Ads Top

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது & திணைமொழி ஐம்பது / AINTHINAI AIMBATHU, AINTHINAI ELUPATHU & THINAIMOZHI AIMBATHU



ஐந்திணை ஐம்பது

  • ஆசிரியர் =
    மாறன் பொறையனார்
  • காலம் = கி.பி.
    நான்காம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 50
    (5 X 10 = 50)
  • திணை = ஐந்து
    அகத்திணை
  • திணை வைப்பு
    முறை = முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய
    பொருள்வகை = அகம்

பெயர்க்காரணம்

  • ஐந்து
    தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை
    ஐமபது எனப் பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்

  • முல்லைத் தினையை
    முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு இது மட்டுமே ஆகும்.
  • இந்நூலின்
    பாயிரத்தில், கூறப்படுவது.
  • ஐந்திணை
    ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
  • செந்தமிழ்
    சேராதவர்
  • நச்சினார்கினியரரும்,
    பேராசிரியரும் தங்கள் உரையில் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்
  • தொல்காப்பியர்
    கூறாத பாலைத்திணை நான்காவதாக வைத்துப் பாடப்பட்டுள்ளது.
  • To Calculate SBI EMI for Loan - SBI EMI CALCULATOR 
  • பதினெண்கீழ்க்கணக்கு
    நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது.
  • இந்நூல் சிறந்த
    செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும் கொண்டதாகும்.

ஐந்திணை எழுபது

  • ஆசிரியர் =
    மூவாதியார்
  • சமயம் = சைவம்
  • காலம் = கி.பி.
    5-ம் நூற்றாண்டு
  • உள்ளடக்கிய
    பொருள்வகை = அகம்
  • பாடல்கள் = 70
    (5*14=70)
  • திணை = ஐந்து அகத்தினணகளும்
  • திணை வைப்பு
    முறை = குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
  • பாவகை = வெண்பா
  • 66 பாடல்கள்
    கிடைத்துள்ளன

பொதுவான குறிப்புகள்

  • தும்முதல்,
    பெண்களின் இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல் முதலான நிமித்தங்கள் கூறப்பட்டுள்ளன.
  • மணமகள்
    மணமகனிடம் இருந்து உறுதிப்பத்திரம் எழுதி வாங்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
  • திணைக்கு
    பதினான்கு பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்கள் உள்ளன.
  • இந்நூலின்
    கடவுள் வாழ்த்துப் பாடலில் விநாயகர் வணக்கம் கூறப்பட்டுள்ளது.
  • இந்நூலில்
    நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை (முல்லையில் இரண்டு, நெய்தலில் இரண்டு)
  • ஒவ்வாரு
    திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து திணைக்குமாக 70 பாடல்கள் அமைந்துள்ளன.
  • இது
    அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.
  • ஐந்திணை எழுபது
    சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று.
  • பதினெண்கீழ்க்கணக்கு
    நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது.
  • ஐந்திணைகள்
    என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து வகையான பண்டைத்
    தமிழர் நிலப்பகுப்புகளாகும். 
  • இவ்வைந்து
    திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது
    பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.
  • இந்நூலில்
    குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை
    நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு
    திணைகளுக்கும் பொதுவாய் 'நடுவண் ஐந்திணை' என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத்
    திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டு உள்ளது என்பர்.
  • அகப்பொருள்
    சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களைப் போலவே, இதுவும் காதல் வயப்பட்ட
    உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகளினதும், பண்பாட்டினதும்
    பின்னணியிலும், அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்குப் பொருத்தமான நிலத்திணைகளின்
    பின்னணியிலும் எடுத்துக்கூறுகின்றது.
  • மற்றொரு பதினெண்
    கீழ்க்கணக்கு நூலான ஐந்திணை ஐம்பதை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டு இருக்கலாம்
    எனக்கருதப்படுகிறது. எனவேதான் இவ்விருநூல்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை
    இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
  • மேலும்
    இருநூல்களிலும் சில அடிகளும் கருத்துகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன.
    எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38-ஆம் பாட்டில், "கள்ளத்தின்
    ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி" என்னும் வரிகள் அப்படியே,
    ஐந்திணை எழுபதில் உள்ள 36-ஆம் பாட்டில் "கள்ளர் வழங்கும் சுரம் என்பர்,
    காதலர் உள்ளம் படர்ந்த நெறி" என இடம்பெற்று உள்ளன.
  • இந்நூலின்
    தொடக்கத்தில் விநாயகரைப் பற்றிக் கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில்
    காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாக இருப்பதாலும்
    இப்பாடலுக்குப் பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதியாரால்
    இயற்றப்பட்டு இருக்காது எனக் கருதப்படுகிறது.

முக்கிய அடிகள்

  • நன்மலை நாட!
    மறவல் வயங்கிழைக்கு
  • நின்னலது
    இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து
  • இன்னுயிர்
    தாங்கும் மருந்து
  • செங்கதிர்
    செல்வன் சினங்காத்த போழ்தினாற்
  • பைங்கொடி முல்லை
    மனங்கமழ வண்டிமிர்
  • காரோடலமருங்
    கார்வானங் காண்டோறும்
  • நீரோடலம் வருங்
    கண்
  • இனத்த வருங்கலை
    பொங்கப் புனத்த
  • கொடிமயங்கு
    முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
  • யானும் அவரும்
    வருந்தச் சிறுமாலை
  • தானும் புயலும்
    வரும்

திணைமொழி ஐம்பது

  • ஆசிரியர் =
    கண்ணஞ் சேந்தனார்
  • பாடல்கள் = 50
    (5*10=50)
  • திணை = ஐந்து
    அகத்திணைகளும்
  • திணை வைப்பு
    முறை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
  • பாவகை   =
    வெண்பா
  • உள்ளடக்கிய
    பொருள்வகை = அகம்

பெயர்க்காரணம்

  • திணைக்கு பத்து
    பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.

பொதுவான குறிப்புகள்

  • அகத்தினை
    ஐந்திற்கும் தலைக்கு பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாங்களை அமைந்த நூலாததலால்
    திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது.
  • இதில் அமைந்துள்ள
    உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.
  • இசைக்கருவிகள்
    பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
  • இந்நூலில் 46
    பாடல்கள் இன்னிசை வெண்பா ஆகும்.
  • 4 பாடல்கள்
    நேரிசை வெண்பா ஆகும்
  • குறிஞ்சித்
    திணையை முதலாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • சேந்தனாரின்
    தந்தை சாத்தந்தையார் என்பார் சோழன் போரவைக்கொப்பெருனற் கிள்ளியை பாடியவர் என
    உ.வே.சா கூறுகிறார்.
  • திணைமொழி ஐம்பது
    என்பது கண்ணன் சேந்தனார் என்னும் புலவர் பாடிய ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்ட
    நூல்.
  • சங்கம் மருவிய
    காலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கியது
    இது. கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
  • பண்டைத் தமிழ்
    இலக்கியங்களில் காணும் வழக்கிற்கு அமைய அகப்பொருள் இலக்கியமான இது ஐந்து
    நிலத்திணைகளையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
  • இதிலுள்ள ஐம்பது
    பாடல்களும் திணைக்குப் பத்துப்பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.
  • நூலின்
    அனைத்துப் பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
  • நச்சினார்கினியரரால்
    இந்நூலின் சில பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன

முக்கிய அடிகள்

  • அரிபரந்த
    உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
  • தெரிவார்யார்
    தேடும் இடத்து
  • துணிகடல்
    சேர்ப்பான் துறந்தான்கொல் தோழி!
  • தணியும் என்தோள்
    வளை
  • புன்னை
    பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
  • செங்கண்
    குயில்அக வும்போழ்து கண்டும்
  • பொருள்நசை
    உள்ளம் துரப்பத் துறந்தார்
  • வருநசை
    பார்க்கும்என் நெஞ்சு
  • “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ்
    சேராதார்” என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.
  • சொல்ல விழைந்த
    கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான
    பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.

























































































































































































No comments:

Powered by Blogger.