BENEFITS OF SEMBARUTHI POO IN TAMIL: செம்பருத்தி பூவிலிருந்து நமக்கு கிடைக்கும் நன்மைகள்
BENEFITS OF SEMBARUTHI POO IN TAMIL: தமிழகமெங்கும் வீட்டு தோட்டங்களில் அழகு செடியாகவும் செம்பருத்தி வளர்க்கப்படுகிறது. இது சப்பாத்துச்செடி, ஜபம், செம்பரத்தை போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
இதன் மலர்கள் செம்மை நிறத்தில் காணப்படுவதால் 'செம்பரத்தை' என அழைக்கப்படுகிறது. இந்த செம்பருத்தி இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் வளரும் தாவர இனமாகும்.
இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும். இந்த செம்பருத்தி மலேசியாவின் தேசிய மலராகும்.
இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த செம்பருத்தி பூவில் பல வித நன்மைகள் காணப்படுகிறது.
செம்பருத்தி பூவிலிருந்து நமக்கு கிடைக்கும் நன்மைகள்
BENEFITS OF SEMBARUTHI POO IN TAMIL: ஒற்றை அடுக்கில் 5 இதழ்களைக் கொண்ட சிவப்பான பூக்கள் கொண்ட செடியே மருத்துவத்தில் உபயோகிக்க தகுந்ததாகும்.
செம்பருத்தி பூவானது உடல் வெப்பத்தை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். இது கருப்பை நோய்கள், இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 250 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, தினமும் காலை நேரத்தில் அருந்தி வந்தால், இரத்த அழுத்தம் குறையும்.
செம்பருத்தி பூவை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வர சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் சிறுநீர் கழிச்சல் குணமாகும்.
மாதவிடாய் சீராக செம்பருத்தி பூக்களை அரைத்து, வெறும் வயிற்றில் காலை நேரத்தில் உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து 7 நாட்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும்.
செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூள் செய்து, ஒரு தேக்கரண்டி அளவு காலையிலும், மாலையிலும் 7 நாட்கள் வரை உட்கொள்ள மாதவிடாய் பிரச்சினை சரியாகிவிடும்.
செம்பருத்தி பூவின் மொட்டினை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதவிலக்கு சமயத்தில் வரும் வயிற்று வலி நீங்கும்.
செம்பருத்தி பூக்களை தலையில் வைத்து படுத்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
செம்பருத்தி பூவுடன் மஞ்சள் தூள் அரைத்து, சாப்பிட்டு வர இரத்தம் சுத்தம் அடையும். தோல் நோய்கள் குணமாகும்.
செம்பருத்தி பூவின் சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்து இதனை வாணலியில் போட்டு காய்ச்சி, வடிகட்டி பத்திரப்படுத்தி வைத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தினமும் காலையில் தலையில் தடவி வர தலை முடி கறுத்து நல்ல அடர்த்தியாக வளரும்.
BENEFITS OF SEMBARUTHI POO IN TAMIL: வயிற்றுப்புண், வாய்ப்புண் உடையவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
செம்பருத்தி இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளை படுதல் குணமாகும்.
கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களும் வயது அதிகம் ஆகியும் கரு உருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்தி பூ ஓர் சிறந்த மருந்து.
செம்பருத்தி பூவை பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய நோய் அணுகாமல் தடுக்கலாம். இதய நோய்க்கு அற்புதமான ஒரு மருந்து.
செம்பருத்தி காய வைத்து பொடி செய்து அதனுடன் சம அளவு எடை மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்பு சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.
No comments: