Ads Top

LIC MEDICAL INSURANCE SCHEME 2023: மருத்துவ குழுக் காப்பீட்டு திட்டம் - எல்ஐசி அறிமுகம் செய்தது

LIC MEDICAL INSURANCE SCHEME 2023


LIC MEDICAL INSURANCE SCHEME 2023: பணி ஓய்வுக்குப் பின் மருத்துவ செலவுப் பயனளிக்கும் குழுக் காப்பீட்டுத் திட்டத்தைக் கடந்த மே 2-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது எல்ஐசி ஆஃப் இந்தியா.

இது பங்குச்சந்தையுடன் இணையாத, லாபத்தில் பங்குகொள்ளாத, ஆயுள், குழு சேமிப்பு காப்பீட்டுத் திட்டமாகும். தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பணி ஓய்வுக்குப் பிந்தைய மருத்துவப் பயன்களை அளிக்க இத்திட்டம் உதவுகிறது.

மேலும் ஒவ்வோர் உறுப்பினருக்கும் குறிப்பிட்ட ஆயுள் காப்பீட்டுப் பயனையும் இத்திட்டம் அளிக்கிறது. ஊழியர்களுக்கு இத்தகைய பயனை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தைப் பெறலாம். 50 மற்றும் அதற்கு மேல் ஊழியர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் சேரலாம்.

No comments:

Powered by Blogger.