HEALTH BENEFITS OF CUMIN IN TAMIL: சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகள்
HEALTH BENEFITS OF CUMIN IN TAMIL: பொதுவாக அனைவரின்
வீட்டிலும் சீரகத்தை சமையலில் பயன்படுத்துவோம். சீரகம் சுவை மற்றும் மணத்தைத் அதிகரிக்க உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இது உடல் எடை குறைக்க உதவும் என்று தெரியுமா உங்களுக்கு. உங்கள் உடல் எடை குறைதல் செயல்முறையை விரைவுபடுத்தும் திறனை கொண்டுள்ளது சீரகம். அதனுடன் இது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
அதனால்தான் இது பல காலமாகவே நம்முடைய பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. சீரகத்தை தவறாமல் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
அது போல இந்த சீரகத்தை ஒரு பொருளுடன் கலந்து குடிக்கும் பொழுது அது விரைவாக உங்களுடைய உடல் எடையை குறைக்கும். அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகள்
HEALTH BENEFITS OF CUMIN IN TAMIL: சீரகம் உங்கள் உடலில் உள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உங்கள் செரிமானத்திற்கு உதவும்.
சீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஒரு டீஸ்பூன் சீரகத்தில் சுமார் 1.4 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கும்.
சீரகம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவும்.
சீரகம் உடலிலிருந்து கெட்ட கொழுப்பை அகற்ற பயன்படுகிறது.
சீரகத்தை சாப்பிடுவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
சீரகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும், எடையை குறைப்பதற்கும் உதவுகிறது.
உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தை தாராளமாக பயன்படுத்தலாம். ஏனெனில் இது இயற்கையாக கிடைக்கும் விலை குறைந்த ஒரு பயனுள்ள உடல் எடையை குறைக்கும் உணவு மருந்துப் பொருள்.
HEALTH BENEFITS OF CUMIN IN TAMIL: சீரகத்தை அப்படியே சாப்பிடுவதன் மூலமோ, அல்லது சீரகத் தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலமாகவோ பதினைந்திலிருந்து, இருபது நாட்களுக்குள் உங்கள் வயிற்றிலிருந்தும், உங்கள் முழு உடலிலிருந்தும் கொழுப்பை குறைக்க முடியும்.
இது ஒரு ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உடல் எடை குறைப்பது பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 80 உடல் பருமனான பெண்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
இவர்களில் பாதி பேர் சீரகம் எடுத்துக்கொள்ளும் குழுவிலும் மீதிப் பாதி பேர் உணவு கட்டுப்பாட்டு குழுவிலும் என இரண்டாக பிரித்து வைக்கப்பட்டனர். சீரகம் எடுத்துக்கொள்ளும் குழுவானது தினசரி சீரகத்தை எடுத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
HEALTH BENEFITS OF CUMIN IN TAMIL: மற்ற குழுவினர் தங்கள் உணவை கட்டுப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டனர். இறுதியில் சீரகம் எடுத்துக் கொண்ட பெண்கள் உணவு கட்டுப்பாட்டு குழுவோடு ஒப்பிடும் போது அவர்களை விட கணிசமான அளவு எடையை குறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சீரகம் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமும், செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும், கலோரிகளை வேகமாக எரிக்க உதவும்.
உங்கள் உடல் ஆரோக்கியமான செரிமான அமைப்பு மற்றும் வேகமான வளர்சிதை மாற்றத்தை கொண்டிருக்கும் போது தானாகவே உடல் எடை குறையும்.
இதை சீரகம் நன்றாக செய்கிறது. இப்படி உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தை பயன்படுத்தும் 3 வழிமுறை
HEALTH BENEFITS OF CUMIN IN TAMIL: உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தை பயன்படுத்தும் 3 வழிமுறைகளை நாம் பார்க்கலாம்.
1. சீரகம் மற்றும் எலுமிச்சை
HEALTH BENEFITS OF CUMIN IN TAMIL: இரண்டு தேக்கரண்டி சீரகத்தை ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் அல்லது இரவில் தண்ணீரில் ஊற வையுங்கள். பின்னர் இந்த சீரகத்தை காலையில் எடுத்து கொதிக்க வைத்து, அதை வடிகட்டி அதில் பாதி எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் இரண்டு வாரங்கள் குடிக்க வேண்டும்.
2. சீரகத்தூள் மற்றும் தயிர்
HEALTH BENEFITS OF CUMIN IN TAMIL: ஒரு டீஸ்பூன் சீரக பொடியை ஒரு டீஸ்பூன் தயிரில் கலந்து நீங்கள் உணவு உண்ட பிறகு சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து 15 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்.
3. சீரகம் மற்றும் உப்பு
HEALTH BENEFITS OF CUMIN IN TAMIL: 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பானம் சுவையாக இருப்பதற்கு சிறிதளவு உப்பையும் சேர்க்கலாம்.
ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உங்கள் உணவுக்கு பிறகு இதை குடித்து வாருங்கள். இப்படி தொடர்ந்து 20 நாட்களுக்கு இதை குடித்து வர வேண்டும்.
இந்த மருத்துவ உணவு முறைகள் கண்டிப்பாக உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும். கூடவே சிறிது உணவு கட்டுபாடும், சிறிய அளவில் உடற்பயிற்சியும் செய்து வந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நீங்களும் இதை உங்கள் வீடுகளில் செய்து பாருங்கள்.
No comments: