வெயிலில் சுற்றி கைகளும், கழுத்தும் மட்டும் கருமையாக இருக்கிறதா? செலவில்லாமல் இதை செய்யுங்கள் / HOME REMEDY OF BLACKNESS IN HAND AND NECK
வெயிலில் சுற்றி கைகளும், கழுத்தும் மட்டும் கருமையாக இருக்கிறதா? செலவில்லாமல் இதை செய்யுங்கள் / HOME REMEDY OF BLACKNESS IN HAND AND NECK: அதிகம் வெயிலில் சுற்றித் திரிபவர்களை பார்த்தால் உங்களுக்கே தெரியும், முகம் மட்டும் பளிச்சென்று ஜொலிக்கும் ஆனால் கைகளும், கழுத்து பகுதியும் கறுமை படர்ந்து இருக்கும்.
சிலர் உண்மையிலேயே நல்ல சிகப்பான நிறம் கொண்டவர்களாக இருந்தாலும், வெயிலில் சுற்றித் திரிந்ததால் முகம் கூட கறுத்து போய் விடக்கூடும். இதனால் அவர்களுடைய உண்மையான நிறம் என்னவென்றே தெரியாத அளவிற்கு குழப்பம் உண்டாகும்.
இப்படிப்பட்ட கருமை எளிதாக நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி காண இருக்கிறோம்.
வெயிலினால் உண்டாகக் கூடிய புற ஊதாகதிர்கள் நம்முடைய மென்மையான சருமத்தை அடையும் பொழுது மெலனின் உற்பத்தி அதிகரித்து சருமத்தின் நிறத்தை கறுமையாக மாற்றி விடுகிறது.
வெயில் படும் இடங்களில் மட்டும் தான் இது போன்ற கறுமை படர்ந்து இருப்பதை நீங்கள் காண முடியும், மற்ற இடங்களில் இயல்பான நிறமே இருக்கும்.
முகத்திற்கு அடிக்கடி சோப்பு, பவுடர், கிரீம் என்று எதையாவது போட்டு வெள்ளையாக வைத்துக் கொள்கிறோம், ஆனால் கழுத்து மற்றும் வெயில் படும் கைகளை கண்டு கொள்வது கிடையாது. இதனால் அந்த பகுதிகளின் நிறமானது முற்றிலுமாக மாறிவிட கூடும். இத்தகைய கருமையை எளிதாக போக்குவதற்கு செலவில்லாத வழி என்ன?
முதலில் ஒரு சிறிய அளவிலான பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு தக்காளி பழத்தை பிழிந்து சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கக்கூடிய விதைகளை அப்படியே விட்டு விடுங்கள்.
இதனுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அரை மூடி எலுமிச்சை பழத்தை சாறு எடுத்து பிழிந்து கொள்ளுங்கள்.
தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பேஸ்ட் போல இதை செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கறுமைப்படர்ந்த இடங்களில் மட்டும் கழுத்து முன்புறம், கழுத்து பின்புறம், முதுகு பகுதியில் சிறிதளவு மற்றும் கைகளில் வெயில் படும் இடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் நன்கு தடவி எழுமிச்சை தோலினால் 10 நிமிடம் மசாஜ் செய்து பின் உலர விட்டு விடுங்கள். உலர்ந்து காய பத்திலிருந்து பதினைந்து நிமிடம் எடுக்கும். அதன் பிறகு நீங்கள் கழுவி கொள்ளுங்கள் அவ்வளவுதான்.
இதுபோல தொடர்ந்து நீங்கள் ஏழு நாட்கள் செய்து வந்தால் நல்ல ஒரு ரிசல்ட் தெரியும். மீண்டும் மெல்ல மெல்ல உங்களுடைய சருமத்தின் உடைய ஒரிஜினல் நிறத்திற்கு கொண்டு வந்து விட்டுவிடும்.
இதுபோல கறுமைப் படர்ந்துள்ள எல்லா இடங்களிலும் நீங்கள் பயன்படுத்தலாம். வெயிலில் அதிகம் சுற்றி திரிபவர்கள் அதிக அளவு தண்ணீரை பருக வேண்டும்.
தண்ணீர் மட்டும் அல்லாமல் பழச்சாறுகள், இளநீர், மோர் போன்றவற்றையும் அருந்தி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் முகத்திற்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
இதனால் புற ஊதாகதிர்களால் தாக்கங்கள் ஏற்படாது, சருமத்தை பாதுகாக்க முடியும். வெளியில் செல்லும் பொழுது கழுத்து, கைகளை கிளவுஸ் போட்டு மூடிக் கொண்டு செல்வது இன்னும் ரொம்பவே நல்லது.
No comments: