அடிக்கும் வெயிலுக்கு இதமான அன்னாசி மில்க் ஷேக் செய்வது எப்படி? / HOW TO MAKE PINEAPPLE JUICE IN TAMIL
ஆரோக்கிய குறிப்புகளில் அதிகம் பயன்படுத்தும் பழங்களில் ஒன்று அன்னாசி. இந்த அன்னாசி பழம் கொண்டு சுவை நிறைந்த 'மில்க் ஷேக்' ஒன்றை செய்வது எப்படி என இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- அன்னாசி பழம் - 1.
- பால் - அரை கப்.
- கிரீம் (வெண்ணிலா) - 1/4 கப்.
- சர்க்கரை - 2 ஸ்பூன்.
- வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்.
- ஐஸ் துண்டுகள் - 1/2 கப்.
செய்முறை
- மில்க் ஷேக் செய்ய தேவையான அளவு அன்னாசி பழம் எடுத்து சுத்தம் செய்து, தோலுரித்து, சிறு துண்டுகளாக வெட்டி தயார் படுத்திக்கொள்ளவும். அதேநேரம், மில்க் ஷேக்குக்கு தேவையான மற்ற பொருட்களையும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பின்னர் ஒரு மிக்ஸ் ஜார் எடுத்து, அதில் அரை கப் பால் மற்றும் இந்த அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பழத்தை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்காமல் இருப்பது அவசியம்.
- பின்னர் இதனுடன் ஒரு ½ தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் அல்லது 2 சிட்டிகை வெண்ணிலா தூள் சேர்க்கவும். இந்த வெண்ணிலா எசன்ஸ், மிக்ல் ஷேக்கின் சுவையை அதிகரிக்க உதவும்.
- பானத்தின் சுவையை கூட்ட இதனுடன் 2-3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டும் சேர்க்கலாம்.
- அன்னாசி பழ மில்க் ஷேக்கின் குளுமையை மேலும் அதிகரிக்க, ஐஸ் கட்டி துண்டுகளை இதனுடன் சேர்த்து ஒரு முறை அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஐஸ்கட்டிகள் பானத்தின் திரவ தன்மையை மேலும் அதிகரிக்கும்
- இறுதியாக இந்த அன்னாசி மில்க் ஷேக்கில் சிறிது இலவங்கப்பட்டை (அ) ஏலக்காய் பொடியை சேர்த்து அரைத்து, தனியே ஒரு குடுவையில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் மில்க் ஷேக் தயாராகிவிட்டது!
- குடுவையில் இருக்கும் அன்னாசி மில்க் ஷேக்கினை, ஒரு கோப்பையில் ஊற்றி அதன் மீது ஒரு கரண்டி கிரீம் வைத்து குளிர்ச்சியாக பரிமாற வேண்டியது தான். அழகுக்கு கோப்பையின் விளிம்பில் ஒரு அன்னாசி துண்டை செருகிக் கொள்ளுங்கள்.
No comments: