கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவினால் ஆபத்து / HOW TO COOK CHICKEN MEAT CORRECTLY?
பொதுவாக எந்த உணவுப் பொருளையும் சமைக்கும் முன் சுத்தமாக கழுவிய பின் சமையலில் சேர்க்க வேண்டும் என்பார்கள்.
அதுபோல கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் தண்ணீரில் கழுவுவது நல்லது என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கோழி இறைச்சியை தண்ணீரில் கழுவினால் நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது என உலகெங்கிலும் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
உலகெங்கிலும் உள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் கட்டுப்பாட்டாளர்களும் சமைக்கும் முன் பச்சையாக உள்ள கோழி இறைச்சியை கழுவ வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
கோழி இறைச்சியை கழுவினால், சமையலறையைச் சுற்றி ஆபத்தான பாக்டீரியாக்கள் பரவக்கூடும் என்பதால் இவ்வாறு செய்வது தவறான முறை என்கின்றனர். அதற்கு பதிலாக கோழி இறைச்சியை கழுவாமல் நன்றாக சமைப்பது சிறந்தது என தெரிவித்தனர்.
உணவில் பரவும் நோய்க்கான இரண்டு முக்கிய காரணங்கள் கேம்பிலோபாக்டர் (Campylobacter) மற்றும் சால்மோனெல்லா (Salmonella) ஆகிய பாக்டீரியாக்கள்தான். அவை பொதுவாக கோழி இறைச்சிகளில் காணப்படுகின்றன.
கோழி இறைச்சியை கழுவும்போது இந்த பாக்டீரியாக்கள் சமையலறையில் எல்லா இடங்களிலும் பரவுகின்றன. இதன் காரணமாக நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
ஆஸ்திரேலியாவின் உணவு பாதுகாப்பு தகவல் கவுன்சில் நடத்திய ஆய்வில், ஆஸ்திரேலிய குடும்பங்களில் பாதி பேர் கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன்பு கழுவுகிறார்கள் என்று காட்டுகிறது. 25% நுகர்வோர் கோழி இறைச்சியை அடிக்கடி கழுவுவதாக டச்சு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில், கடந்த 20 ஆண்டுகளாக கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன.
வருடத்திற்கு 220,000 கேம்பிலோபாக்டர் நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன, 50,000 கோழி இறைச்சியிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படுகின்றனர்.
கோழி இறைச்சியை கழுவிய தண்ணீரில் ஆய்வு நடத்தி இந்த ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு ஆய்வு செய்தபோது இந்த நீர் துளிகள் மூலம் சமையலறை சிங்க் பகுதிகளை சுற்றிலும் இந்த பாக்ட்டீரியாக்கள் பாரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என நிரூபித்துள்ளது.
குறிப்பாக நீர்த்துளிகள் சிதறி தெறிக்கும் இது அதிவேகமாக மற்ற இடங்களுக்கும் பரவும் என கூறப்படுகிறது. அவை சிறு சிறு துளிகளாக தங்கி உற்பத்தியை பெருக்கவும் செய்யலாம். இதனால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பிரச்சனைகள் வரலாம்.
எனவே கோழி இறைச்சியை குறைந்த வெப்ப அளவிலான கொத்த தண்ணீரில் கழுவலாம். இந்த வெப்ப தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, மஞ்சள் சேர்த்து கிருமிகள் அழிந்துவிடும் என கூறப்படுகிறது. கோழி இறைச்சியை கழுவிய நீரை சிங்க் தொட்டியிலேயே ஊற்றாமல் வெளிப்புறத்தில் ஊற்றுவது நல்லது.
No comments: