LIC Vaya Vandana / எல்ஐசி வயா வந்தனா திட்டம்
திருமணமான தம்பதிகள் தங்களின் ஓய்வுக் காலத்தில் மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் எல்ஐசி நிறுவனம் சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா ஓய்வூதிய திட்டமாகும். இந்தத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020, மே 26ம் தேதி அறிமுகப்படுத்தி தற்போது எல்ஐசி-யால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது
இந்தத் திட்டத்தின் மூலம் திருமணமான தம்பதிகள் ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெறும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் 2023, மார்ச் 31ம்தேதிவரை தம்பதிகள் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யும் தம்பதிகள், தங்களின் 60வயதுக்குப்பின், மாதம் ரூ.18,500 ஓய்வூதியமாகப் பெற முடியும்.
இந்த வயா வந்தனா யோஜனா பென்ஷன் திட்டத்தில் தம்பதிகள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஓய்வுக்காலத்தில் ரூ.18,500 மாத ஓய்வூதியமாகப் பெறலாம். அதாவது தம்பதிகளில் இருவரும் தலா ரூ.7.50 லட்சம் சேர்த்து ரூ.15 லட்சம் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தம்பதிக்கு கிடைக்கும் வட்டி என்பது மூத்த குடிமக்களுக்கான திட்டங்களில் கிடைக்கும் வட்டியைவிட அதிகமாகும்.
கணவரும், மனைவிக்கும் தனித்தனியாக மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் கிடைக்க விரும்பினால் இருவரும் தனித்தனியாக ரூ.15 லட்சம் வயா வந்தனா திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இருவரும் சேர்ந்து ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், அந்தத் தொகைக்கு ஆண்டுக்கு 7.40 சதவீதம் வட்டி கிடைக்கும், அதாவது ஆண்டுக்கு ரூ.2.22 லட்சம் கிடைக்கும்.
இந்த ரூ.2.22 லட்சத்தை 12 மாதங்களில் பிரிக்கும்போது, மாதம் ரூ.18,500 ஓய்வூதியமாகப் பெறலாம். ஒருவர் மட்டும் ரூ.15லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.9,250 ஓய்வூதியமாகவோ அல்லது வட்டியாகவோ கிடைக்கும். நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற திட்டமாகும்.
No comments: