ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி & நோர்ட் பட்ஸ் 2 ஏப்ரல் 4ல் அறிமுகம் / ONEPLUS NORD CE 3 5G LITE & ONEPLUS NORD BUDS 2
ONEPLUS NORD CE 3 5G LITE & ONEPLUS NORD BUDS 2: ஒன்பிளஸ் நிறுவனம் ஆண்டுதோறும் புதிய ஃபிளாக்ஷிப் கில்லரை அறிமுகப்படுத்துவதன் மூலம் மற்ற நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் போன்களை துவம்சம் செய்து வருகிறது.
ஆனால் அதன் பயனர் தளம் முதிர்ச்சியடைய தொடங்கியதால், இந்த பிராண்ட் மிட்-ரேன்ஜ் பிரிவிலும் நுழைய தொடங்கியது. இந்த இடத்தில் தான் ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸ் உள்ளே வந்தது. கடந்த 2020 இல் அறிமுகமான இந்த சீரீஸ் கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த வன்பொருளுக்கு பெயர்போன ஸ்மார்ட்போன்களாகும்!
இதன் தொடர்ச்சியாக, உலகளாவிய தொழில்நுட்ப பிராண்ட்டான ஒன்பிளஸ் இந்த சீரீஸின் கீழ் அதன் அடுத்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 ஆகியவைகள் 'லார்ஜர் தேன் லைஃப் - ஏ ஒன்பிளஸ் நோர்ட் லான்ச் ஈவென்ட்' என்கிற நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்த வெளியீட்டு நிகழ்வின் போது, ஒன்பிளஸ் நிறுவனம் கூட்டத்திலிருந்து தனித்து நிற்கும் வகையில் எவ்வாறு புதுமைகளை உருவாக்கியது என்பதை விவரிக்கும் பவர் பேக்டு தயாரிப்புகளை அறிமுகம் செய்யும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஓ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது மிட்-ரேன்ஜ் பிரிவில் பரபரப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் இது வாடிக்கையாளர்களால் புறக்கணிக்க முடியாத அம்சங்களையும் கொண்டிருக்கும்.
ONEPLUS NORD CE 3 5G LITE / ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி
ONEPLUS NORD CE 3 5G LITE & ONEPLUS NORD BUDS 2: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸின் பாரம்பரியமான 'ஃபாஸ்ட் அண்ட் ஸ்மூத் எக்ஸ்பீரியன்ஸை' புதிய பாஸ்டல் லைம் நிறத்துடன் ஒருங்கிணைக்கும்.
மேலும் எளிமையான, ஆனால் வசீகரமான டூயல் கேமரா செட்டப்பையும் கொண்டுருக்கும். அதுமட்டுமல்ல! ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது அதன் முன்னோடிகளை போலவே முக்கியமான ஹை-எண்ட் அம்சங்களை மலிவு விலையில் பேக் செய்யும்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் பற்றிய அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்தி, அறிமுக நிகழ்வின் சுவாரசியத்தை கெடுக்க நாங்கள் நிச்சயமாக விரும்ப மாட்டோம். இருப்பினும் இதுவரை நாங்கள் அறிந்த விவரங்களை உங்களுடன் பகிர விரும்புகிறோம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஆனது 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் திறனுடன், ஒரு பெரிய 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும். 5ஜி நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஃபாஸ்ட் சார்ஜிங்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இதன் அதிவேக சார்ஜிங் உங்கள் மொபைலை எப்போதும் உங்களுடனேயே இருப்பதை உறுதிசெய்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 30 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை 0-80% வரை சார்ஜ் செய்யும். அதாவது அரை மணி நேரத்தில், நீங்கள் முழு நாளும் சாட் செய்யலாம், புகைப்படங்களை எடுக்கலாம், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீமிங் செய்யலாம்.
இது ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே சூப்பர்வூக் எண்டூரன்ஸ் எடிஷனாகும். இது பேட்டரி ஹெல்த் எஞ்சினுடன் வருகிறது, இது பயனர்களின் சார்ஜிங் மற்றும் தூங்கும் பழக்கத்திற்கு ஏற்றவாறு சார்ஜிங்கை மேம்படுத்துகிறது.
இது பேட்டரியை அதிகமாக சார்ஜ் செய்வதையும், முன்கூட்டியே பேட்டரி "வயதாகுவதையும்" தடுக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை தினமும் சார்ஜ் செய்தாலும் இதன் பேட்டரி 4 வருட ஆயுட்காலத்தை வழங்கும்.
நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரியுடன், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது பிரகாசமான, தெளிவான, கூர்மையான மற்றும் இயற்கையான புகைப்படங்களை வழங்கும் 9-in-1 பிக்சல் பின்னிங் கொண்ட பெரிய 108எம்பி கேமரா செட்டப்புடன் வருகிறது.
மேலும் இது எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனையும் (இஐஎஸ்) கொண்டுள்ளது. இது உங்கள் புகைப்படத் திறன்களுக்கு உயர்மட்ட துல்லியத்தை சேர்க்கிறது. மேலும் இதன் பெரிய கேமரா சென்சார் 3X லாஸ்லெஸ் ஜூம் செய்யவும் அனுமதிக்கிறது, இது தொலைவில் இருந்தபடியே சிறந்த விவரங்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது 'வேகமான மற்றும் மென்மையான' அனுபவத்தை வழங்குவதற்காக, ஒரு வேடிக்கையான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட பயனர் அனுபவத்தை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட 8ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் ஒருங்கிணைந்த கேமிங் அம்சங்களை வழங்கும் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்டை பேக் செய்கிறது.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 ஓஎஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் கேமிங்கிற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட ஜிபிஏ ஃபிரேம் ஸ்டெபிலைசரும் அடக்கம்.
ONEPLUS NORD CE 3 5G LITE & ONEPLUS NORD BUDS 2: ஸ்னாப்டிராகன் 695 5ஜி ஆனது அதிக ஆற்றல் திறன் கொண்ட ஒரு வலுவான ஜிபியு-வை கொண்டுள்ளது, எனவே நீங்கள் கேமிங் செய்யலாம், ஸ்ட்ரீம் செய்யலாம் மற்றும் உங்கள் எல்லா வேலைகளையும் ஸ்மூத் ஆக செய்து முடிக்கலாம்.
கூடுதலாக, இந்த சிப்செட் வைஃபை 5 உடன் டூயல் 5ஜி மோட் நெட்வொர்க்கை ஆதரிக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் எந்த தடையும் இல்லாத கேமிங் மற்றும் ஸ்ட்ரீமிங்கை வழங்கும்.
கடைசியாக, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் எஃப்எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவானது 91.4% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவுடன் விளிம்புகள் வரை நீண்டுள்ளது மற்றும் 680 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வருகிறது. இது சராசரியான ஸ்மார்ட்போனை விட பிரகாசமாக உள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 / ONEPLUS NORD BUDS 2
ONEPLUS NORD CE 3 5G LITE & ONEPLUS NORD BUDS 2: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுடன் சேர்த்து இந்த டெக் பிராண்ட் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2-வையும் அறிமுகப்படுத்துகிறது, இது ஒரு புதுமையான பாஸ்வேவ் அல்காரிதத்தை நம்பி கேட்பவர்களை ஒலியின் அடிப்படையில் புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது.
இந்த டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் வலுவான பாஸை வழங்கும் அதே சமம் ஆடியோ தரத்தை ஒரிஜினல் ரெக்கார்டிங்கிலேயே வைத்திருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் டைனமிக் பாஸ் மேம்பாடு பலவீனமான பேஸ் பிட்ச்களுக்கு ஈடுசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 ஆனது 12.4மிமீ ட்ரைவர் யூனிட்டுடன் வருகிறது, இது இதுவரை இல்லாத அளவில் அதிக காற்றோட்டத்துடன் ஒலி தரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது,
அதே சமயம் வைப்ரேட்டிங் டைட்டன்ஸ் பாஸில் உள்ள ஸ்டிஃப்பர் டைட்டானியம் லேயர் ஆனது மிகவும் தெளிவான ஆடியோவை வழங்குகிறது.
மேற்கண்ட புதிய ஒன்பிளஸ் நோர்ட் தயாரிப்புகள் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி ஒரு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தயாரிப்புகளின் நேரடி வெளியீட்டை காண ஒன்பிளஸ் இந்தியாவின் சோஷியல் சேனல்களில், குறிப்பிட்ட தேதியில் இரவு 7மணிக்கு ட்யூன் செய்யவும்.
No comments: