Ads Top

PREVENT DENGUE DISEASE IN TAMIL: டெங்கு நோய் வராமல் தடுப்பது எப்படி?

PREVENT DENGUE DISEASE IN TAMIL

PREVENT DENGUE DISEASE IN TAMIL: டெங்கு பரவும் காலம் என்பது அனைவரும் அறிந்ததே. இதனுடன் சேர்ந்து, லெப்டோரோசிஸ் எனப்படும் நோயும் சேர்ந்து பரவும். இதனுடன் மழைக்கால நோய்களும் தொற்றிக்கொள்ளும். இதிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்வது எப்படி?

டெங்கு பரவும் காலம்

PREVENT DENGUE DISEASE IN TAMIL: பருவமழைக்காலம் தொடங்கி விட்டதால், சாலைகள் மற்றும் வீடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். இதில், கொசுக்கள் உற்பத்தியாகி நம் உடலில் எக்கச்சக்க நோய் பாதிப்புகளை உருவாக்கி விடும். குறிப்பாக, டெங்கு நோய் பரவும் காலம் இது. 

தமிழகத்தில் அவ்வப்போது பெய்யும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்க ஆரம்பித்து விட்டன. அதனால், மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அரசு எச்சரித்துள்ளது. டெங்கு கொசுக்களில் இருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்வது எப்படி?

டெங்கு வராமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

PREVENT DENGUE DISEASE IN TAMIL: டெங்கு நோய் தேங்கியிருக்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களில் இருந்தே பரவுகிறது. அதனால், முடிந்த அளவு கொசுக்கள் உங்களை அண்டாமல் பாதுகாத்துக்கொள்ளவும்.

PREVENT DENGUE DISEASE IN TAMIL

கொசுக்களை தடுப்பதற்கான வழிமுறைகள்

PREVENT DENGUE DISEASE IN TAMIL: கொசுக்கள் எளிதில் கடிக்கும் இடங்களான கை மற்றும் கால்களில் கொசு ரிப்பள்ளண்ட் மருந்துகளை தடவலாம். ஆனால், அதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.

கண்கள், வாய் பகுதிகளில் இதை எந்த காரணத்திற்கொண்டும் தடவ வேண்டாம். முகத்தில் இந்த மருந்தை உபயோகிக்கவே கூடாது.

ஸ்ப்ரே வகை கொசு மருந்துகளை பயன்படுத்தும் போது அதை உங்கள் முகத்தில் அடித்துக்கொள்ள வேண்டாம்.

ரிப்பள்ளண்ட் மருந்துகளை உபயோகிக்கும் முன் கை மற்றும் கால்களை சுத்தமாக கழுவவும்.

குழந்தைகளிடம் இவ்வகையான மருந்துகளை கொடுக்க வேண்டாம். அவர்களுக்கு பெற்றோர்கள்தான் மருந்து தடவி விட வேண்டும்.

ஸ்லீவ்லெஸ் அல்லது கை அதிகம் தெரியும் உடைகளை அணிவதை தவிர்க்கவும்.

நீண்ட கை உடையை உடைகளையும், பேண்ட்களையும் அணியுங்கள்.

நீங்கள் படுக்கும் இடத்தை சுற்றி கொசு வலையை பயன்படுத்துங்கள்.

வீட்டிலும் வீட்டிற்கு அருகிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

PREVENT DENGUE DISEASE IN TAMIL

பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

PREVENT DENGUE DISEASE IN TAMIL: வீட்டைச்சுற்றி தேங்கி கிடக்கும் தண்ணீரில்தான் டெங்கு கொசுக்கள் இனவிருத்தி செய்கின்றன. எனவே வீட்டிற்கு அருகில் தண்ணீர் அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

வீட்டை சுற்றியிருக்கும் குப்பைகள் மற்றும் வீணாகும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

கொசுக்கடிக்காமல் பாதுகாக்க மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்றவும்.

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள்

PREVENT DENGUE DISEASE IN TAMIL: முதற்கட்ட அறிகுறிகள்-காய்ச்சல், தலைவலி, கண்களுக்கு பின்புறத்தில் வலி போன்றவை டெங்குவிற்கான முதல் அறிகுறிகள்.

  • இதையடுத்து தசை மற்றும் மூட்டு வலி ஆரம்பிக்கும்.
  • பசி எடுக்காதது போன்ற உணர்வு இருக்கும்.
  • நாவில் சுவையை உணர முடியாமல் போய் விடும்.
  • மூச்சு விடுவதில் ஒருசிலருக்கு சிரமம் ஏற்படும்.
  • மார்பு மற்றும் மூட்டு பகுதிகளில் சரும பிரச்சனை ஏற்படும்.
  • குமட்டலுடன் வாந்தி வரும்.

PREVENT DENGUE DISEASE IN TAMIL

அரசு செய்ய வேண்டியவை

PREVENT DENGUE DISEASE IN TAMIL: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் அரசின் உதவிகளும் தேவைப்படும். இதில், அரசு செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன..?

  • தெரு சுத்தமாக உள்ளதா, கழிவு நீர் காய்வாய்கள் அகற்றப்பட்டுள்ளதா போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.
  • தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். குப்பை அகற்றுவதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.
  • மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களுக்கு டெங்கு நோய் பரவல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.

No comments:

Powered by Blogger.