பாரதியார் பற்றிய குறிப்பு / BHARATHIYAR
- சுப்பிரமணிய பாரதி (சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி) (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921) தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் என்னும் ஊரில் சின்னசாமி – இலக்குமி அம்மையார்க்கு திசம்பர் 11, 1882 அன்று பிறந்தார்.
- இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.
- பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
CLICK HERE TO EDIT YOUR PHOTO AND SIGNATURE FOR TNPSC APPLICATION - TNPSC PHOTO COMPRESSOR
- சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்பநாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.
- சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதையை இவர் தமது குருவாக கருதினார்.
- தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார்.
- தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
- தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
- எட்டயப்புர சமஸ்தானப் புலவர்கள் “பாரதி” என்ற பட்டம் அளித்தனர். தம்மை “ஷெல்லிதாசன்” என்று அழைத்துக்கொண்டார்.
- தம் பூணூலை கனகலிங்கம் என்ற ஆதி திராவிடற்கு அளித்தவர். தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர்.
- 1905இல் சக்கரவர்த்தினி என்ற இதழ் தொடங்கினார். கர்மயோகி, பாலபாரத் ஆகிய இதழை நடத்தினார். சுதேசி மித்திரன் என்ற இதழின் துணையாசிரியர் ஆக பணிப்புரிந்தார். ”இந்தியா” என்ற இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
- நிவேதிதா தேவியைச் சந்தித்த பின் தீவிரவாதி ஆனார். இவரின் இவர் “தம்பி” என அழைப்பது = பரலி நெல்லையப்பர்.
- பாரதியார் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி நெல்லையப்பர். பாரதியார் பாடல்களை முதலில் வெளியிட்டவர் = கிருஷ்ணசாமி ஐயர்.
- பாரதியின் படத்தை வரைந்தவர் “ஆர்ய என்ற பாஷ்யம்”. பாரதிக்கு “மகாகவி” என்ற பட்டம் கொடுத்தவர் வ.ரா (ராமசாமி ஐயங்கார்).
- பாரதி சங்கத்தை தொடங்கியவர் = கல்கி. மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
- இவரின் முதல் பாடல் வெ111ளிவந்த இதழ் = விவேகபானு (1904, தலைப்பு = தனிமை இரக்கம்). இவர் கீதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 55
- பதஞ்சலி சூத்திரத்திற்கு உரை எழுதி உள்ளார். தாகூரின் சிறுகதைகள் 11ஐத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
- பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில், “தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொது எனக்கு வருத்தம் உண்டாகிறது.
- தமிழனை விட மற்றொரு சாதி அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்குச் சம்மதமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
- உரைநடை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, “கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி” என்கிறார்.
- தமிழில் முதன் முதலில் கருத்துப்படங்கள் வெளியிட்டவர் இவரே.
- கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் இவரே. பாரதியின் சுயசரிதமே தமிழின் முதல் சுயசரிதம். அனைவரும் தாய்நாடு எனக் கூற பாரதி மட்டும் தந்தையர் நாடு எனக் கூறியவர்.
- பாரதி சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்.
- 2021 முதல் தமிழக அரசின் சார்பில் “செப்டம்பர் 11” ஆம் தேதி “மகாகவி நாள்” ஆக ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
- கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசன கவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர்.
- சிந்துக்குத் தந்தை செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.
- பாட்டுக்கொரு புலவன்
- நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா
- சிந்துக்குத் தந்தை, தற்காலத் தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி
- தேசிய கவி
- மக்கள் கவி
- மகாகவி (வ.ரா பெயரிட்டார்)
- ஷெல்லிதாசன்
- காளிதாசன்
- சக்திதாசன்
- சாவித்திரி
- ஓர் உத்தம தேசாபிமானி
- நித்திய தீரர்
- குயில் பாட்டு
- கண்ணன் பாட்டு
- சுயசரிதை
- தேசிய கீதங்கள்
- பாரதி அறுபத்தாறு
- ஞானப் பாடல்கள்
- தோத்திரப் பாடல்கள்
- விடுதலைப் பாடல்கள்
- விநாயகர் நான்மணிமாலை
- பாரதியார் பகவத் கீதை (பேருரை)
- பதஞ்சலியோக சூத்திரம்
- நவதந்திரக்கதைகள்
- உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
- ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
- சின்னஞ்சிறு கிளியே
- ஞான ரதம்
- பகவத் கீதை
- சந்திரிகையின் கதை
- பாஞ்சாலி சபதம்
- புதிய ஆத்திசூடி
- பொன் வால் நரி
- ஆறில் ஒரு பங்கு
- தராசு
- முரசு
- பாப்பா பாட்டு
- இந்தியா
- சுதேசமித்திரன்
No comments: