செலவுகளை காண்பித்து வருமான வரியை தவிர்ப்பது எப்படி? / How to avoid income tax by showing expenses?
செலவுகளை காண்பித்து வருமான வரியை தவிர்ப்பது எப்படி? / How to avoid income tax by showing expenses?: 2022 - 23 நிதியாண்டுக்கு வரி சேமிப்புக்கான முதலீடுகளை மேற்கொள்ள மார்ச் 31 காலக்கெடு என்பது பலரும் அறிந்தது. ஆனால், செலவினங்களுக்கு வருமான வரிச் சட்டம் பல்வேறு பிரிவுகளின் கீழ் விலக்குகள் வழங்குகிறது.
இதனை வைத்தே வரி குறைப்புக்கு என எந்த முதலீடும் செய்யாமல் ஒருவர் வருமானத்தை முழுமையாக பெறலாம். பழைய வருமான வரி நடைமுறை பின்பற்றுபவர்களுக்கு, வருமான வரிச் சட்டம் 1961, முதலீடுகள் ஏதுமின்றி, வரி செலுத்துவோருக்கு ஆகும் செலவினை கணக்கில் எடுத்து எளிதாகக் க்ளைம் செய்யக்கூடிய விலக்குகளை வழங்குகிறது.
அவை என்னென்ன என பார்ப்போம். 80ஜிஜி பிரிவின் கீழ் வாடகை செலுத்தும் தொகை வரி செலுத்துவோர் தனது பெயரிலோ அல்லது மனைவி அல்லது மைனர் குழந்தையின் பெயரிலோ வீடு வைத்திருக்காவிட்டால் இந்த பிரிவின் கீழ் வாடகை செலுத்தும் தொகைக்கு விலக்கு பெறலாம்.
வீட்டு வாடகை அலவன்ஸ் பெறாத நபர்களும் 80ஜிஜி-யின் கீழ் விலக்கு பெறலாம். வாடகைத் தொகை மாதம் ரூ.5 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
எல்.டி.ஏ., எனும் பயண விடுப்பு சலுகைதங்கள் சம்பளத்தில் லீவ் டிராவல் அலவன்ஸ் கொண்டவர்கள் இந்தியாவில் தனியாகவோ, குடும்பத்தோடோ பயணம் செய்ததற்கு ஆன செலவினங்களுக்கு விலக்கு கோரலாம். வீட்டுக் கடனை திருப்பிச் செலத்துவது 24(பி) பிரிவின் கீழ் வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.
அந்த தொகை ரூ.2 லட்சம் வரை ஆகும். மேலும் அசல் தொகைக்கும் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை விலக்குக் கோர முடியும். புதிய வரி நடைமுறையை தேர்வு செய்பவர்களுக்கு இது பொருந்தாது.
மின்சார வாகன கடன்2022 - 23 நிதியாண்டில் மின்சார வாகனத்தை கடனில் வாங்கி அதற்கு வட்டி செலுத்தியிருந்தால், மார்ச் 31, 2023 வரை செலுத்திய வட்டித் தொகைக்கு விலக்குக் கோர முடியும்.
மருத்துவக் காப்பீடு ப்ரீமியம்வருமான வரிச் சட்டம் 80டி பிரிவின் படி, தனக்கோ அல்லது தனது பெற்றோர், மனைவி, பிள்ளைகளுக்கோ மருத்துவக் காப்பீடு எடுத்து, அதற்கு ப்ரீமியம் செலுத்தினால் ரூ.25 ஆயிரம் வருமானத்திற்கு வரி விலக்கு கோர முடியும். ப்ரீமியம் மூத்த குடிமக்களுக்கு செலுத்தப்பட்டது எனில் ரூ.50 ஆயிரம் வரை வருமானத்தில் விலக்கு கோர முடியும்.
அதாவது மொத்த வருமானத்தில் ரூ.50 ஆயிரம் கழிக்கப்படும். இதன் மூலம் வரி குறையும்.கல்விக் கட்டணம் அதிகபட்சம் 2 குழந்தைகளின் முழு நேரக் கல்வி நோக்கத்திற்காக செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு கோரலாம். 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான வருமானம் கழிக்கப்படும்.
இது தவிர ஒவ்வொருவருக்கும் 16(ia) பிரிவு ஸ்டான்டர்ட் டிடக்ஷன் என்ற பெயரில் வருமானத்தில் ரூ.50 ஆயிரம் விலக்கு பெறலாம். ஆக, சுமார் ரூ.7 லட்சம் வரை செலவுகளை காட்டி வருமானத்தில் இருந்து கழிவு பெற்று வரியை மிச்சம் செய்யலாம்.
No comments: