- பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964) புதுவை மாவட்டத்தில் கனகசபை – இலக்குமி அம்மையார் க்கு ஏப்ரல் 11, 1882 அன்று பிறந்தார்.
- இவருடைய இயற்பெயர் கனக சுப்பிரத்தினம்.
- தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
- பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
- பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை பாரதிதாசன் ஆக ஆக்கிக்கொண்டார்.
- அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்.
- பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் பாடிய “எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பாடலைக் கேட்ட அவர், அக்கவிதையைத் தாமே, “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது” எனச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்.
- தொடக்க கல்வி கற்றது = திருப்புளி சாமியாரிடம்.
- இவர் தமிழ் பயின்றது = புலவர் பு.அ.பெரியசாமியிடம்.
- இவரின் கவித்திறன் கண்டு “நாவலர் சோமசுந்தர பாரதியார்” தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும் 25000 ரூபாய் நன்கொடையும் அளித்தார்.
- வ.ரா.வின் அழைப்பின் பேரில் “இராமனுஜர்” என்னும் படத்திற்கு திரைப்படப்பாடல் எழுதினார். 1990ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கியது.
- மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார்.
- பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர். குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், ஆகிய காப்பியங்களையும் எண்ணற்ற பாடல்களையும் இயற்றியவர்.
- 'குயில்' என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார்.
- இவருடைய 'பிசிராந்தையார்' நாடகத்துக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது.
- தமிழக அரசு இவருடைய பெயரால் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
சிறப்பு பெயர்- புரட்சிக்கவி (அறிஞர் அண்ணா)
- புரட்சிக்கவிஞர் (பெரியார்)
- பாவேந்தர்
- புதுவைக்குயில்
- பகுத்தறிவு கவிஞர்
- தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
- இயற்க்கை கவிஞர்
புனைப் பெயர்கள்- கண்டழுதுவோன்
- கிறுக்கன்
- கிண்டல்காரன்
பாரதிதாசன் இயற்றிய நூல்கள்- இசை அமுது
- பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம்
- சேரதாண்டவம்
- அழகின் சிரிப்பு
- புரட்சிக்கவி
- குடும்ப விளக்கு
- இருண்ட வீடு
- குறிஞ்சித்திட்டு
- கண்ணகி புரட்சிக்காப்பியம்
- மணிமேகலை வெண்பா
- காதல் நினைவுகள்
- கழைக்கூத்தியின் காதல்
- தமிழச்சியின் கத்தி
- இளைஞர் இலக்கியம்
- சுப்பிரமணியர் துதியமுது
- சுதந்திரம்
- தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது)
பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய குறிப்பு / BHARATHITHASAN (BHARATHIDASAN)
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
February 19, 2023
Rating:
5
No comments: