Ads Top

இடுப்பு ஜவ்வு விலகல் இடுப்பு வலி நீக்கக்கூடிய சிம்பிள் டிப்ஸ் / Simple Tips to Relieve Pelvic Dysplasia Pelvic Pain


இடுப்பு ஜவ்வு விலகல் இடுப்பு வலி நீக்கக்கூடிய சிம்பிள் டிப்ஸ் / Simple Tips to Relieve Pelvic Dysplasia Pelvic Pain

இடுப்பு ஜவ்வு விலகல் இடுப்பு வலி நீக்கக்கூடிய சிம்பிள் டிப்ஸ் / Simple Tips to Relieve Pelvic Dysplasia Pelvic Pain: நிறைய பெண்களுக்கு மற்றும் டூவீலர் ஓட்டும் ஆண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை இடுப்பு வலி மற்றும் இடுப்பு சவ்வு விலகல்.

இடுப்பு வலி, எலும்பு தேய்மானம், மூட்டு வலி, சரி செய்யக்கூடிய ஒரு சிம்பிளான ஹோம் டிப்ஸ் தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
  • அதற்கு முதலில் வெற்றிலையை எடுத்துக் கொண்டு அதன் காம்பு பகுதியை நீக்கி விடவும். கொழுந்து வெத்தலையாக இருப்பது நல்லது. இதன் முன்புறம் இரண்டு சொட்டு ஆமணக்கு எண்ணெயை தடவவும்.
  • ஒரு கல்லில் 5 அரிசி திப்பிலி, 1 நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா இதழ்கள், 2 அல்லது 3 வில்வ இலைகள் சேர்க்கவும். அடுத்து இரண்டு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பிரண்டை துண்டை எடுத்துக்கொண்டு அதில் சிறிது அதாவது ஐந்து சொட்டு அளவு ஆமணக்கு எண்ணெய் தடவி அதனை நல்லெண்ணெய் தீபம் ஒன்று ஏற்றி அதில் வாட்டவும்.
  • பின்னர் இடித்து வைத்த கலவையை வெற்றிலையின் மீது வைத்து அதன் மீது விளக்கில் வாட்டிய பிரண்டை சாறு 5 சொட்டு விடவும்.
  • பிறகு இதனை மடித்து வெற்றிலை பாக்கு போடுவது போல் முழுவதும் மெல்ல வேண்டும். இதன் சாறு முழுவதும் உள்ளே செல்ல வேண்டும். வெற்றிலை சாப்பிடுவது போல் முழுவதும் சாப்பிட வேண்டும்.
  • ஒரு 15 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்களுக்கு இருக்கும் எலும்புசவ்வு விலகல், மூட்டு தேய்மானம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, இடுப்பு வலி மூட்டு வலி, என அனைத்து பிரச்சினைகளும் சரியாகும்.

No comments:

Powered by Blogger.