BharOS: இந்தியாவின் உள்நாட்டு மொபைல் OS ஐ உருவாக்கியுள்ள ஐஐடி மெட்ராஸ்
தன்னிறைவு இந்தியா, "ஆத்மநிர்பர்" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தின் அங்கமாக ஐஐடி மெட்ராஸ், ஜான்ட்கே ஆப ரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உதவியுடன் நாட்டின் சிந்த OS எனப்படும் மொபைல் இயக்க முறைமையை உருவாக்கியுள்ளது.
டெவலப்பர்கள் இதற்கு 'BharOS' என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த OS நாட்டின் 100 கோடி மொபைல் போன் பயனர்களுக்கு பயனளிக்கும் என்று அறிவித்துள்ளனர்.
இந்த மென்பொருளை வணிக ரீதியான ஆஃப்-தி-ஷெல்ஃப் கைபேசிகளில் நிறுவ முடியும் என்றும் பயனர்களுக்கு மிகவும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதற்காக OS வடிவமைக்கப்பட்டுள்ளதாக டெவலப்பர்கள் கூறுகின்றனர்.
பயனர்களுக்கு அதிக சுதந்திரம், கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதன் மூலம் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற ஆப்ஸை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்த முடியும். தற்போது புழக்கத்தில் உள்ள OS-களை விட இதில் அதிக சுதந்திரம் வழங்கப்படுவதாக கூறுகின்றனர்.
தற்போது உள்ள ஆண்ட்ராய்டு முறைமை போன்களில் சில குறிப்பிட்ட செயலிகள் மற்றும் இயல்புநிலை Google பயன்பாடுகள் கண்டிப்பாக இருக்கும். அதுவே போன் நினைவகத்தில் குறிப்பிட்ட பகுதியை அடைத்துக்கொள்ளும்.
BharOS இல் அது போன்ற எந்த இயல்புநிலை செயலிகளும் அமைக்கப்படவில்லை. இதனால் பயனர்கள் தங்களுக்கு தேவையான செயலிகளை மட்டும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நம் போன்களில் பயன்படுத்தாமல் இடத்தை அடைக்கும் சில செயலிகளை தவிர்த்துக்கொள்ளலாம். இதனால் நினைவகமும் கூடுதலாக கிடைக்கும்.
ஆண்ட்ராய்டு போன்களைப் போலவே, 'நேட்டிவ் ஓவர் தி ஏர்' (NOTA) புதுப்பிப்புகளையும் ஒருவர் பெற முடியும். NOTA புதுப்பிப்புகள் தானாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டு சாதனத்தில் நிறுவப்படும் . எனவே பயனர்கள் செயல்முறையை கைமுறையாகத் தொடங்க வேண்டிய அவசியமில்லை.
அதுபோல அமைப்பு சார்ந்த தனியார் ஆப் ஸ்டோர் சேவைகளில் (PASS) நம்பகமான பயன்பாடுகளுக்கான அணுகலையும் OS வழங்கும். இதனால் முழுமையாக சரிபார்க்கப்பட்ட மற்றும் நிறுவனங்களின் சில பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தரநிலைகளை பூர்த்தி செய்த ஆப்ஸின் க்யூரேட்டட் பட்டியலுக்கு அணுகலை வழங்குகிறது.
இதன் பொருள் பயனர்கள் தாங்கள் நிறுவும் பயன்பாடுகள், பயன்படுத்த பாதுகாப்பானவை என்றும், ஏதேனும் சாத்தியமான பாதுகாப்பு பாதிப்புகள் அல்லது தனியுரிமை மீறல்கள் உள்ளதா என சரிபார்க்க முடியும்.
இருப்பினும், கடுமையான தனியுரிமை மற்றும் பாதுகாப்புத் தேவைகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே தற்போது BharOS வழங்கப்படுகிறது. மொபைல்களில் ரகசியத் தகவல்தொடர்புகள், தேவைப்படும் முக்கியமான தகவல்களை பயனர்கள் கையாள சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சோதனை நிலையில் உள்ள இந்த OS இன் பிரச்சனைகள் மற்றும் சவால்களை சரி செய்து வருகிறோம், மக்களுக்கு எளிதாக புழங்கும் வடிவத்தில் கொண்டு வர முயற்சித்து வருகிறோம். விரைவில் இது மற்ற OS போன்றே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று டெவெலப்பர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments: