கிரே டிக் பெற்ற தமிழக முதல் அரசியல் தலைவர் / GREY TICK FOR KANIMOZHI MP
டிவிட்டரில் அதிக அளவிலான பங்குகளை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) வாங்கிய பிறகு நிர்வாக ரீதியாகவும், டிவிட்டர் செயலியின் தொழில்துட்பம் ஆகியவற்றில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
டிவிட்டர் தனது பயனர்களுக்காக பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
டிவிட்டரில் தனிநபர் மற்றும் நிறுவனங்களை தனியே அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் வெவ்வேறு வண்ணங்களால் ஆன வெரிஃபிக்கேசன் டிக் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோல்டு நிற டிக் தனியார் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கு கிரே அதாவது சாம்பல் நிற டிக், பிரபலங்கள் அல்லது தனிநபர் ஆகியோருக்கு ப்ளூ நிற டிக் என்ற நடைமுறை உள்ளது.
தங்க டிக்
பெப்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் சுயவிவரத்தை நீங்கள் திறந்தால், கணக்கின் பெயருக்கு அருகில் ஒரு கோல்ட் டிக் இருப்பதைக் காண்பீர்கள்.
சுயவிவரப் படம் வழக்கமான வட்ட வடிவத்திற்குப் பதிலாக சதுரமாக இருப்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.ட்விட்டர் படி, "தங்க சரிபார்ப்பு கணக்கு ட்விட்டர் சரிபார்க்கப்பட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வணிகக் கணக்கு என்பதைக் குறிக்கிறது.
சாம்பல் டிக்
ஒரு சாம்பல் நிற டிக் அரசு தொடர்பான கணக்குகளைக் குறிக்கிறது - அல்லது துல்லியமாகச் சொல்வதானால், "அரசு/பலதரப்பு அமைப்பு அல்லது அரசு/பலதரப்பு அதிகாரியைக் குறிக்கிறது". பலதரப்பு அமைப்புகளான UN மற்றும் WHO ஆகியவையும் சாம்பல் நிற சரிபார்ப்பு அடையாளத்தைக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி ட்விட்டர் கணக்கிற்கு கிரே நிற குறியீட்டை ட்விட்டர் நிறுவனம் தற்போது வழங்கி உள்ளது.
இதன் மூலம், தமிழ்நாட்டில் அரசு மற்றும் பன்னாட்டு அரசின் நிறுவனக் குறிப்பெற்றுள்ள முதல் அரசியல் தலைவராக கனிமொழி கருணாநிதி பதிவாகி உள்ளார்.
No comments: