SAKKARAVALLI KILANGU: சக்கரவள்ளி கிழங்கில் உள்ள ஊட்டச்சத்து
SAKKARAVALLI KILANGU: நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் சக்கரவள்ளி கிழங்கில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உள்ள வைட்டமின் பி-6 என்ற வைட்டமின் இதய நோயை சரி செய்கிறது என்றும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க சக்கர வள்ளிக்கிழங்கு உதவுகிறது என்றும் வலுவான எலும்புகள் வலுவான இதயம் ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் சக்கரவள்ளி கிழங்கில் உள்ள வைட்டமின் டி உதவுகிறது. சக்கரவள்ளி கிழங்கை வேகவைத்த அல்லது சிப்ஸ் செய்து சாப்பிடலாம் அதில் உள்ள சத்துக்கள் முழுவதும் உடலுக்கு கிடைக்கும்.
No comments: