Ads Top

STEPS TO FIX PORES ON FACES: முகத்தில் துளைகள் சரிசெய்வதற்கு சில எளிமையான வழிமுறைகள்

STEPS TO FIX PORES ON FACES

STEPS TO FIX PORES ON FACES: நம்மில் சிலருக்கு முகத்தில் துளைகள் இருக்கும். இந்த துளைகள் நமக்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இந்த துளைகளை நீக்க பலவிதமான சிகிச்சை முறைகளை நாம் பயன்படுத்தியிருப்போம். 

ஆனால் எதுவும் பலன் தந்திருக்காது. அந்த துளைகளை நீக்க சில எளிமையான மருத்துவ வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முகத்தில் நமக்கு ஏற்படும் பள்ளங்கள் வருவதற்கு முகப்பருக்களே காரணம். சிலருக்கு முகப்பருக்கள் வந்துவிட்டால் அதை நாம் கிள்ளி எடுத்துவிடுவோம் இதன் காரணமாக முகத்தில் பள்ளங்கள் ஏற்படுகின்றது. 


இந்த பள்ளங்கள் நம் முகத்தின் அழகை கெடுக்கின்றது. மேலும் நமக்கு வயதான தோற்றத்தையும் கொடுக்கும். இந்த பள்ளங்களை நீக்க சில வழிமுறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முகத்தில் உள்ள பள்ளங்கள் நீங்குவதற்கு சில வழிகள்

STEPS TO FIX PORES ON FACES: முகத்தில் உள்ள துளைகள் நீங்குவதற்கு தக்காளியுடன் ஓட்ஸ் பொடி மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.

முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து அதில் எலுமிச்சை சாற்றை கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் துளைகள் நீங்கிவிடும்.

பாதாமை பாலில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இதை பேஸ்ட் போல அரைத்து அதை முகத்தில் தடவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள துளைகள் நீங்கும்.

வெள்ளரிக்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து பின்னர் இதை தழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள துளைகள் நீங்கும்.

முல்தானி மெட்டி, கற்றாழை ஜெல், அரிசி மாவு மூன்றையும் தலா 1 டேபிள் ஸ்பூன் எடுத்து நன்கு கலந்து அதை பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும். 

பின்னர் இந்த பேஸ்டை முகத்தில் தடவி 15- 20 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள துளைகள் நீங்கும். இதை வாரத்தில் மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.

கடலை மாவு, முல்தானி மெட்டி, தக்காளி சாறு மூன்றும் தலா 1 டேபிள் ஸ்பூன் எடுத்து நன்கு கலந்து இதை முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் உள்ள துளைகள் நீங்கும்.

இதையெல்லாம் விட எளிமையான வழிமுறை என்னவென்றால் ஐஸ் கட்டிகளை நம் முகத்தில் தினமும் 5 நிமிடம் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள துளைகள் நீங்கும்.

தக்காளி சாறு, ரோஸ் வாட்டர் இரண்டையும் தலா ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து நன்கு கலந்து இதை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 

பின்னர் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள துளைகள் நீங்குவது மட்டுமில்லாமல் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

No comments:

Powered by Blogger.