Ads Top

சுரதா / SURATHA HISTORY IN TAMIL

சுரதா / SURATHA HISTORY IN TAMIL
  • பழையனூர் என்னும் ஊரில்
    திருவேங்கடம் – செண்பகம்க்கு 23.11.1921 அன்று பிறந்தார்.
  • இவருடைய இயற்பெயர்
    இராசகோபாலன்.
  • கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட
    பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன்
    பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
  • மாற்றுப் பெயரில் சுருக்கமாக
    சுரதா என்ற பெயரில் பல மாற்று கவிதைகளைை தொகுத்துள்ளார்.
  • செய்யுள் மரபு மாறாமல்
    எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் பெற்றார்.
  • இதனால் இவரை உவமை புலவர் என சிறப்பித்துக்
    கூறுகின்றனர்.
  • மேலும் இவர் சீர்காழி
    அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
  • சுரதா தமிழகக் கவிஞரும்
    எழுத்தாளரும் ஆவார்.
  • அமுதும் தேனும், தேன்மழை,
    துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
  • முழுக்க முழுக்கக்
    கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம்
    போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்;
  • தேன்மழை, துறைமுகம்,
    மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.
  • இவர் தமிழக அரசின் கலைமாமணி
    விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது
    உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
  • கவிஞர் சுரதா யாரிடம் தமிழ்
    இலக்கணங்களைக் கற்றார் - சீர்காழி அருணாசல தேசிகர்
  • சுரதாவின் முதல் நூல் -
    சாவின் முத்தம்
  • தமிழக அரசு சுரதாவுக்குக்
    கலைமாமணி என்னும் விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1972
  • சுரதாவின் தேன்மழை
    நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அளித்த விருது - இராசராசன் விருது
  • சுரதாவின் படைப்புகளுக்கு
    எடுத்துக்காட்டு - வார்த்தை வாசல், மங்கையர்க்கரசி, சிரிப்பின் நிழல்
  • சுரதா பாவேந்தர் பாரதிதாசனை
    முதன்முதலில் கண்டு பழகிய நாள் - 1941 ஜனவரி 14
  • பாவேந்தர் தலைமையில் இயங்கிய
    தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966இல் தலைவராகத் தேர்ந்தொடுக்கப்பட்டவர் - சுரதா
  • சுரதாவை திரையுலகத்திற்கு  அறிமுகப்படுத்தியவர் - கு.ச.கிருட்டிணமூர்த்தி
  • கவிஞர் சுரதா 1955இல்
    தொடங்கிய வார இதழ் - காவியம்.

பாரதிதாசன் உடன் தொடர்பு                       

  • 1941ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம்
    நாள் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கி
    இருந்து அவரின் கவிதைப் பணிக்குத் துணை நின்றார்.
  • பாவேந்தர் பாடல்களைப்
    படியெடுத்தல்.
  • அச்சு பணிகளைை கவனித்தல்.
  • பாவேந்தர் நூல்
    வெளியீட்டிற்கு துணைை நிற்றல்.
  • எனப் பல நிலைகளில் பாவேந்தர்
    பாரதிதாசன் உடன் சுரதா தொடர்பு வைத்துள்ளார்.

கவிதை இயற்றுவதில் சுரதாவின் பங்கு

  • கவிஞர் சுரதாவின் சொல்லடா
    எனும் தலைப்பில் அமைந்த கவிதையை புதுக்கோட்டையிிிலிருந்து வெளிவந்த பொன்னி எனும்
    இதழ் 1947 ஏப்ரல் திங்கள் இதழில் வெளியிட்டுு இவரை பாரதிதாசனின் பரம்பரைக் கவிஞராக
    அறிமுகம் செய்தது.
  • பாவேந்தர் புரட்சிக்கவி
    நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில்
    அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமை கவிஞர் சுரதாவை சாரும்.
  • அரசவைக் கவிஞராக நாமக்கல்
    கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபோது அவரின் உதவியாளராக இருந்தார்.

திரைப்படத்துறையில் கவிஞர் சுரதாவின் பங்கு

  • சுரதாவின் கலை உணர்வை
    தெரிந்துகொண்ட கு.ச. கிருஷ்ணமூர்த்தி என்பவர் இவரை திரைப்படத்துறைக்கு அறிமுகம்
    செய்து வைத்தார்.
  • 1944ஆம் ஆண்டு
    மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக உரையாடல் எழுதினார்.
  • கவிஞர் சுரதா மிகக் குறைவான
    பாடல்களை எழுதியுள்ளார்.
  • சீர்காழி கோவிந்தராஜன்
    அவர்களின் குரலில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் சுரதா அவைகள் பின்வருமாறு
  • “அமுதும் தேனும் எதற்கு நீ
    அருகினில் இருக்கையிலே”
  • “ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா”
  • மேலும் இவர் நூற்றுக்கும்
    மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

எழுத்துப் பணியில் சுரதாவின் பங்கு

  • கவிஞர் சுரதாவின் முதல் நூல்
    “சாவின் முத்தம்” இதனை V.R.M செட்டியார் என்பவர் 1946 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
  • மேலும் இவர் 1956 இல்
    பட்டத்தரசி என்ற சிறுகாவிய நூலை வெளியிட்டார்.
  • 1954 இல் கலைஞர்
    கருணாநிதியின் முரசொலி என்ற இதழில் தொடர்ந்து கவிதைகளைை எழுதி வந்தார்.

சிறப்பு பெயர்கள்

  • உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)
  • கவிஞர் திலகம் (சேலம் கவிஞர்
    மன்றம்)
  • தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ்
    மன்றம்)
  • கலைமாமணி (தமிழக இயலிசை நாடக
    மன்றம்)
  • கவிமன்னர் (கலைஞர்
    கருணாநிதி)

படைப்புகள்

  • தேன்மழை(கவிதைத் தொகுதி,
    தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு)
  • சிரிப்பின் நிழல்(முதல்
    கவிதை)
  • உதட்டில் உதடு
  • பட்டத்தரசி
  • சுவரும் சுண்ணாம்பும்
  • துறைமுகம்
  • வார்த்தை வாசல்
  • எச்சில் இரவு
  • அமுதும் தேனும்
  • வினாக்களும் சுரதாவின்
    விடைகளும்
  • நெய்தல் நீர்
  • எப்போதும் இருப்பவர்கள்
  • சாவின் முத்தம் (முதல் நூல்)
  • கலைஞரைப் பற்றி உவமைக்
    கவிஞர்
  • சிறந்த சொற்பொழிவுகள்
  • சுரதா கவிதைகள்
  • சொன்னார்கள்
  • தொடாத வாலிபம்
  • தமிழ்ச் சொல்லாக்கம்
  • நெஞ்சில் நிறுத்துங்கள்
  • புகழ்மாலை
  • பாவேந்தரின் காளமேகம்
  • முன்னும் பின்னும்
  • மங்கையர்க்கரசி
  • வார்த்தை வாசல்
  • வெட்ட வெளிச்சம்
  • சிக்கனம்
  • பாரதிதாசன் பரம்பரை

கட்டுரை

  • முன்னும் பின்னும்

இதழ்

  • காவியம்(முதல் கவிதை இதழ்,
    வார இதழ்)
  • இலக்கியம்(மாத இதழ்)
  • ஊர்வலம்(மாத இதழ்)
  • சுரதா(மாத இதழ்)
  • விண்மீன்(மாத இதழ்)

கவிஞர் சுரதா பெற்ற சிறப்புகள்

  • 1969 இல் தேன்மழை என்ற
    சுரதாவின் கவிதை நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
  • 1972 இல் தமிழக அரசு
    “கலைமாமணி” என்ற விருது வழங்கி சிறப்பித்தது.
  • 1978 இல் ம.கோ. தலைமையில்
    நடைபெற்ற அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிி சிறப்பித்தது.
  • தமிழக அரசின் முதல்
    பாவேந்தர் நினைவுப் பரிசு பெற்றவர்
  • வ.ரா (வ.ராமசாமி) = மற்றொரு
    பாரதி பிறந்து விட்டான்
  • தமிழக அரசு சுரதாவின்
    நூல்களை நாட்டுடைமையாக்கி அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் பரிசுத் தொகையாக
    வழங்கியது.
  • 1982 இல் சுரதாவின் மணி
    விழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் 60 ஆயிரம் பரிசு
    தொகையாக வழங்கியது.
  • 1982 இல் சுரதாவின் கவிதை
    பணிகளை பாராட்டி குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் “கவியரசர் பட்டம்”
    வழங்கப்பட்டது.
  • 1987 இல் மலேசியாவில்
    நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
  • 1990 இல் கலைஞர் அரசு
    பாரதிதாசன் விருது கவிஞர் சுரதாவிற்கு வழங்கியது.
  • 1990 கேரளாவில் மகாகவி
    குமரன் ஆசான் விருது கவிஞர் சுரதாவுக்கு வழங்கப்பட்டது.
  • சுரதாவின் தேன்மழை நூலிற்கு
    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ரூபா ஒரு லட்சம் “ராசராசன் விருது வழங்கியது”.

சுரதாவின் மறைவு

  • கவிஞர் சுரதா தன்னுடைய 84
    ஆம் வயதில் 20-06-2006இல் செவ்வாய்க்கிழமை சென்னையில் உடல் நலக்குறைவால் இயற்கை
    எய்தினார்.
  • சுரதாவின் நினைவாக
    29-09-2008 இல் சென்னையில் சுரதாவிற்கு நினைவுச் சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி
    அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இச்சிலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
    சார்பில் அமைக்கப்பட்டது.
  • கவிஞர் சுரதாவின் நினைவாக
    அவர் இயற்றிய நூல்கள் மற்றும் கவிதைகள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்
    பாடப் பகுதிகளில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

  • தேன்மழை – தமிழக அரசின்
    பரிசு, கலைமாமணி விருது – தமிழக அரசு,
  • பாவேந்தர் பாரதிதாசன்
    விருது, கவியரசர் பட்டம், கேரள மகாகவி குமரன் ஆசான் விருது, தேன்மழை என்ற நூல் -
    இராசராசன் விருது.

சிறந்த தொடர்கள்

  • தண்ணீரின் ஏப்பம் தான்
    அலைகள்
  • தடைநடையே அவர் எழுத்த்தில்
    இல்லை வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கள் உண்டு
  • படுக்கவைத்த வினாக்குறி போல்
  • மீசை வைத்த பாண்டியர்கள்
  • வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
  • எதுகை வரல்போல் அடுத்து வந்தால், அத்தி                    
  • என்பானோ மோனனையைப் போல்
    முன்னே வந்தான்



































































































































































































































No comments:

Powered by Blogger.