Ads Top

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT EVENTS IN INDIA - PART 3

 


2022 ஆம் ஆண்டிற்கான "மகாராஷ்டிர பூஷன் விருது

  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2022 ஆம் ஆண்டிற்கான "மகாராஷ்டிர பூஷன்" விருதை டாக்டர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மகாராஷ்டிர மாநிலம் ராய்கரில் இன்று வழங்கினார்.
  • இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் சர்வதேச புத்த மத உச்சி மாநாடு தொடங்கியது

  • சர்வதேச புத்த மத உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியது. வெளிநாட்டு அறிஞர்கள், புத்த துறவிகள் கலந்து கொண்ட மாநாட்டில், பிரதமர் மோடி பேசுகையில்,''புத்தரின் உன்னத போதனைகள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற மக்களை பாதித்துள்ளன. 
  • மக்கள் தங்கள் நலன்களுடன் நாடு மற்றும் உலக நலனுக்கும் முன்னுரிமை அளிப்பது காலத்தின் தேவையாகிறது. ஏழைகள் மற்றும் வளங்கள் இல்லாத நாடுகளை பற்றி உலகம் சிந்திக்க வேண்டும்.
  • புத்தர் காட்டிய வழியை இந்தியா பின்பற்றி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு உதவி செய்துள்ளோம். ஒவ்வொரு மனிதனின் வலியையும் தனது வலியாக கருதியது. 
  • புத்தரின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்க தொடர்ந்து முயற்சி செய்துள்ளோம். நவீன பிரச்னைகளுக்கு புத்த மதத்தில் தீர்வு இருக்கின்றன. அவரது போதனைகள் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வை வழங்குகின்றன. 
  • உலகம் போர், பொருளாதார ஸ்திரத்தன்மை, தீவிரவாதம், மதத்தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை சந்தித்து வருகிறது'' என்றார்.

ஆர்இசியின் துணை நிறுவனமான ஆர்இசிபிடிசிஎல், KPS1 டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தை மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது

  • மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆர்இசி-யின் ஆர்இசி பவர் டெவலப்மென்ட் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (ஆர்இசிபிடிசிஎல்) டிரான்ஸ்மிஷன் திட்டத்தின் கட்டுமானத்திற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்க நிறுவனமான கேபிஎஸ்1 டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தை மேகா என்சீனியரிங் & இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. 
  • இந்த நிறுவனம் கையளிக்கப்பட்டதன் மூலம், ரூ.70, 974 கோடிமதிப்பிலான 52 டிரான்ஸ்மிஷன் திட்டங்களை, ஆர்இசிபிடிசிஎல் வெற்றிகரமாக ஒப்படைத்தது.
  • ஆர்இசிபிடிசிஎல்- இன் தலைமை செயல் அதிகாரி திரு ராகுல் திவேதி, மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் துணைத் தலைவர் திரு பிரவின் ஷரத் தீக்ஷித்திடம் எஸ்பிவியை ஒப்படைத்தார்.
  • மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட். இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத் திட்டத்தின் வெற்றிகரமான ஏலதாரர் ஆகும்.
  • இந்த வேலையில் 765 கி.வா இரட்டை மின்சுற்று லைன் மற்றும் கவ்தா PS1 இன் விரிவாக்கம் ஆகியவை அடங்கும். இத்திட்டத்தை 21 மாதங்களில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய கொவிட்-19 தடுப்பூசி திட்டம், புத்தாக்கத்திற்கான பொது நிர்வாகத்துறையில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதை 2022 பெறுகிறது

  • மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய கொவிட்-19 தடுப்பூசி திட்டம், புத்தாக்கத்திற்கான பிரிவில் பொது நிர்வாகத்துறையில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதை 2022 பெறுகிறது. 
  • விஞ்ஞான் பவனில் 16-வது குடிமைப்பணி சேவைகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியிடமிருந்து விருதை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் செயலர் திரு ராஜேஷ் பூஷன் பெற்றுக்கொண்டார்.

துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் மற்றும் சென்னை ஐஐடி - கண்டுபிடிப்பு வளாகத்தை சென்னையில் திரு சர்பானந்த சோனாவால் திறந்துவைக்கிறார்

  • துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் மற்றும் சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு வளாகத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் 2023, ஏப்ரல் 24 அன்று சென்னையில் திறந்து வைப்பார்.
  • சாகர்மாலா திட்டத்தின் கீழ், இந்த மையம் சென்னை ஐஐடியில் ரூ. 77 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாக செயல்படும் இந்த நிறுவனம், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கான தீர்வுகளை வழங்க அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டுத் தயாரிப்புகளை உருவாக்குகிறது.
  • அனைத்துத் துறைகளிலும் துறைமுகம், கடலோர, நீர்வழிப்பாதைகள் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் தன்மையில் 2டி மற்றும் 3டி ஆய்வுகளை மேற்கொள்ள உலகத் தரத்திலான திறன்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் உற்பத்தி மற்றும் தற்சார்பு இந்தியா முன்முயற்சிகளை மேற்குறிப்பிட்ட துறைகளில் இந்நிறுவனம் மேம்படுத்துகிறது.

சூடானில் உள்ள இந்தியர்களை மீட்கும் 'ஆப்பரேஷன்' காவேரி 

  • வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே சமீபத்தில் மோதல் வெடித்தது. இதனால், தலைநகர் கர்த்துாம் உட்பட பல இடங்களில் 10 நாட்களுக்கு மேலாக வன்முறை வெடித்துள்ளது. இதில், ஒரு இந்தியர் உட்பட 400 பேர் பலியாகியுள்ளனர். 
  • இந்நிலையில், இங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
  • இதையடுத்து, இந்தியவிமானப் படையின் இரண்டு விமானங்கள் சவுதி அரேபியாவில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் கப்பல் ஒன்றும் அங்கு விரைந்துள்ளது.
  • 'ஆப்பரேஷன் காவேரி திட்டத்தின் வாயிலாக 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சூடான் துறைமுகம் வந்துள்ளனர். நம் நாட்டு கப்பல் மற்றும் விமானங்களில் அவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளார். 
  • அதேசமயம், சூடானில்இருந்து மூன்று இந்தியர்கள் உட்பட 66 பேரை, சவுதி அரேபியா அரசு நேற்று முன்தினம் மீட்டது. இந்நிலையில், சில இந்தியர்கள் உட்பட 27 நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரான்ஸ் அரசு மீட்டது.

வந்தே பாரத் சேவை கேரளாவில் பிரதமர் தொடங்கி வைத்தார்

  • பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கேரளாவுக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வந்த பிரதமர் மோடி, கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தார். கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக சென்ற அவருக்கு பாஜகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • இந்நிலையில் 2-வது நாளான பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
  • திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • பின்னர், வந்தே பாரத் ரயிலில் செல்லும் மாணவர்கள், பயணிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, மாணவர்கள் தாங்கள் வரைந்த ஓவியங்களை அவரிடம் காண்பித்து மகிழ்ந்தனர்.
  • திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேஇயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 586 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்டர் மெட்ரோ சேவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் 

  • கொச்சி 'வாட்டர் மெட்ரோ' சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் கொச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். 
  • சுற்றுலா பயணிகளையும் இது வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சி 'வாட்டர் மெட்ரோ' திட்டமானது துறைமுக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு 20 நிமிடங்களில் செல்லலாம். விட்டிலாவில் இருந்து கக்கநாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம்.
  • கொச்சி 'வாட்டர் மெட்ரோ' திட்டம் ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

தாதர் நாகர் ஹவேலியில் புதிய மருத்துவமனை - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • தாதர் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களுக்கு சென்ற, பிரதமர் மோடி, அங்கு, சில்வாசா நகரில், 203 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார். 
  • அவரை, பிரதமர் மோடியை, மொபைல் போன் மின்விளக்குகளால், அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.இம்மருத்துவமனையில் 24 மணிநேர நுாலம், சிறப்பு மருத்துவ பணியாளர்கள், மருத்துவ ஆய்வகங்கள், ஸ்மார்ட் விரிவுரை அரங்குககள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், உடற்கூறியல் அருங்காட்சியகம், ஒரு கிளப்ஹவுஸ், கிளப் ஹவுஸ், ஆசிரிய விடுதிகள், மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் வெளிப்புற மற்றும் உள் விளையாட்டுகள் தவிர மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளன. 
  • மேலும், 4,850 கோடி ரூபாய் மதிப்பிலான, 96 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, 165 கோடி ரூபாய் செலவில் தேவ்கா பகுதியில் கட்டப்பட்ட 5.4 கி.மீ., கடல்முனையையும் திறந்து வைத்தார். இங்கு, ஸ்மார்ட் பார்க்கிங் வசதிகள், தோட்டங்கள், ஓட்டல்கள் உட்பட, பல வசதிகள் உள்ளன.

No comments:

Powered by Blogger.