Ads Top

RICE WATER BENEFITS IN TAMIL 2023: அரிசி நீரின் நன்மைகள்

RICE WATER BENEFITS IN TAMIL 2023

RICE WATER BENEFITS IN TAMIL 2023: வீட்டில் வீணாக கீழே எடுத்து ஊற்றும் அரிசு நீருக்குள்ளும் ஆரோக்கியமான மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அது என்ன அரிசி வெந்தபிறகு வடிக்கும் கஞ்சி நீர் தானே என்று அசால்டாக நினைப்போம். ஆனால் அவற்றுக்குள்ளும் சில மருத்துவ குணங்கள் இருக்கின்றன. 

சரியாக பயன்படுத்தும்பட்சத்தில் நீங்கள் அதிலுரும் மருத்துவ குணங்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அரிசி கஞ்சி நீரை பெண்கள் தங்களின் தோல் அழகு உள்ளிட்ட அழகு சாதனங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

குழந்தைகளுக்கான கூழ்

RICE WATER BENEFITS IN TAMIL 2023: பாரம்பரிய முறையில் அரிசியை சமைத்து முடித்து வடிக்கும் அரிசி கஞ்சி நீரில் மாவுச்சத்து இருக்கும். அதனுடன் சிறியளவு நெய் மற்றும் உப்பு சேர்த்து குழந்தைகளுக்கு உணவாக கொடுக்கலாம். 

இதில் இருக்கும் தாதுக்கள், உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட்டை சமநிலைப்படுத்த உதவுகின்றன. குடல் பிரச்சனைக்கு சரியான உணவு.

அசைவ சமையல்

RICE WATER BENEFITS IN TAMIL 2023: மீன், சிக்கன் அல்லது மட்டன் என எதுவாக இருந்தாலும், சமைக்கும்போது அரிசி கஞ்சி நீரை ஊற்றி சமைத்தால் சுவை கூடும். 

சலவைக்கு அரிசி நீர்

RICE WATER BENEFITS IN TAMIL 2023: அரிசி கஞ்சி நீரை துணிகளின் சலவைக்காக பயன்படுத்தலாம். இது பருத்தி ஆடைகளுக்கு மிருதுவான மற்றும் கடினமான அமைப்பு கொடுக்கும். ஆடை தோற்றம் சரியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அரிசி கஞ்சி நீரை பயன்படுத்துங்கள். 

ஆற்றலை கொடுக்கும் 

RICE WATER BENEFITS IN TAMIL 2023: அரிசி நீரில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இது ஜீரணிக்க எளிதானது மற்றும் ஒரு நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு ஆற்றல் பானமாகப் பயன்படுத்தலாம். சிறிது உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்த்து சூப்பாக சாப்பிடலாம். இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

அரிசி நீரின் மற்ற நன்மைகள் 

RICE WATER BENEFITS IN TAMIL 2023: அரிசி நீர் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை அளிக்கிறது. குடல் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக கோடை மற்றும் குளிர்காலங்களில் தாதுக்களின் இருப்பு உடலில் எலக்ட்ரோலைட் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.

No comments:

Powered by Blogger.