Ads Top

மணக்கும் சிக்கன் மசாலா பொடி தயார் செய்வது எப்படி? / HOW TO MAKE CHICKEN MASALA POWDER AT HOME?

HOW TO MAKE CHICKEN MASALA POWDER AT HOME?
  • சிக்கன் குழம்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். இதுவரை செய்ததை விட சற்று வித்யாசமான சுவைக்கு இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்துப்பாருங்கள் வீடே மணக்கும்.

தேவையான பொருட்கள்

  • தனியா - 100 கிராம்
  • சிவப்பு மிளகாய் - 25 கிராம்
  • மிளகு - 2 டீஸ்பூன்
  • சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
  • சோம்பு - 2 டீஸ்பூன்
  • அரிசி - 2 டீஸ்பூன்
  • ஏலக்காய் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் - 1 டீஸ்பூன்
  • கசகசா - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • பிரிஞ்சு இலை - 2
  • ஸ்டார் பூ - 1
  • பட்டை - 1 இஞ்ச்
  • கிராம்பு - 5
  • கல் பாசி - சிறிதளவு
  • கருப்பு ஏலக்காய் - 2
  • கல் உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

  • காய்ந்த மிளகாயைத் தவிர மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கடாயில் எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  • அதை வெப்பம் தனியுமாறு பெரிய தட்டில் கொட்டிக் காயவிடவும்.
  • தற்போது அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.
  • பொடியை வெப்பம் போக காய வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்துவையுங்கள்.
  • ஒரு மாதம் வரைப் பயன்படுத்தலாம்.

No comments:

Powered by Blogger.