BENEFITS OF PACHAI PAYARU IN TAMIL: பச்சை பயறு பயன்கள்
BENEFITS OF PACHAI PAYARU IN TAMIL: இல்லத்தரசிகள் கிடைக்கும் இடைவெளியில் பார்த்து பார்த்து சமைத்தாலும் கூட குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் போதிய சத்துக்கள் கிடைப்பதில்லை என்பதே உண்மை.
இதில் அன்றாடம் பட்டியலிட்டு சமைக்க முடியுமா என்ற கேள்வி எழும். ஆனால் இதற்கும் உணவியலா ளர்கள் சத்தான உணவுகளைச் சமைக்காமலும் கொடுக்கலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.
பழங்கள்,காய்கறிகள் போன்றவற்றோடு தானியமும், பயறு வகைகளும் பச்சையாக எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தானியங்களும் பயறு வகைகளும் உணவு பொருள்களில் தலைவன் தலைவி போன்று சொல்லலாம்.
தானியங்கள் புரதச் சத்தையும், கார்போஹைட்ரேட்டும் கொண்டிருந்தால் அரிசியில் இருக்கும் புரதச்சத்தை பயறு வகைகள் கொண்டிருக்கின்றன.
பயறுகளில் பல வகை இருந்தாலும் முக்கியமானவை முதன்மையானவையாக கருதப்படுவது பச்சைபயறு. இதில் புரதச்சத்தும் இரும்புச்சத்தும் அதிகமிருக்கின்றன.
இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் அடிக்கடி பச்சைப்பயறு சேர்த்து வந்தால் இரும்புச்சத்து மாத்திரைகள் எடுக்க வேண் டிய அவசியம் இருக்காது.
பச்சை பயறு பயன்கள்
BENEFITS OF PACHAI PAYARU IN TAMIL: உடல் சூட்டை தணித்து உடலில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது. சரும புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
சருமத்தை பொலிவாக்க செய்கிறது. மேலும் கூந்தல் பிரச்னையால் அவதியுறுவர்களுக்கு இது நல்ல தீர்வு. பச்சைபயறு மாவை பாலில் கலந்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் சருமம் மினுமினுப்பைக் கொடுக்கும்.
இரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பயறுகள் கொழுப்புச்சத்து குறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆய்வுகளும் இதை உறுதி செய்திருக்கிறது.
இரும்புச்சத்து குறைபாட்டால் உண்டாகும் இரத்த சோகையை வரவிடாமல் தடுக்கிறது.மேலும் இரத்த சோகை இருப்பவர்கள் தினம் ஒரு பிடி பச்சையபயறு சேர்த்துவந்தால் இரத்த சோகை குணமாகும்.
நீரிழிவு இருப்பவர்கள் லோ கிளைசிமிக் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். பயறுகள் அனைத் துமே இத்தகைய உணவுகள் என்பதால் தினமும் மாலை நேரங்களில் முளைகட்டியோ அல்லது சுண்டல் செய்தோ சாப்பிடலாம்.
நொறுக்குத் தீனி மற்றும் உணவால் உடல் பருமனைக் குறைப்பவர்கள் பச்சைபயறு சாப்பிடலாம். நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருப் பதால் உணவுகளில் சட்டென்று நாட்டம் போகாது.
முளைகட்டிய பயறு
BENEFITS OF PACHAI PAYARU IN TAMIL: சமைக்காமல் சாப்பிட்டாலும் சத்து கிடைக்கும் ருசியாகவும் இருக்கும் என்பதற்கு பயறுகளில் சிறந்த எடுத்துக்காட்டு பச்சைபயறுதான்.
பச்சைபயறை இரவு ஊறவைத்து, மறுநாள் நீரை வடித்து மெல்லிய பருத்தி துணியில் காற்று புகாமல் கட்டி வைத்து அதன் மேல் அதற்கு சரியான அளவில் பாத்திரம் ஒன்றை கவிழ்த்து வைக்கவும். மறுநாள் காலை துணியை மீறி பச்சைபயறு முளைகட்டியிருக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் அப்படியே சாப்பிடலாம். அல்லது எலுமிச்சைச்சாறு பிழிந்து இலேசாக உப்பு சேர்த்தும் சாப்பிடலாம். காலையில் ஒரு சிறிய கிண்ணம் முளைகட்டிய பச்சைப்பயறு சாப்பிட்டால் போதும் காலை நேர உணவுக்கும் மேலான சத்துமிக்க உணவு இது. ருசியாகவும் இருக்கும்.
No comments: