Ads Top

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT EVENTS IN TAMILNADU - PART 2

 


தமிழ்நாடு வனத்துறை அமைச்சகத்தின் முக்கிய 7 அறிவிப்புகள்

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
  • பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
  • இதைத்தொடர்ந்து தற்போது இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சரான மதிவேந்தன் 7 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
  • திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் 20.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் 15.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் 20.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • ராம்சார் தளம் - வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 9.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • To Download TNTEXTBOOK Old & New School Book
  • ராம்சார் தளம் - கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 6.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 3.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 1.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

வேலுார் ஐஸ்வர்யாவுக்கு சிறந்த திருநங்கை விருது

  • ஒவ்வொரு ஆண்டும், திருநங்கையர் தினமான ஏப்., 15ல், அவர்களை சிறப்பிக்கும் வகையில், அரசு விருது வழங்குகிறது.
  • விருது பெறும் திருநங்கைக்கு, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். சமூகத்துக்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கையர் முன்னேற்றத்துக்காக, 22 ஆண்டுகளாக, தன் கிராமியம் மற்றும் நாடகக் கலை வழியாக, வேலுார் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யா, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
  • அவரது சேவையை பாராட்டி, 2023ம் ஆண்டுக்கான, சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

உளுந்தூர்பேட்டையில் ரூ.2,302 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

  • தைவான் நாட்டைச் சேர்ந்த பவு சென் கார்ப்பரேஷன் காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், உலக புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக விளங்குகிறது. 
  • பவு சென் குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காலணி உற்பத்திக்காக அடுத்த 12 ஆண்டுகளில் 2,302 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிப்காட் உளுந்தூர்பேட்டை தொழிற் பூங்காவில் காலணிகள் உற்பத்திக்கான ஆலை அமைக்க உள்ளது.
  • இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசிற்கும் ஹை க்ளோரி புட் வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. 
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022, தமிழ்நாடு முதல்வரால் வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக, இத்திட்டம் ஈர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
  • மேலும், தொழில் வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் அளித்திடும் வகையிலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் `சிறந்த நெசவாளர் விருது' ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
  • மேலும், ஜவுளித் தொழிலின் நுட்பங்கள், வடிவமைப்பு மற்றும் காலமாற்றத்துக்கேற்ற வண்ணங்களின் போக்கை கணித்தல் ஆகியவற்றில் பங்களிப்பு திறன் கொண்ட வடிவமைப்பாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான `சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது' 2022-23-ம் ஆண்டில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • அதன்படி, 2022-23-ம் ஆண்டுக்கான சிறந்த பட்டு நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு- திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர் வி. ராஜலெட்சுமிக்கும், 2-ம் பரிசு காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு சங்க உறுப்பினர் எம். சுரேஷுக்கும், 3-ம் பரிசு ஆரணி பட்டு சங்க உறுப்பினர் எம். மணிக்கும், பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு, பரமக்குடி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர் எம்.கே.சரவணன், 2-ம் பரிசு பரமக்குடி, கலைமகள் கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர் ஜி.எல்.நாகராஜனுக்கும், 3-ம் பரிசு சேலம், தோப்பூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் க.இந்திராணிக்கும் என 6 விருதாளர்களுக்கு ரூ.20 லட்சத்துக்கான காசோலைகள், பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • இளம் வடிவமைப்பாளர் விருதில் முதல் பரிசு கோயம்புத்தூரைச் சேர்ந்த ம.சண்முகப்பிரியாவுக்கும், 2-ம் பரிசு பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 2-ம் ஆண்டு வடிவமைப்பு தொழில்நுட்பம் படிக்கும் திருப்பூர், வி.சிபினுக்கும், 3-ம் பரிசு ஆரணியைச் சேர்ந்த ம.ஜ.கிரண்குமாருக்கும் பரிசுத்தொகையாக ரூ.2.25 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, கைத்தறித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி ஆணையர் த.பொ.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதகள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம்

  • தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதனை பின்பற்றும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். 
  • அப்போது, வேலை நேரத்தை உயர்த்துவதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக-வின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
  • எனினும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறுத்திவைப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று "2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)", தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.
  • தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் (24-4-2023) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
  • அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)"- என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

தமிழகம் முழுவதும் ரூ.93 கோடியில் 84 நவீன நெல் சேமிப்பு தளங்கள் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகும் நெல் மணிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. 
  • மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து அவற்றை பாதுகாப்பாக சேமித்து வைக்க, 10 மாவட்டங்களின் 18 இடங்களில் மொத்தம் 2.86 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் ரூ.238.07 கோடியில் அமைக்க உத்தரவிடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
  • தற்போது 2-ம் கட்டமாக, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.93.03 கோடியில் 1.17 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட 84 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்புதளங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 
  • இதுதவிர, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா புதுக்காடு கிராமத்தில் 750 டன் கொள்ளளவில் ரூ.2 கோடியில் தாலுகா செயல்முறை கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
  • சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக இவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • நெல் கொள்முதல் நிலையங்கள்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 250 டன் நெல் சேமிக்கும் வகையில், தஞ்சாவூரில் 20, திருவாரூர்-10, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை - 14, திண்டுக்கல் - 9, புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி - 6, கடலூர் - 2, காஞ்சிபுரம் மற்றும்செங்கல்பட்டு - 2 என மொத்தம் 10 மாவட்டங்களில் ரூ.39.37 கோடியில் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மாதவரம் - சோழிங்கநல்லூா் மெட்ரோ பணி - ரூ.299 கோடியில் ஒப்பந்தம்

  • மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூா் வரையிலான மூன்றாவது வழித்தடத்தில் சுரங்கப்பாதை, உயா்மட்ட பகுதியில் பாதைகள் அமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் உள்ளிட்ட அது தொடா்பான அனைத்து பணிகளை மேற்கொள்ள ரூ.299.46 கோடிக்கு லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் இந்தப் பணியை ஒப்பந்தத்துக்கு எடுத்துள்ளது. 
  • இதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் சாா்பாக மெட்ரோ வணிகப் பிரிவின் துணைத் தலைவா் சுனில் கட்டாா் ஆகியோா் கையொப்பமிட்டனா். 
  • இரண்டாம் கட்டப் பணியின் இறுதி டிராக் ஒப்பந்தமான இந்தத் திட்டத்துக்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவி வழங்கியுள்ளது. 
  • இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளா் எஸ்.அசோக் குமாா் (தடங்கள் மற்றும் உயா்நிலை கட்டுமானம்), கூடுதல் பொது மேலாளா் டி.குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), பொது ஆலோசகா்கள் மற்றும் லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் உயா் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகள் - தமிழக அரசு வெளியீடு

  • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  • அந்த புதிய விதிகளில் மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்ய வேண்டிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, 80 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள மாநகராட்சியில் 230 கவுன்சிலர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 முதல் 80 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளில் 200 கவுன்சிலர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகராட்சிகளில் 52 கவுன்சிலர்களும், 30 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள நகராட்சிகளில் 22 கவுன்சர்களும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், 25 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 21 கவுன்சிலர்களும், பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 12 கவுன்சிலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு - முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

  • தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், முதல்முறையாக மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக `தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாடு' சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி ஹோட்டலில் 2 நாட்கள் நடைபெறுகிறது.
  • இந்த மாநாட்டை நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்.
  • முன்னதாக, பல்வேறு மருத்துவமனைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்துவைத்துப் பார்வையிட்டார்.
  • 2023-24-ம் ஆண்டுக்கான சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில், 'தமிழ்நாட்டில் உள்ள பல்நோக்கு மற்றும் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள், தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா வளர்வதற்கு ஏதுவாக உள்ளன. 
  • எனவே, மருத்துவத் துறை தொழில்முனைவோருடன் இணைந்து, சென்னையில் சர்வதேச மருத்துவச் சுற்றுலா மாநாடு நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த 2 நாள் மருத்துவச் சுற்றுலா மாநாடு நடைபெறுகிறது.
  • இதில், வங்கதேசம், நேபாளம், சவுதி அரேபியா, ஓமன், மியான்மர், இலங்கை, மொரீசியஸ், மாலத்தீவுகள், வியட்நாம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த, 75-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
  • அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள 120 தனியார் மருத்துவமனைகளிலிருந்து பிரபல மருத்துவர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனப் பிரதிநிதிகள், சித்தா,யோகா, ஆயுஷ் மருத்துவர்கள், ஆரோக்கிய சுற்றுலா மருத்துவமனைகளின் மருத்துவர்கள் உள்ளிட்ட 350 பேர் பங்கேற்றுள்ளனர். இதில், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

No comments:

Powered by Blogger.