திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை (ஐந்திணை அறுபது) & ஔவையார் பாடல்கள் / THINAIMALAI NOOTRAIMPATHU, KAINILAI (AINTHINAI AIMBATHU) & OVAIYAAR PADALKAL
- ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிமேதாவியார்
- ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன
- அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்
- திணை = ஐந்து அகத்திணைகளும்
- திணை வைப்பு முறை = குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
- பாவகை = வெண்பா
- உள்ளடக்கிய பொருள்வகை
= அகம் - திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது.
- இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது
- வரதட்சனை வாங்குவது தவறு என்று கூறும் நூல்
- குறிஞ்சி à 1 தொடக்கம் 31
வரை = 31 பாடல்கள் - நெய்தல் à 32 தொடக்கம் 62 வரை = 31 பாடல்கள்
- பாலை à 63 தொடக்கம்
92 வரை = 30 பாடல்கள் - முல்லை à 93 தொடக்கம்
123 வரை = 31 பாடல்கள் - மருதம் à 124 தொடக்கம்
153 வரை = 30 பாடல்கள்
- திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது
எனப் பெயர் பெற்றது.
- நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய
காதல், மணம், குடும்பம் போன்றவற்றின் மீது கொண்ட வெறுப்பு நீங்குமாறு இதனை படைத்துள்ளார். - இந்நூலின் ஆசிரியரே ஏலாதி என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
- இவர் பாண்டிய வேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பட்டவர்.
- பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் இந்நூலே பெரியது.
- இப்பாடலின் சில கருத்துக்கள் சுந்தரர் தேவாரத்திலும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும்
காணமுடிகிறது. - நூலில் உள்ள மொதப் பாடல்கள் = 153
- மூன்று பாடல்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை
- ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
- இருகடரும் போந்தன என்றார்
- பொருள் பொருள் என்றால் சொல்
- பொன்போலப் போற்றி
- அருள் பொருள் ஆகாமையாக – அருளால்
- வளமை கொணரும் வகையினால் மற்றோர்
- இளமை கொணர இசை
- நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்நாட
- கோள்வேங்கை போல்கொடியார் என்ஐயன்மார் – கோள்வேங்கை
- அன்னையால் நீயும், அருந்தழையாம் ஏலாமைக்கு
- என்னையோ? நாளை எளிது
- பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
- மாலையாழ் ஓதி வருடாயோ? - காலையாழ்
- செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
- நையும் இடமறிந்து நாடு
(ஐந்திணை அறுபது)
- ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
- பாடல்கள் = 60 (5*12=60)
- திணை = ஐந்து அகத்திணைகளும்
- பாவகை = வெண்பா
- இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.
- உள்ளடக்கிய பொருள்வகை
= அகம்
- கை = ஒழுக்கம்
- ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
- இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
- தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
- வடசொல் கலப்பு மிகுந்த நூல்
- ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்
- கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்
தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள்
இதுவும் ஒன்று. - இஃது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக்
கொண்டு பாடல்கள் வெண்பா பாவகையில் உள்ளன. - இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார்
என்னும் ஒரு புலவர். - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் உரை இந்நூலுக்கு உள்ளது. கை என்றால் ஒழுக்கம்.
நிலை என்றால் தன்மை. - ஆகவே, ஐந்திணையின் ஒழுக்க நிலையைக் கூறும் நூல் என்னும் பொருளில் இந்நூலின் பெயர்
கைந்நிலை என அமைந்துள்ளது. இந்நூலில் ஆசை, பாசம், கேசம், இரசம், இடபம், உத்தரம் போன்ற
வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன. - கைந்நிலை நூலில் 60 பாடல்கள் உள்ளன. குறிஞ்சி – 12, பாலை – 7, முல்லை – 3, மருதம்
– 11, நெய்தல் - 12 - ஆகிய 45 பாடல்கள் முழுமையான வடிவில் உள்ளன. பிற செல் அரித்த நிலையில் சிதைந்துள்ளன.
- ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
- குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப்
- பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து
- நாணும் தகையளாம் பெண்
தொடர்பான செய்திகள்
- எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு
நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. - அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.
- அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார்.
- இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.
- ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால்,
சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு
அடுத்த நிலையில் உள்ளார்.
பாடப்பட்ட அரசர்கள்
- சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில்
தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து
மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்.
- அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி ஆகிரோரை ஔவை பல பாடல்களில்
போற்றியுள்ளார். - மூவேந்தர் பறம்புமலையை முற்றியிருந்தபோது அவன் வளர்த்த குருவிப் பறந்து சென்று
நெற்கதிர்களைக் கொண்டுவந்து தந்து பாரிக்கு உணவளித்தனவாம். - விறலியர் சமைத்த கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்கு ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம்
அரிசி கேட்டாராம். - இந்த வள்ளுவன் தன் தகுதிக்கு அரிசி தருவது இழிவு எனக் கருதி போர்க்களிறு ஒன்றைப்
பரிசாகத் தந்தானாம். இதனைத் தேற்றா ஈகை எனக் குறிப்பிட்டு ஔவை வருந்துகிறார்.
- மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
- மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் – மன்னர்க்குத்
- தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
- சென்ற இடம் எல்லாம் சிறப்பு
- ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக் கற்றவனே மேலானவன். ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும்
சிறப்பு இல்லை. ஆனால் கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம்
சிறப்பு.
- மாசற்ற - குறை இல்லாமல்
- சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
- தேசம் - நாடு
- மூதுரை - ஒளவையார் எழுதிய நீதிநூல்களில் இதுவும் ஒன்று.
- வாக்குண்டாம் எனது தொடங்குவதால் இந்நூலை "வாக்குண்டாம்" எனும் பெயரால்
அழைப்பர். - இதில் 31 வெண்பாக்கள் உள்ளது.
- பழமையான கருத்துக்களை கூறுவதால் மூதுரை என்று அழைக்கப்படுகிறது.
- சங்ககாலம் முதல் பிற்காலம் வரை ஒளவையார் எனும் பெயரில் பெண்பாற்புலவர்கள் பலர்
வாழ்ந்துள்ளனர். - இவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்த்துள்ளனர்.
நூல்கள்
- ஆத்திசூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- மூதுரை
No comments: