Ads Top

ACTOR VIJAY IN JAWAN MOVIE: ஜவான் படத்தின் ஒரே பிரேமில் ஷாருக்கான் - தளபதி விஜய்

ACTOR VIJAY IN JAWAN MOVIE

ACTOR VIJAY IN JAWAN MOVIE: ஜவான் படத்தின் ஒரே பிரேமில் ஷாருக்கான் - தளபதி விஜய்: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.


இந்தப் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் சண்டைப் பயிற்சி இயக்குநர் யானிக் பென் ஒரு பேட்டியில் ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகியோரை இந்தப் படத்தில் ஒரே ஃபிரேமில் பார்க்கலாம் என்றார். பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர் விஜய் சேதுபதியை சொன்னதாக விளக்கமளித்தார். 

மேலும் இந்தப் படத்தில் தளபதி விஜய் நடித்திருக்கிறாரா என இப்பொழுது சொல்ல முடியாது என்றார். விஜய் நடித்திருப்பதை அவர் மறுக்கவில்லை என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

No comments:

Powered by Blogger.