Ads Top

BABY TEETH GROWTH IN TAMIL: உங்கள் குழந்தைக்கு பல் முளைக்க தாமதமாகுதா?

 

BABY TEETH GROWTH IN TAMIL

BABY TEETH GROWTH IN TAMIL: குழந்தைகள் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டமும், ஒவ்வொரு மாற்றமும் மிகவும் முக்கியமானது தான். இந்த மாற்றங்களில் பெரும்பாலான பெற்றோர்களில் தங்கள் குழந்தையில் பல் முளைத்தலின் வளர்ச்சி தாமதமாக நிகழ்வதாக நினைக்கின்றனர்.

பல் முளைப்பது தடைபட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பல் வளர்ச்சி தாமதமாதல்

குழந்தைகள் வளர்ச்சியில் பற்கள் முளைத்தல் என்பது குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் அல்லது எட்டு மாத காலகட்டத்தில் கண்டிப்பாக தொடங்க வேண்டும். இல்லையேல் ஒரு வயதை எட்டும் முன்னராவது பற்கள் முளைத்தல் நிகழ்ந்திருக்க வேண்டும்.

குழந்தைகளின் பல் வளர்ச்சி தாமதமாதல் என்றால் என்ன என்பதை பெற்றோர்கள் முதலில் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வயதை எட்டும் முன் பற்கள் முளைத்தல் நிகழாமல் தாமதமானால், அதை தான் தாமதமான பல் முளைத்தல் என்று கூறுகிறோம். இவ்வாறு குழந்தையின் பல் முளைத்தல் தாமதமாவதற்கு சில காரணங்கள் உள்ளன. அவைகளை பற்றி பாப்போம்.

பரம்பரை

BABY TEETH GROWTH IN TAMIL: உங்கள் குடும்பத்தில் உள்ள முன்னோர்களில் யாருக்கேனும் பல் முளைத்தல் தாமதமாதல் பிரச்சனை இருந்திருந்தால், அது மரபணுக்கள் வழியாக கடத்தப்பட்டு இன்றைய தலைமுறையில் பிறக்கும் குழந்தைகளை பாதிக்கலாம். ஆனால் எந்த தலைமுறையில் நிகழும், யாருக்கு நடக்கும் என்று யாராலும் கூற இயலாது.

ஹைப்போதைராய்டிசம்

குழந்தைகள் பிறக்கும் பொழுதே அவர்களின் உடலில் தைராயிடு பிரச்சனை இருந்தால், அது குழந்தைகள் வளரும் பொழுது குழந்தையின் உடலில் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதிலும் முக்கியமாக குழந்தையின் வளர்ச்சி மாற்றத்தில் ஏதேனும் பாதிப்புகள் தைராயிடிசத்தால் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

உணவு

குழந்தைகளின் பல் வளர்ச்சிக்கு முக்கிய தேவை கால்சியம் சத்துக்கள் தான். மேலும் குழந்தைகளின் பல் வளர்ச்சிக்கு சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. அது குழந்தைப்பருவத்தில் தாயின் தாய்ப்பால் மூலமே போதிய அளவு கிடைத்து விடும்.

குழந்தைகளுக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்க வில்லை எனில், கிடைத்த தாய்ப்பாலில் சத்துக்கள் இல்லையெனில் குழந்தைக்கு உணவு பற்றாக்குறையால் பல் முளைத்தலில் பிரச்சனை ஏற்படலாம்.

பல் முளைத்தல் மிகவும் தாமதமானால் என்னென்ன தீமைகள் ஏற்படும்

BABY TEETH GROWTH IN TAMIL: குழந்தைக்கு பல் முளைத்தல் மிகவும் தாமதமானால் என்னென்ன தீமைகள் ஏற்படலாம் என்று இங்கு பார்ப்போம். குழந்தைக்கு 6 மாதத்திற்கு மேலாக திட உணவுகள் அளிக்கப்படுகின்றன. 

குழந்தையின் பல் வளர்ச்சி ஒரு வயது வரை ஏற்படாமல் இருந்தால், உட்கொண்ட உணவுகள் பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளை ஏற்படுத்தி ஈறுகளை சிதைத்து பற்கள் முளைக்காத வண்ணம் பிரச்சனையை உண்டு பண்ணலாம்.

மேலும் உணவினை மென்று விழுங்குதல் மிகவும் கடினமாகலாம். குழந்தை பருவத்திலேயே பல் செட் மாட்டி, குழந்தையின் வாய் வாழ்நாள் முழுதும் பொக்கை வாயாக மாறும் நிலை உண்டாகலாம். அப்படியே தாமதமாக பல் முளைத்தாலும் பலமில்லாத பற்கள், எத்து பற்கள் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

தீர்வு

குழந்தையின் பல் முளைத்தலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் உரிய நேரத்தில் கவனித்து சிகிச்சை மேற்கொண்டால், சரி செய்து விடலாம். 

குழந்தையின் வளர்ச்சியை சரியாக பார்த்து, குழந்தைக்கு தகுந்த நேரத்தில் வளர்ச்சி மாற்றங்கள் ஏற்படவில்லை எனில், உடனடியாக மருத்துவரை அணுகி குழந்தையின் வளர்ச்சியை சீராக்க செய்ய வேண்டிய விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்.

பல் முளைத்தல் மட்டுமின்றி குழந்தையின் வளர்ச்சியில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனை பெற்று, உடனே சிகிச்சை அளிப்பது மிகவும் சிறந்தது.

No comments:

Powered by Blogger.