முடியரசன் மேற்கோள்கள்: MUDIYARASAN QUOTES IN TAMIL | MUDIYARASAN THOUGHTS IN TAMIL
முடியரசன்
- முடியரசன் மேற்கோள்கள்: MUDIYARASAN QUOTES IN TAMIL | MUDIYARASAN THOUGHTS IN TAMIL: முடியரசன் (அக்டோபர் 07, 1920 – டிசம்பர் 03, 1996) தேனி மாவட்டத்தில் பெரியகுளம் என்னும் ஊரில் சுப்பராயலு – சீதாலட்சுமிக்கு அக்டோபர் 07, 1920 அன்று பிறந்தார்.
- இவருடைய இயற்பெயர் துரைராசு.
- இவர் மீனாட்சி சுந்தரனார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
- சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்.
- சடங்குகளை மறுப்பவர்.
- இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.
- பூங்கோடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
- திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
சிறந்த தொடர்கள்
ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால்
அன்னை மொழி பேசுவதற்கு நாணுகின்ற
தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி?
இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை
இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு
வரம்பில்லையேல் எம்மொழியும் அழிந்து போகும்
மணவினையில் தமிழுண்டோ, பயின்றவர் தம்முள்
வாய்ப்பேச்சில் தமிழுண்டோ, மாண்டபின்னர்
பிணவினையில் தமிழுண்டோ
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
கைம்மாறு விளைந்துபுகழ் பெறுதல் வேண்டி
மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை
மறைத்துவிட்டு பாடுபவன் கவிஞன் அல்லன்;
தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத்
தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு
மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்;
ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும்
ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்;
மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது
காட்சிக்குப் புளியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பைசுபவன் கவிஞன் ஆவன்;
தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்,
No comments: