விமான நிலையம்தான் இடம் பெற்றுள்ளது. இந்த
பட்டியலில் சென்னை சர்வதேச விமான நிலையம் 8-வது இடத்தில் உள்ளது. சென்னை
விமான நிலையத்தில் 98.32 சதவீதம் சரியான நேரத்திற்கு விமானங்கள்
இயக்கப்பட்டதாக சிரியம் நிறுவனம் கூறியுள்ளது.
நீரஜ் சோப்ரா பயிற்சியாளர் கிளாஸ் பார்டோனிட்ஸின் ஒப்பந்தம் 2024 ஒலிம்பிக்
வரை நீட்டிப்பு
- நீரஜ் சோப்ரருக்கு
வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் வரை அவரது தற்போதைய பயிற்சியாளர் கிளாஸ்
பார்டோனிட்ஸ் (Klaus Bartonietz) பயிற்சி அளிப்பார் எந்த தெரிவித்துள்ளது
இந்திய தடகள கூட்டமைப்பு.
- 'வரும் 2024 பாரில்
ஒலிம்பிக் வரை 'தங்கமகன்' நீரஜீன் பயிற்சியாளராக கிளாஸ் பார்டோனிட்ஸ்
செயல்படுவார். அதனை தற்போது தக்க வைத்துள்ளோம்' என இந்திய தடகள கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.
மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின்
குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க
பிரதமர் ஒப்புதல்
- மாதா வைஷ்ணவ தேவி
கோயிலில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின்
தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க பிரதமர் திரு.நரேந்திர மோடி
ஒப்புதல் அளித்துள்ளார்.
- மாதா வைஷ்ணவ தேவி
கோயிலில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின்
தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்
இந்தியாவில் வேலையின்மை விகிதம் உயர்வு - இந்திய பொருளாதார கண்காணிப்பு
மையம்
- கடந்த 4 மாதங்களில்
இல்லாத அளவிற்கு, வேலையின்மை விகிதம் கடந்த டிசம்பர் மாதத்தில்
உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .
- கடந்த டிசம்பர்
மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.9 ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் 7
சதவீதமாக இருந்த எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் 7.9 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய
பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணக்கீட்டில் தெரிய வந்துள்ளது.
- இதனால், மீண்டும்
வேலையின்மை விகிதம் உயர்ந்து வருகிறது. (கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.86% ஆக
இருந்த எண்ணிக்கை, தற்போது 7.91 % ஆக உயர்ந்துள்ளது)
- கடந்த டிசம்பர் மாத
கணக்கின் படி, இந்த வேலையின்மை பட்டியலில் 34.1 சதவிகிதத்துடன் ஹரியானா முதல்
இடத்தில் உள்ளது. 27.1% பெற்று ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும், 17.3 % பெற்று
ஜார்கண்ட் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
- 1.4 சதவிகிதத்துடன்
கர்நாடகா கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 6.9 % பெற்று
தமிழ்நாடு 11ஆம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதப் போா் கூடாது - 5 நாடுகள் கூட்டறிக்கை
- அமெரிக்கா, சீனா,
பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடையிலும், பிற நாடுகள் மீதும் அணு
ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்பது தலையாய கடமையாகக் கருத்தில்
கொள்ளப்பட்டுள்ளது.
- அணு ஆயுத அச்சுறுத்தலை
கவனத்தில் கொள்வது, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது, ஆயுதங்கள் இருப்பை
குறைப்பது தொடா்பாக இருதரப்பு, முத்தரப்பு ஒப்பந்தங்களை 5 நாடுகளும்
பின்பற்றும். அணு ஆயுதப் போரில் வெற்றிபெற முடியாது. அந்தப் போரில் ஒருபோதும்
ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா, சீனா,
பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில்
நிரந்தர உறுப்பினா்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோக் ராஜினாமா
- வடக்கு ஆப்ரிக்காவைச்
சேர்ந்த சூடான் நாட்டில் ராணுவ தளபதியாக இருந்தவர் ஒமர் அல் - பஷீர்; இவர்
1989ல் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றினார்.
- 30 ஆண்டுகளாக சூடான்
அதிபராக அசைக்க முடியாத சர்வாதி காரியாக விளங்கினார். இந்நிலையில் 2019ல்
ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியது. இதைக் கண்டித்து மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதையடுத்து ராணுவத்தின்
ஒத்துழைப்புடன் சூடான் பிரதமராக அப்துல்லா ஹம்டோக் பதவியேற்றார்.
- இந்நிலையில் 2021
அக்டோபரில் மீண்டும் ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியது. இதை
எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை இரும்புக் கரம் கொண்டு
ராணுவம் அடக்க முற்பட்டது.
- உலக நாடுகளின்
நெருக்கடிக்கு பணிந்த ராணுவம் 2021 நவ., 21ல் மீண்டும் அப்துல்லா ஹம்டோக்கை
பிரதமர் பதவியில் அமர்த்தியது. இது தொடர்பாக ராணுவத்துக்கும், அரசுக்கும்
இடையே ஒப்பந்தம் கையொப்பமானது.
- எனினும் சூடானில்
முழுமையான ஜனநாயக அரசு அமைய வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வந்தன. அவற்றை
கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் பதவியை அப்துல்லா ஹம்டோக் ராஜினாமா
செய்துள்ளார்.
15 முதல் 18 வயது நபர்களுக்கு தடுப்பூசி - முதல்வர் ஸ்டாலின்
துவக்கி வைத்தார்
- தமிழகத்தில் 15 முதல்
18 வயதுடையவர்கள், 33.20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இன்று முதல்
கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை
பெண்கள் மேல்நிலை பள்ளியில், இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி
வைத்தார்.
- தமிழகத்தில் 15 முதல்
18 வயதுடைய 33.20 லட்சம் பேரில் 26 லட்சம் பேர் பள்ளிகளில்
படிக்கின்றனர்.
No comments: